/* ]]> */
Mar 222019
 

புத்தாண்டு பலன்கள் -2019-2020 விராகி   வருஷம்:

புத்தாண்டு பலன்கள்

துலா ராசி:

துலாம் ராசி

துலாம் ராசி

வருகிற  அக்டோபர்   மாதம் வரை ராசிக்கு 2-மிடத்திலும்  அத்ன் பிறகு  வருகிற  குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான்  உங்கள் ராசிக்கு   3-ம்  இடத்திலும்  சஞ்சரிக்கிறார். சனி ஜனவரி 2020 வரை  ராசிக்கு ,3 -ம் இடத்திலும் அதன் பின்பு    4 -ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்.  ராகு உங்கள்  9-ம் இடத்திலும், கேது  3-லும்  சஞ்சரிக்கிறார்கள்.

தற்போது உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில்  சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நறப்லன்களை அள்ளித் தருகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள்  ராசிக்கு 6-ம் இடத்தையும்,   7-ம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு 8-ம் இடத்தையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய   ராசிக்கு 10-மிடத்தையும்   பார்வையிடுகிறார். இதன் காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.
இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

இனி  குருவின் 3-மிட சஞ்சரத்தால் நிகழப்போகும் நிகழப்போகும் கெடு பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம்  பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு , அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.
பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு [ப்ஏசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.
எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும்.  இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்தும்
நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது. சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும்.

தற்போது  சனி உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது அனுகூலமன சஞ்சாரமாகும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உத்தியோகம், பதவி உயர்வு ஏற்படும்.எல்லாம் முழு நன்மையாகவே நடக்கும். இவரது ஊரில் இவருக்கு தலைமைப் பதவிகள் ஏற்படும். தினமும் பால் சோறும் உய்ர்தர உணவும் வேளை தவறாமல் கிடைக்கும். அஷ்ட லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். பெரிய ராஜயோகமும் , எடுத்த காரியமெல்லாம் வெற்றியடைதலும் கைகூடும். உயர்தர வாகன வகைகளும் ஏற்படும். உடன்பிறப்புக்கு ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆளடிமையும் பணியாட்களும் அமைவர். இருக்க வசதியான வீடும் அமையும். ஒருவர் கோழையாயினும் 3ல் சனியுள்ள இந்த சமயத்தில் வலிமையான பகைவனையும் சீறிப் பாய்ந்து வெல்லும் சிங்கமாக மாறிவிடுவர். பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். யானை, குதிரை, எருமை போன்ற வாகன கால்நடைச் செல்வம் ஏற்படும். கார் போன்றவை கிட்டும். எல்லா வகையிலும் கலப்பற்ற பூரண  சுப பலன் சனி 3ல் உள்ளபோது ஒருவருக்கு ஏற்படுகின்றது.

ஜனவரி மாதம் 2020ம் வருடம் சனி 4ல் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்லதல்ல.. இது அர்த்தாஷ்டம சனி என வழங்கப்படும்.

இச்சமயம் அரசாங்கத்தால் கெடுபிடியும் பகையும் ஏற்படும். கால்நடைகள் பாழாகும். முன் சேர்த்து வைத்த பணம் அழியும். வீட்டை, நாட்டை விட்டு எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு, வெளியூர்களுக்கு செல்லவேண்டியது வரும்.
மாரக தசை நடந்தால், உயிருக்கும் கண்டம் ஏற்படலாம். வீடு போன்ற சொத்துக்களும் கை நழுவும். மனைவியுடன் பகையும், பிரிவும் ஏற்படும். பந்து ஜனங்களை விரோதம் பண்ணிக்கொள்ள நேரும்.
ஏதாவது துக்கத்தால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பர். வாத நோய், கீல்வாதம் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். கால் இழுத்துக்கொண்டு, ஒரு கால் முடமாகவும் நேரலாம். நாய்க் கடித் தொல்லை, மாடு முட்டல் போன்ற இன்னல்களும் ஏற்படும். மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும்.
மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும். இவருக்கே கண்டம் தரித்திரம் மேலிடும். சுகம், சௌக்கியம், தூக்கம் எல்லாம் கெடும். மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மானம், மரியாதை கௌரவம் எல்லாம் பறிபோகும். நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி வீடு வாசலின்றி , இவர் அலையலாம். எதிலும் பயமும் தயக்கமும் ஏற்படும். வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டு , அங்கேயே தவிக்க வேண்டியது வரும்.பகைவரும் வேண்டாதவர்களாலும் மிகுதியான தொல்லை ஏற்படலாம். தனக்கு எப்பொழுதும் கெட்டதே நேரும் என்ற உள்ளுணர்வும் இருந்துகொண்டே இருக்கும். குதர்க்க புத்தியும் , கெட்ட சிந்தையும் இருந்துகொண்டே இருக்கும். ஆக, இந்த சனி, மிகுதியான கெடு பலன்களையே தரும்.
சனி பகவான் உங்கள் 4-ம் வீட்டில் பிரவேசிப்பதால், உங்களுக்கு இதுவரை கிடைத்துவந்த நற்பலன்கள் யாவும் தடைப்பட்டுப் போகும். பொதுவாகவே உங்களுக்கு இத்தகைய சனியின் பாதிப்பு, சனியின் மாற்றத்தின் மூலம் ஏற்பட்டதுமே, பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட ஆரம்பிக்கும்.

