/* ]]> */
Mar 182021
 

புத்தாண்டு பலன்கள்:  2021- 20-22:

tamil puththantu

ரிஷப ராசி  :

rishaba-rasi

இந்த வருடம் குருபகவான்  2021 நவம்பர்   மாதம்  வரை, 9-லும்  அதன் பிறகு 10-ம் இடத்துக்கும் போகிறார். ஆண்டின் முற்பகுதி உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும்.  சனி பகவான் இந்த ஆண்டில்  9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.ராகு உங்கள் ராசியிலும் கேது ராசிக்கு 7லும் சஞ்சரிக்கிறார்கள்.

2021 நவம்பர் வரை, குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் டகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது உங்கள் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம்   இந்த வருடம் நற்பலன்களை அள்ளித் தரும். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள் .பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும்.

குரு 10-ம் இடத்துக்கு வரும்போது பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம். தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த வேண்டும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில்லாத  இடமாற்றங்கள் வரும். நஷ்டமும் பெருத்த செலவுகளும் உண்டாகும்.

சனியின் 9-ம் இடத்து சஞ்சாரம்  எப்படி  இருக்கும் என்று பார்க்கலாம். இந்தவருடம், வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாலை கிடைக்காத்வர்களுக்கு மாலை கிடைக்கும். மழலை கிடைக்காதவர்களுக்கும் மழலை கிடைக்கும். சகோதரர்கள் அடிக்கடி உங்களுக்கு பிரச்சினை கொடுத்தாலும், முடிவில் உங்கள் கருத்துக்கு ஒத்துவருவார்கள். தொழில்ரீதியாக உடன்பிறப்புடன் சேர்ந்து செய்து வந்த கூட்டு வியாபாரம் இப்போது  உங்கள் உடன்பிறப்பு உங்களை விட்டுப் பிரிவதால் பின்னடைவை சந்திக்க விடாமல் தக்க ஒருவரின் துணையோடு எடுத்து நடத்தி செயல்படக்கூடிய நிலை உருவாகும். எதிரிகள் சரணடைவர். இல்லம் தேடி நல்ல செய்தி வரும். உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு குறிப்பிட்டபடி வந்து சேரும். வங்கிக் கடன் பெற்று சுய தொழில் செய்வீர்கள். பொருளாதாரப் பிரச்சினை அகலும். பொருள் வளர்ச்சி கூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வுகள், வியாபாரத்தில் நல்ல பணவரவு ,தொழிலுக்காக வெளியூர்- வெளிநாடு செல்லுதல் என்று நல்ல பலன்கள் கூடிவரும். படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருபவர்களுக்கு ந்ல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பிரச்சினையால் பிரிந்து வாழும் தம்பதியரை அவர்களது குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சேர்த்து வைப்பார்கள். மகன்-மகள் திருமணம் சிறப்பாக நடைபெறும் யோகம் வந்துவிட்டது. பூர்வீகச் சொத்து குடும்ப உறவுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்துவந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வந்து கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வரும். மூட்டு வலி , மூச்சிறைப்பு ,சர்க்கரை நோய் , நெஞ்சுவலி , ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களிலிருந்து மீண்டு ஆரோக்கியம் பெறுவீர்கள். விவசாயம் செய்பவர்கள் பெருத்த லாபத்தை ஈட்டுவார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதில் சிறந்த விருத்தி வந்து சேரும்.ஆரோக்கியம் பெறுவார்கள். மிகப் பெரிய நல்ல மாற்றங்கள், அதிர்ஷ்ட திருப்பங்கள் மீண்டும் தலையெடுக்கப்போகிறது. விட்ட கோட்டையை மீண்டும் பிடித்தே தீருவீர்கள். தோல்விமேல் தோல்வி ஏற்பட்டு மிகுந்த கவலையில் இருந்த நீங்கள் இப்போது வெற்றிமேல் வெற்றியைக் குவிக்கப் போகிறீர்கள். கவலை ஏற்படுத்திய கடன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். சொத்துக்கள் குவியும். இப்படிப்பட்ட நல்ல நேரத்தை உபயோகித்துக்கொள்வீர்கள். நீங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வராமல் நின்றுபோன பணம் தற்போது வந்து சேரும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். தொழிலில் இருந்துவரும் பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் இருந்துவரும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணத்தால் நன்மை கிடைக்கும்.  இப்படியாக சனிபகவானின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்மைகளைக் கொடுக்கும். குருவின் சஞ்சாரம் சரியில்லாவிட்டாலும், சனி குரு பார்வை பெறுவதால் நல்ல பலன்களையே கொடுப்பார்
கணவரிடமோ அல்லது அவரது உறவினரிடமோ அதிக வாக்குவாதத்தை அல்லது பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. புகுந்த வீட்டில் வசிக்கும்போது உங்கள் மாமியார், மாமனார் அல்லது  நாத்தனார்  போன்றோருடன் காரசாரமான சண்டைக்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது காட்டாமல் விட்டுக்கொடுத்துப்போகும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், அதனால் பின்னால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலம். கெட்ட பெயரும் தலைகாட்டாது.. உங்களில் சிலருக்கு திடீர் கல்யாணம் அல்லது கலாட்டா கல்யாணம் என்ற அமைப்பில் அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்து திருமணம் இனிதே நடந்தேறும்.

