/* ]]> */
Mar 182021
 

புத்தாண்டு பலன்கள்-2021-2022 பிலவ வருஷம்

tamil puththantu

விருச்சிகம் ராசி :

viruchaka-rasi

இந்தப் புத்தாண்டில், குரு பகவான்  நவம்பர் மாதம்   2921 வரை, உங்கள் ராசிக்கு  3-ம் இடத்திலும் அதன் பிறகு 4-மிடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார். சனி பகவான்  3 ல்   சஞ்சரிக்கிறார்.  ராகு 7லும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள்.  இனி பலன்களைப் பார்க்கலாம்.

தற்போதுள்ள குருவின்   3, 4 ஆகிய 2 சஞ்சாரங்களுமே  சிறப்பாக அமையாது. தற்போதுள்ள குருவின்  இந்த  சஞ்சாரங்கள் உங்களுக்கு நற்பலன்களை வழங்க முடியாது. தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் சில சமயம் உங்களுக்கு சாதகமாகவும் முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். பயணங்களில் தொல்லைகள் ஏற்படும். உணவில் ஒவ்வாமை ஏற்படும். . குரு நவம்பர் மாதம் 2021 முதல், 4ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சிலர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.

…            இந்த ஆண்டு  சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்றாக்கிறார். இது மிகவும் அனுகூலமன சஞ்சாரமாகும். அப்போது நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உத்தியோகம், பதவி உயர்வு ஏற்படும்.எல்லாம் முழு நன்மையாகவே நடக்கும். இவரது ஊரில் இவருக்கு தலைமைப் பதவிகள் ஏற்படும். தினமும் பால் சோறும் உய்ர்தர உணவும் வேளை தவறாமல் கிடைக்கும். அஷ்ட லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். இந்த 2 1/2 வருஷமும் பெரிய ராஜயோகமும் , எடுத்த காரியமெல்லாம் வெற்றியடைதலும் கைகூடும். உயர்தர வாகன வகைகளும் ஏற்படும். உடன்பிறப்புக்கு ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆளடிமையும் பணியாட்களும் அமைவர். இருக்க வசதியான வீடும் அமையும். ஒருவர் கோழையாயினும் 3ல் சனியுள்ள இந்த சமயத்தில் வலிமையான பகைவனையும் சீறிப் பாய்ந்து வெல்லும் சிங்கமாக மாறிவிடுவர்.
பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். யானை, குதிரை, எருமை போன்ற வாகன கால்நடைச் செல்வம் ஏற்படும். கார் போன்றவை கிட்டும். எல்லா வகையிலும் கலப்பற்ற பூரண  சுப பலன் சனி 3ல் உள்ளபோது ஒருவருக்கு ஏற்படுகின்றது.
பெண்களுக்கு இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் வகையில் இந்த சனியின் மாற்றம் உங்களுக்கு சாதகமான முறையில் செயல்படும். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விலகி உங்களுக்கும் அவருக்கும் இடையே நெருக்கமும் நல்லிணக்கமும் ஏறப்டும். பிள்ளைகளும் தங்களின் சொற்படி நடந்து உங்களுக்கு நற்பெயரையும் பாராட்டையும் வாங்கித் தருவார்கள். குடும்ப ஒற்றுமை ஓங்கும். மொத்தத்தில் உங்கள் வீடு ஒரு அமைதிப் பூங்காவாகக் காட்சியளிக்கும். சிலருக்கு அலுவலகத்தில் நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். அதேபோல் ஊதிய உயர்வும் பணிமாற்றமும் கிடைக்கும். சிலர் புது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பணிபுரியும் யோகமும் கிட்டும். நெடுனாளாக குழந்தைப்பேறு இன்றித் தவித்த உங்களில் சிலருக்கு அந்த பாக்கியம் எளிதில் கிடைக்கப் பெறும். ஏனெனில் சனிபகவான் உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதியாவதால், இந்த நல்ல விஷயத்திற்கு பெரிதும் உதவுவார்.  இருப்பினும் ராகு கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கும் உங்கள் கணவருக்குமிடையே சில தேவையற்ற வாக்குவாதம் அல்லது சிறுசிறு மனக் கசப்பை ஏற்படுத்தும். இதனால், உங்களுக்கிடையே இருந்த நெருக்கமும் அன்னியோன்னியமும் குறையும். அவ்வப்போது உடல்ரீதியான பாதிப்பு உங்களின் ராசிரீதியாய் உங்கள் கணவருக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ ஏற்பட  இந்த ராகுகேது பெயர்ச்சி ஒரு காரணமாய் அமையும்.