இந்த காலக் கட்டத்தில் குடும்ப ஒற்றுமை குறைவதோடு, கணவன்-மனைவியின் உறவில் மூன்றாம் நபரின் தலையீடு மற்றும் மூன்றாம் நபரின் தூண்டுதலின் மூலமாக கருத்து வேறுபாடுகள் மற்றும் சிறு பிரிவினைகளுக்கும்கூட வழி ஏற்படலாம். எனவே இந்தக் காலக்கட்டத்தில், தெய்வ பக்தியை வளர்த்துக்கொண்டு , யாரிடமும் அதிகம் பேசுவதையும், அதிகம் பழகுவதையும் அல்லது குடும்ப விஷயங்களை அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதையோ குறைத்துக்கொள்வது நல்லது. இல்லையேல்  பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள நேரும். பொதுவாக இந்த 4-மிட சனிப் பெயர்ச்சி 50 சதவிகிதத்துக்கு மேல் உங்களுக்குப் பாதிப்புகளைத் தருவதாக உள்ளது.
மாணவர்களுக்கு மனக் குழபப்மும், தெளிவற்ற நிலையும் சில அதிருப்தியான சூழ்நிலையுமே, இந்த சனிப்பெயர்ச்சியில் மாணவர்களாகிய் உங்களுக்கு ஏற்படும். கல்வி ஸ்தானமான 4-மிடத்தில் இந்தசனி பகவான் சஞ்சரிக்கப் போவதால், ஞாபக மறதியும் கல்வியில் ஆர்வமின்மையும் ஏற்படும். மேலும் பெற்றவர்களுக்கு மனக் கவலையும் ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் இடையே சிறுசிறு அதிருப்தியான நிலையும் ஏற்படலாம். இத்தகைய பாதிப்பு, தற்போது முதல், வரும் ஆண்டு, அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிய காணப்படும். அதன்பிறகு, இத்தகைய பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கி ஓரளவு நல்ல பலன்கள் அல்லது ஏற்றமான நிலை உருவாகலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் உங்களின் உழைப்பு மற்றும் முயற்சி போன்றவை சிலருக்கு கேலிக்கூத்தாகத் தென்படும். இதனால் அவப் பெயரும் மனத் தளர்ச்சியும் அவ்வப்போது ஏறப்டும். தெய்வ நம்பிக்கையையும் பக்தியையும் நீங்க்ள் வளர்த்துக்கொள்வதோடு தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி, உங்களின் அரசியல் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவாது. அதேபோல பொருளாதார உயர்வையும் ஏற்படுத்தாது.  உங்களுக்கு ம்னவேதனையும் மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலனிலும் நீங்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும். இருப்பினும் குருவின் இரண்டாமிட மாற்றத்திற்குப் பின் இந்த சனியின் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். உங்களின் அரசியல் பயணம் எப்போதும்போல் பிரச்சினைகள் இன்றி ஓரளவு சுமுகமாய்ச் செல்லும்.  தற்போது  நீங்கள் எவ்வளவுதான் நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் உங்களின் உழைப்பு வேலிக்கு இரைத்த நீராகத்தான் போகும். மேலும் உடல் அசதியும் மன உளைச்சலுமே மிஞ்சும். வீட்டு விஷயத்திலும் சற்று கவனத்துடனும் பொறுமையுடனும் நடந்துகொள்வது நல்லது. குடும்ப வாழ்வில் சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். சில மானக்கேடான சம்பவங்களும் தங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. பொதுவாகவே இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமனதல்ல.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மிதுன  ராசிக்கும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான  தனுசு  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.   இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகமானவைகள்தான். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளோருடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டு சிலருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் வேற்று இன, மதத்தினரும் வேற்றுமொழி பேசுபவர்களும் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம், நூதனமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு மேன்மை ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு இது ஏற்றமான காலம். ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாகி, வேதாந்த புராண விஷயங்களில் நாட்டம் அதிகமாகும். கோவில் மடாலயம் போன்ற இடங்களில்கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். பெரியோர்கள் , ஞானிகளின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அவர்களால் கொரவிக்கப்படுவீர்கள். சிலர் தீர்த்த யாத்திரை, கோயில் குளங்களுக்கு செல்லுதல் புனிதப் பயணம் போன்ற ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்துக்கள் மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படும். சிலர் தர்ம நியாயங்களுக்கு மாறாக செயல்பட்டு பணம் தேடவும் செய்வார்கள். அதன் காரணமாக அவர்கள் பணமே பிரதானமாய் கேவலமாய் அலையவும் வாய்ப்புண்டு. இந்த நிகழ்வுகள் ஜாதகத்தில் 9-ம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தால் ஏற்படும்.