மாணவர்களுக்கு வீட்டு சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு, கல்வியில் போதிய ஆர்வத்தை குறைத்துக்கொள்ள இந்த நேரமானது அமைகிறது. சனியின் தாக்குதலில் ஆரம்ப காலம் உங்களைப் பெரிய அளவில் பாதிக்காது    அதன் பிறகு, மேற்கூறிய பாதிப்புகள் கடுமையாகவே காணப்படுகிறது.பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் ஆசிரியர்களும், உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளும் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் உங்கள் மன பாதிப்பால் எடுப்பார் கைப்பிள்ளையாக யார் என்ன சொன்னாலும் அதை நம்பும் விதமாக அப்படியே செயல்படுவீர்கள். உங்கள் சொந்த புத்தியைக்கூட சில சமயம் அடகு வத்துவிடுவீர்கள். எனவே யோசித்து சற்று நிதானித்து செயல்பட்டு, படிப்பில் கருத்தூன்றி  படித்தால் படிப்பில் பாதிக்குமேல் வெற்றி கிட்டும். அரசியல்வாதிகளுக்கு பத்தாமிட சனியின் ஆரம்ப காலம் பெரிய அளவில் பாதிக்காதவண்ணம் வரும் ஆண்டு ஜூலை மாதம் முதல் குருவின் சஞ்சாரம் உங்களுக்கு துணை நிற்கிறது. இதன் காரணமாக உங்களின் சொல்வாக்கு மற்றும் செல்வாக்கு போன்றவை ஓராண்டு காலத்துக்கு ந்ல்லவிதமாக செயல்படும். அதன்பிறகு சனியின் 9-மிட சஞ்சாரம் முடியும்வரை உங்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக உங்களின் கீழ் உள்ளவர்களின் செயல்கள் தலை விரித்தாடும். மேலும் உங்களிடம் நெருங்கிப் பழகும் உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தாங்கியே தீர வேண்டும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை இழக்க நேரலாம். இதற்கு உங்கள் ராசிக்கு ராகு கேது தீய சஞ்சாரமும் ஒருவகையில் காரணமாய் அமையும். வீட்டு விஷயங்களில்கூட சிலருக்கு சில துரோகச் செயல்கள் தலை விரித்தாடும். அதை சர்க்கட்ட முயற்சிகள் மேற்கொள்வதைக் காட்டிலும் அவற்றைக் கண்டும் காணாமல் விடுவதே உங்களுக்கு நல்லது.

மேலும்  சனியின் 9-மிட சஞ்சாரம் முடியும்வரை நீங்கள் அடிக்கடி பணப்பற்றாக்குறையைச் சந்திக்க நேரும். எந்த பரிகாரமும் கை கொடுக்காது. ஆனால், தற்போதைய குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வடயதானவ்ர்களுக்கு உடல் நல்ம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் இல்லாமல் போய், குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே  எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும் சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள்  தகுதிக்கு தகுந்த வேலை அமையாமல், தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.. உடல்நலத்தில் கவனம் தேவை. கடுமையான நோய் பாதிப்புகள் இல்லையென்றாலும், அலர்ஜி, தோல் நோய்கள் போனறவை ஏற்படும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களை தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட  தாய்  அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும்

ராகு  உங்கள்  ராசியிலும், கேது  ராசிக்கு 7லும்  சஞ்சரிக்கிறார்கள். இப்படியாக ஜென்ம ராசியில் அமர்ந்துவிட்ட ராகு, தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 3-மிடமான விருச்சிகத்தையும், தனது 11ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடத்தையும் பார்வையிடுகிறார்

