/* ]]> */
Mar 222019
 

புத்தாண்டு பலன்கள்-2019-2020  விராகி வருஷம் :

புத்தாண்டு பலன்கள்

கடக ராசி:

கடகம் ராசி

கடகம் ராசி

இந்த வருடம் சனி பகவான் 2020 ஜனவரி வரை  உங்கள் ராசிக்கு 6-மிடத்திலும் அதன் பிறகு  7-மிடத்திலும் சஞ்சரித்து, கெண்டகச் சனியாக சஞ்சரிக்கிறார். வருகிற  அக்டோபர்  மாதம்  வருகிற குருப் பெயர்ச்சி வ்ரையில், குரு பகவான்  உங்கள் ராசிக்கு 5-மிடத்திலும் அதன் பிறகு 6-மிடத்திலும்  சஞ்சரிக்கிறார்.  ராகு உங்கள் ராசிக்கு 12-லும் கேது  6-லும் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

இதுவரை  6-மிட சஞ்சாரத்தின்போது நற்பலன்களைத் தந்து கொண்டிருக்கும் சனி பகவான், 7-மிட சஞ்சாரத்தின்போது,   நற்பலன்களைத் தரமாட்டார். ஏதாவது வகையில் கஷ்டம்,  மனைவிக்கு மாரக பயம் உண்டாகும். உங்களுக்கு பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்படும். சேமித்த சேமிப்பு அழியும். தான் இருக்கும் இடத்தைவிட்டு விருப்பத்துக்கு மாறாக வேறு இடத்துக்குப் போக வேண்டி வரும். பயணம் செய்யும்போது வழியில் விபத்துப் பயம் ஏற்படும். கால்நடைச் செல்வம் பாழாகும். வேலையாட்கள், பணியாட்கள் விட்டுப் பிரிவர். மான , கௌரவ பங்கமும் , பதவி நாசமும் ஏற்படலாம். தீராத தலை நோய் ஏற்படும் . சுமையும் தூக்கிப் பிழைக்க வேண்டியதுகூட வரும்.

சரீரத்தில் ஏதாவது தோஷம், நோய் இருந்துகொண்டே இருக்கும். கெட்ட நடத்தையால், பெயர் கெடும். உடல் நலமும் கெடும். காரணமற்ற, குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படும். மனத்தில், ஏதாவது பயம், திகில் இருந்துகொண்டே இருக்கும். சோகம், உறவினர் மறைவு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். பெரும் பசி காணும். மிகக் கீழ் நிலையில், அன்றாடப் பிழைப்புக்குக்கூட வழியின்றிப் பிறரிடத்தில் கையேந்த வேண்டியது வரும்.  ’ கண்டகச்  சனி’  அசுப பலன்களைக் கொஞ்சம் அதிகமாகவே தருகின்றார். இருக்க இடமின்றி, ஒரு குறிக்கோளின்றி, பல இடத்திலும் அலைந்துகொண்டே இருப்பார். இது சமயம் வெளிதேச வாசமும் இவருக்கு ஏற்படும். ஆனால், அங்கும் இவருக்குப் பலவித கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். 7-ல் சனி எல்லா வகையிலும் அசுப பலன்களையே தருகின்றார்.
அரசியல்வாதிகளுக்கு  இந்த சனி பகவானின் ஏழாமிட மாற்றம் உங்களது நீண்ட நாள் ஆசைக்கு அல்லது உங்களின் நியாயமான ஆசைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும். உங்களது வெற்றிப் பாதைக்கு சில தடைக் கற்களை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு அவ்வப்போது தடைகளும் பிரச்சினைகளும் தோன்றி மறையும். உங்களுக்குக் கீழ் உள்ள தொண்டர்கள் உங்களை எதிர்த்துக்கொண்டு, எதிரியின் கூடாரத்துக்கு மாறக்கூடும். உங்களுடைய தலைமை உங்களை முக்கியமில்லாத இடத்துக்கு மாற்றக்கூடும்.
மாணவரகள் வீட்டிலுள்ள பெரியவர்களின் சொல்படி நடந்தால், பிறர் உங்களைக் குறைகூறும் அளவிற்கு அல்லாமல் ஓரளவு நற்பெயர் எடுக்க முடியும். பொதுவாக உங்கள் ராசிக்கு 7-மிடத்திற்கு வரும் சனிபகவானின் 10 -ம் பார்வை வித்யா ஸ்தானமான 4-ம் இடத்தில் விழுவதால், உங்களது முழு ஆற்றலைக் குலைக்கும். இதற்கு சிகரம் வைத்தாற்போல , நீங்கள் கல்வி விஷயத்தில் என்னதான் சாதிக்க நினைத்தாலும், , குரு மற்றும் ராகுவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், உங்களின் முயற்சிகள் தோல்வியைத் தழுவும். இதனால், பிறரின் ஏளனத்திற்கும், பரிகாசத்திற்கும் ஆளாக நேரும். எனவே மிகவும் கவனத்துடன் செயல்படவும். தன்னம்பிக்கையோடு, கடவுள் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு  இந்த 7-மிட சஞ்சாரம் உங்களது குடும்ப வாழ்வில் சிற்சில சோதனைகளைத் தர உள்ளார். ஏழாமிடம் கணவரைக் குறிப்பிடும் இடமாதலால், கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதோடு, மூன்றாம் நபர் தலையீடு இருக்கும். மாமியார், மாமனார்,மைத்துனர், நாத்தனார் போண்றோரின் தலையீடு ஏறபட்டு, உங்களது அமைதியான குடும்ப வாழ்வில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும். மேலும் இந்த ஏழாமிடம் மாரக ஸ்தானம் என்பதால், உங்களுக்கோ அல்லது உங்கள் கணவருக்கோ சிற்சில உடல் உபாதைகளும் கண்டங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்களாகவே வலிய சென்று வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பிரச்சினைகள தரும் நபர்கள் அல்லது பிரச்சினை தரும் விஷயங்களை விலக்குவது நல்லது. அதேபோல நீங்கள் உங்கள் பங்கிற்கு வம்பு வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். வீண் வாதம் அல்லது தர்க்க வாதம் அல்லது கடுஞ்சொல் போன்றவற்றை உபயோகிக்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
சனியின் அசுப பலன்களால் அல்லல்படும் உங்களுக்கு, குருவின் 5-மிட சஞ்சாரம் ஆறுதல் தரும்.