மாணவர்களுக்கு சோதனைகளைக் கடந்து பல சாதனைகளைப் படைக்கும் விதமாக இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு துணை புரியும். தேர்வில் அமோக வெற்றி மற்றும் நீங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து படிக்க இந்த சனியின் சாதகமான நிலை உங்களுக்கு பெரிதும் துணை நிற்கும். உங்களின் ஆர்வம் மற்றும் செயல்திறனைக் கண்டு உங்கள் பெற்றோர்கள், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் வியந்து பாராட்டுவார்கள். இந்த திருப்திகரமான நிலை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இரண்டு மாத காலத்திற்கு நீடிப்பதால், கல்வித் துறையில் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும். மேலும் உங்களுக்கென்று ஒரு தனியிடத்தை மாணவர்களாகிய நீங்கள் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும் உங்கள் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும். இந்த சனிப் பெயர்ச்சி சாதனைகளை நிகழ்த்த வல்லதாக நிகழும் என்பதில் சந்தேகமேயில்லை.

அரசியல்வாதிகளுக்கு சனி பகவானின் மூன்றாமிட மாற்றம் உங்களின் அரசியல் துறையில் உங்களால் முடியாத அதாவது சாத்தியமற்ற பல செயற்கரிய சாதனைகளைச் செய்ய உங்களைத் தயார்படுத்துவார். இதுநாள்வரையில் உங்களுக்கு உங்கள் துறையில் இருந்துவந்த குறுக்கீடுகள் மெல்ல மெலல் மறையும். உங்களை எதிர்த்தவர்களும், உங்களை ஏளனப்படுத்தியவர்களும் உங்களிடம் மண்டியிடுவார்கள். அல்லது தங்களின் வேற்றுமையுணர்வுகளைக் களைந்துவிட்டு அவர்களும் உங்களுடன் சேர்ந்து, உங்களின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பாடுபடுவார்கள். அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கென்று தனிப் பெயரோ அல்லது அந்தஸ்தோ கிடைக்க இந்த சனிபகவான் பெரிதும் துணை புரிவார். புகழோடு, பணமும் அந்தஸ்தும் கௌரவமும் உங்களை வந்தடையும். இந்த இரண்டு ஆண்டு இரண்டு மாத காலத்திற்குள் உங்கள் துறையில் நீங்கள் நினைத்த எல்லாவற்றையும் நடத்திக்காட்ட உங்களால் கண்டிப்பாக முடியும்.

தற்போது  சனி உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது அனுகூலமன சஞ்சாரமாகும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உத்தியோகம், பதவி உயர்வு ஏற்படும்.எல்லாம் முழு நன்மையாகவே நடக்கும். இவரது ஊரில் இவருக்கு தலைமைப் பதவிகள் ஏற்படும். தினமும் பால் சோறும் உய்ர்தர உணவும் வேளை தவறாமல் கிடைக்கும். அஷ்ட லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். பெரிய ராஜயோகமும் , எடுத்த காரியமெல்லாம் வெற்றியடைதலும் கைகூடும். உயர்தர வாகன வகைகளும் ஏற்படும். உடன்பிறப்புக்கு ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆளடிமையும் பணியாட்களும் அமைவர். இருக்க வசதியான வீடும் அமையும். ஒருவர் கோழையாயினும் 3 ல் சனியுள்ள இந்த சமயத்தில் வலிமையான பகைவனையும் சீறிப் பாய்ந்து வெல்லும் சிங்கமாக மாறிவிடுவர். பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். யானை, குதிரை, எருமை போன்ற வாகன கால்நடைச் செல்வம் ஏற்படும். கார் போன்றவை கிட்டும். எல்லா வகையிலும் கலப்பற்ற பூரண  சுப பலன் சனி 3ல் உள்ளபோது ஒருவருக்கு ஏற்படுகின்றது.

ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்துக்கும்  கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய நண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.

உங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.
உங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.
மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும்.

உங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏற்படும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்திக்கு கொணடக்கடலை மாலை  அணிவித்து வழிபடவும்.   ராகு  பரிகாரமாக துர்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். கேது பரிகாரமாக வினாயகரை வணங்கி, கோவிலை சுத்தம் செய்யவும்.

[ உங்கள் சொந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் ரூ. 950/- செலுத்தி, www.moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>