இந்தக் காலத்தில் உங்கள் எதிரிகளும், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களும்கூட உங்கள் செயல்திறனைக் கண்டு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் . அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏறபடும்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். இதன்பலனாக, தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் மேன்மையடைவர். மூத்த சகோதரர்களால், தக்க உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட நல்ல லாபமும் காரிய சித்தியும் உண்டாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலம் பெறுவார். உடல்நோய் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்.சிலருக்கு நல்ல நணப்ர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக நல்ல காரியங்கள் நடைபெறும். சிலருக்குப் புதிய கூட்டுத் தொழில் உருவாகும். கூட்டுத் தொழில் செய்யும் கூட்டாளிகளுடன் நல்லிணக்கம் ஏர்படும். தொழில் அபிவிருத்தியும் கூடும். உடன் பழகும் நணப்ர்களுக்கு தக்க சமயத்தில் பல உதவிகள் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் கூடும். அதன் காரணமாக வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகமாகும். புத்திர புத்திரிகளால் மேன்மையுண்டாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்புகளும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு அதிகார பதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவர். மனோபலம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விதவைப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தொல்லையில் முடியும். எனவே தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். முயற்சி எதுவுமின்றியேகூட உங்களுக்கு இப்போது வருமானம் வரும். இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே உண்டாகும். சிலர் மத விஷ்யங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அதன்மூலம் பெரும் புகழடைவார்கள். ஆனால், சிலர் அதையே பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்கத் துணிவார்கள். அப்படிப்பட்ட வழிகள் பாதிப்பைத் தரும் என்பதால் அவைகளைத் தவிர்க்கவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கமும் பிரச்சினைகளும் தீரும். பூர்வீகச் சொத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். புத்திர புத்திரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் அவர்கள் நலல் முன்னேற்றத்தை அடைவார்கள். குலதெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். மேலும்,. கேதுபகவான், தனது 11-ம் பார்வையினால் உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் மனோபலம் கூடும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அது விலகிவிடும். சாதனை வீரராக வலம் வருவீர்கள்.
கேது பகவானின் 3-ம் இட சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல காலத்தின் தொடக்கம் ஆகும். இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த தொல்லை, துயரம் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த நோய் நீங்கி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணம் பல வழிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கும். செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு. கவனத்துடன் இருந்தால் உன்னத நிலையை அடைய முடியும். நல்ல நண்பர்களும் உங்களது நலம் விரும்பிகளும் உங்களுக்கு தக்க சமயத்தில் தக்க ஆலோசனைகளைச் சொல்லி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிறையும்.:

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்திக்கு கொணடக்கடலை மாலை  அணிவித்து வழிபடவும்.  சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிப டவும். ராகு  பரிகாரமாக துர்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். கேது பரிகாரமாக வினாயகரை வணங்கி, கோவிலை சுத்தம் செய்யவும்.

[ உங்கள் சொந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் ரூ. 950/- செலுத்தி, www.moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>