. அதுபோல உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் அமர்ந்துள்ள கேதுபகவான், தனது 3 ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்தையும் பார்வையிடுகிறார்.
இது உங்களுக்கு சிறப்பான காலக் கட்டம் அல்ல. காரணமேயில்லாமல் அலைச்சல் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும். என்னவிதமான உடல்பாதிப்பு என்றும், என்ன வியாதியால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரிய நோயாக படுத்தும். சிலருக்கு நுண்கிருமிகள் மூலம் விஷக் காய்ச்சல், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்படலாம்.
அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கும். ஆனால் அந்தப் பயணங்களால் எந்தப் பயனுமின்றி தேவையற்ற பயணங்களாக இருக்கும்.நீங்கள் மிகப் பெரிய அறிவாளியாக இருந்தாலும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும் இப்போது உங்கள் அறிவோ புத்திசாலித்தனமோ உங்களுக்கு கைகொடுக்காது. என்ன செய்யப்போகிறோம் என்ற மனக்குழப்பம் தீராமல் தவிப்பீர்கள். நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவதாகவே இருக்கும். எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உங்களால் தீர்க்க முடியாமல் போகும். தீர்வும் முடிவும் சரியாக எடுக்க முடியாமல் போகும். வருமானம் குறையும். தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் சிக்கலாகும். விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். கட்டுப்படுத்த முடியாது. இந்தக்காலக்கட்டத்தில் வேற்று மதத்தினரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கவேண்டாம். அவர்களால் ஆபத்து நேரும். சிலருக்கு வேற்று மதத்தினருடன் கூட்டுவியாபாரம் செய்யும் வாய்ப்பு தானாகவே அமையும். புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து கஷ்டப்படுவீர்கள்.
இந்தக் காலக் கட்டத்தில் தற்போது உள்ள நிலையிலேயே இருக்கலாமே தவிர புது முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். புதிய தொழில் தொடங்கினால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரும். சிலர் புதிய தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அந்தத் தொழிலைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சிலர் இருக்கும் வீட்டைவிட்டு வேறு வீட்டிற்கு மாறவேண்டிய சுழ்நிலை ஏற்படும். தங்களுடைய தொழில் ஸ்தாபனங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு தங்கள் தொழிலையே இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிலும் அமைதி இருக்காது. சக ஊழியர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் தொடர்ந்து,குறைகாண்பார்கள். உங்களுக்கு வேலைப்பளுவையும் அதிகப்படுத்தி தொந்தரவுகளை ஏறப்டுத்துவார்கள். மனக் கவலையில் ஏதாவது பேசிவிட்டீர்களானால், மிகவும் கஷ்டமான பணிக்கு மாற்றப்படுவீர்கள். அல்லது விருப்பமில்லாத இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்படுவீர்கள். அந்த இடமாற்றமும்கூட திடீரென அறிவிக்கப்பட்டு உங்களைத் திண்டாட வைக்கும். நேரான வழியில் நடந்து கஷ்டப்படுவதால், குறுக்கு வழியைத் தேடுவீர்கள். ஆனால், அந்தக் குறுக்கு வழியே உங்களுக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்துவிடும். அதிலிருந்து தப்பிக்கவும் தொடர்ந்து தவறான வழியையே தேர்ந்தெடுப்பீர்கள். கடைசியில் எதுவும் முடியாமல், போட்டியாளர்களிடமே அவமானப்படநேரும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு 3ம் இடத்தைப் பார்ப்பதால்,உங்கள் சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடுகள் விரோதங்கள் ஏற்படும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு பிரச்சினைகள் ஏறப்டும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும். உங்கள் எதிரிகள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களைக் கவிழ்த்துவிடுவார்கள். யாருடனும் பழகுவதற்கு முன்னால் அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்தகொண்டு பழகாமல் பழகியபின் அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்படுவீர்கள். சாதாரண செயலில்கூட தடைகள், இடைஞ்சல்கள் ஏற்படும். வீண் அலைச்சல்கள் பயனற்ற பயணங்கள் ஏற்படும்.குடும்பத்தில் ஒருவருடைய நிலை மிகவும் கலைக்கிடமாகும். குடும்பத்தாரின் உடல்நிலை மருத்துவச் செலவைக் கொடுக்கும். சில குடும்பங்களில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வறுமை, உணவுக்கே வழி இல்லாத நிலைகூட சிலருக்கு உருவாகலாம்.
கேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கைத் துணையின் உடல்நிலையைப் பாதிக்கும். நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகாவிட்டால் நட்பு பகையாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியுடன் ரொம்பவும் அனுசரித்துப் போகாவிட்டால், கூட்டுத் தொழில் நசித்துப்போகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். எந்த விஷயத்தையும் சிந்தித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் போகும். சிலர் சட்ட விரோதமான நூதனமான தொழிலை மேற்கொண்டு அதன் காரணமாக மோசம் போவார்கள். அல்லது அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவார்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்தக் காலத்தில் கேதுபகவான உங்கள் ராசிக்கு 5ம் இடமான கும்பத்தையும் 9ம் இடமாகிய மிதுனத்தையும் பார்வையிடுகிறார். இதனால் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் மனக்கவலை ஏற்படும். பூர்வீகச் சொத்தில் விவகாரங்கள் ஏற்படும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வருமானம் குறையும். விஷ ஜந்துக்களால் தீமை ஏற்படும். உறவுகள் பகையாகும். உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். இந்த சமயத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும். யாருடனும் புதிதாகப் பழகவேண்டாம். புதிய நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும்.

பரிகாரம்:

வெள்ளிக் கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபடவும்.  கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வது போன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.  குரு பகவான் ஆண்டின்  முற்பகுதியில், சரியான சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும். சனிக் கிழமைகளில், சனீஸ்வரனின் ஆல்யம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிபடவும்.

இந்த  ஆண்டு உங்களுக்கு யோகமாக வாழ்த்துக்கள்!.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் ஜாதகத்துக்குரிய விரிவான பலன்லளை ரூ. 950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>