குருவின் 5-மிட சஞ்சாரத்தால், நீங்கள் அனுபவித்து வரும்   சனியின் தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு சற்றே ஆறுதல் கிடைக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும்  வேதனைகளும்  இருந்து வந்த நிலை மாறி,  செப்டம்பர் மாதம் வரை  நல்ல காலம் நடக்கும்.  குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள்  ராசிக்கு 9-ம் இடத்தையும்,   7-ம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு 11-ம் இடத்தையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய   ராசியையும்   பார்வையிடுகிறார். இதன் காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.  உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.  இதுவரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் தடை நீங்கும். .

குருவின் 5-மிட சஞ்சாரத்தினால் ஓரளவுக்கு நற்பலன்கள் ஏறப்ட்டன. இவை இந்த வருடம்   அக்டோபர்   மாதம் முடிவடைந்து  குருவின் சாதகமற்ற சஞ்சாரமான  6-மிட சஞ்சாரம்  ஆரம்பமகிறது.  சனி, மற்றும் குருவின் சஞ்சாரங்கள் உங்களுக்கு  உகந்தது அல்ல. குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாகி, உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள்  என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும்.  திருமணத் தடை ஏற்படும். உயர் கல்வியில் சேர இருந்தவர்களுக்கு, பண முடை காரணமாகவோ அல்லது, வேறு குடும்பக் காரணங்களுக்காகவோ  கல்வியில் தடை ஏற்படும். ஆரோக்கியம் கெடும். மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்துகொள்ள நேரும்.  வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகி வருமானம் குறைய ஆரம்பிக்கும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போகும். பூர்வீகச் சொத்தில் இழுபறி ஏற்படும். பிளைகளின் வேலைவாய்ப்பு, கல்வி முதலியவற்றில் தடை ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் சனி, ராகுவின் சாதகமற்ற சஞ்சாரங்களும் சேர்ந்து கொள்கின்றன.

குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், இந்த சமயத்தில், வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நல்ம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயற்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு  திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் ,காரணமாக  உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளிடமிருந்து தொல்லைகள்  ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன்  நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.
நிகழும் திசாபுத்திப்படி அவரவர்க்கு பலன்கள் மாறுபடும் என்பதால், சுய ஜாதகத்தையும் பரிசீலித்துக்கொள்ளவும்.

ராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். உங்ககளுடைய பயணங்கள் அனைத்தும் பெரும்பாலும் வியாபார சம்பந்தமாகவோ அல்லது உத்தியோக சம்பந்தமாகவோதான் இருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குள்ளாகி ,பிறகு நீங்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏறப்டும். சிலருக்கு அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் விரயச் செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்கள் அளவுக்கு மீறிய செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைத்துள்ளதால், விரயத்தில் உள்ள ராகுபகவான், ஏதாவது ஒரு நல்ல காரியத்தை நடத்தி வைத்து, அதன்மூலம் சுப விரயச் செலவுகளை ஏற்படுத்துவார்.
ராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. ராகுபகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களால் நாணயத்துடன் நடந்துகொள்ளமுடியாமல் போகும். அது மட்டுமின்றி உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிப்படையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் சிடுசிடுப்பு இருக்கும். கண்கள் சம்பந்தமான நோய் ஏற்படும். தேவையில்லாத அபவாதம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். கணவன்-மணைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதுக்கு கவலையளிக்கும்.
கேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும். உங்கள் ராசிக்கு குரு பகவானின் நற்பலன்களும் கூடுவதால், ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். சிலர் நூதனமான பொருள் விற்பனை மூலம் நல்ல லாபம் காண்பார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். புதிய பட்டம் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வளர்ச்சி காண்பீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதுவரை நிலவிவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.
அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை தனது 3ம் பார்வையால் பார்ப்பதால், இதுவரை தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் யாவும் அமுங்கிப்போகும். வேலைப்பளு அதிகமாகும். ஆனால் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தைப் பார்வையிடுவ்தால் தாயாரின் உடல்நலம் சிறக்கும். தாய்வழி உறவினர்கன் உதவி கிட்டும். சிலர் புதிய வண்டி வாகனத்தை வாங்குவார்கள். சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ராகுவின் கெடு பலன்கள் குறையும்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மலர்கள் மற்றும் கொணட்க்கடலை மாலையிட்டு வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர் கொண்டு வணங்கவும். வினாயகரை வணங்கி, அவர் கோவிலை சுத்தம் செய்யவும்.
###################
[ ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>