/* ]]> */
Apr 122018
 

புத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி  வருஷம்:

tamil puththantu

மீன ராசி:

meenam-rasi

இந்த வருடம் செப்டம்பர்   மாதம்  வரை, குருபகவான்  உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும் அதன் பின்னர் 9-லும்  சஞ்சரிக்கப் போகிறார். மற்றபடி சனி பகவானின் சஞ்சாரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இப்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு இந்த ஆண்டில்  10- ம் இடத்தில் சஞ்சரிப்பது அசுப  பலன்களைத் தரும். மேலும்  ராகு உங்கள் ராசிக்கு 5-லும், கேது உங்கள்  11-ம்  ராசியிலும், சஞ்சரிக்கிறார்கள். .

இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
செப்டம்பர்  மாதம் வரை  குருபகவானின் 8-மிடத்து சஞ்சாரத்தின் அனுகூலமற்ற நிலைகளைப் பார்க்கலாம். உங்கள் மன  தைரியம் குறையும். உடல்நலம்  பாதிக்கப்படும். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டம் ஏற்படும்.  உங்கள்  செல்வ வளம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது  எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.
குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். அதன் பயனாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துக்கள்  குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நலம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத்  தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை  எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்குத் தகுந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவீர்கள்.
கணவன்- மனைவி உறவில் பிளவுகள்  ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளால், தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களை தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கண்ட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும்கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம்.
.                இந்த வருட இறுதியில் , உங்கள் ராசிக்கு 10-ம்இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த சமயத்தில், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.

உங்கள் பதவி, உத்தியோகத்திற்கு பங்கம் வரும். வேண்டாத இட மாற்றம் ஏற்படும். செய்வினை, பில்லி சூனியம் போன்ற பாதிப்புகளின் அச்சம் ஏறப்டும். மனப் பயம் கூடும். கவலை மிகும். கருமித்தனம் மேலிடும். காசி, ராமேஸ்வரம் என்று தல யாத்திரை செல்வீர்கள். அதாவது அதிக காலம் வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வர். அதிக உழைப்பும் ,குறைந்த வருவாயும் உள்ள வேலைகளில் ஈடுபட்டு கஷ்ட ஜீவனம் பண்ணுவர். பலனற்ற வேலைகளில் ஈடுபடுவர். வீண் அலைச்சல் மிகும். தன நஷ்டமும் கலவிக்குப் பங்கமும் ஏற்படும். தோல்வி பயம் ஏற்படும். பலவித நோய்கள் பற்றிக் கொள்ளும். அவச்சொல், பெரும் பழி, எல்லாம் அடிக்கடி வரும்.    சிலருக்கு இதய ரோகம் ஏற்படும். மான பங்கம், கௌரவ பங்கம் ஏற்படும். ஓயாத உழைப்பும், அதைச் செய்ய முடியாத களைப்பும் ஏற்படும். வேலைக்குக் குறைந்த பலன்தான் ஏற்படும். புத்தித் தெளிவு சிறிதும் இராது. நிர்ணயத் திறன் குறையும். லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளைச் செய்வர். இபப்டி பல வகையிலும் கஷ்டமே ஏற்படும். சனி, எல்லா விதத்திலும், 10-ம் இடத்தில் அசுப பலனையே தருகிறார்.
பெண்களுக்கு மேற்கூறிய பாதிப்புகளுக்கு நீங்கள் தாராளமாக ஆட்பட ஏதுவான காலம் இது என்பதால், திருமணமான பெண்கள் மிகவும் சிரத்தையோடு செயல்படுவது நல்லது. கணவரிடமோ அல்லது அவரது உறவினரிடமோ அதிக வாக்குவாதத்தை அல்லது பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. புகுந்த வீட்டில் வசிக்கும்போது உங்கள் மாமியார், மாமனார் அல்லது நாத்தனார் போன்றோருடன் காரசாரமான சண்டைக்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது காட்டாமல் விட்டுக்கொடுத்துப்போகும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், அதனால் பின்னால் வரக்கூடிய  பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். கெட்ட பெயரும் வராது.  உங்களில் சிலருக்கு திடீர் கல்யாணம் அல்லது கலாட்டா கல்யாணம் என்ற அமைப்பில் அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்து திருமணம்  நடந்தேறும்

மாணவர்களுக்கு வீட்டு சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு, கல்வியில் போதிய ஆர்வத்தை குறைத்துக்கொள்ள இந்த நேரமானது அமைகிறது. சனியின் தாக்குதலில்,  பாதிப்புகள் கடுமையாகவே காணப்படுகிறது.பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் ஆசிரியர்களும், உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளும் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் உங்கள் மன பாதிப்பால் எடுப்பார் கைப்பிள்ளையாக யார் என்ன சொன்னாலும் அதை நம்பும் விதமாக அப்படியே செயல்படுவீர்கள். உங்கள் சொந்த புத்தியைக்கூட சில சமயம் அடகு வத்துவிடுவீர்கள். எனவே யோசித்து சற்று நிதானித்து செயல்பட்டு, படிப்பில் கருத்தூன்றி படித்தால் படிப்பில் பாதிக்குமேல் வெற்றி கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு  சனியின் 10-மிட சஞ்சாரம் முடியும்வரை உங்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக உங்களின் கீழ் உள்ளவர்களின் செயல்கள் தலை விரித்தாடும். மேலும் உங்களிடம் நெருங்கிப் பழகும் உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தாங்கியே தீர வேண்டும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை இழக்க நேரலாம். வீட்டு விஷயங்களில்கூட சிலருக்கு சில துரோகச் செயல்கள் தலை விரித்தாடும். அதை சரிக்கட்ட முயற்சிகள் மேற்கொள்வதைக் காட்டிலும் அவற்றைக் கண்டும் காணாமல் விடுவதே உங்களுக்கு நல்லது. மேலும் சனியின் பத்தாமிட சஞ்சாரம் முடியும்வரை நீங்கள் அடிக்கடி பணப்பற்றாக்குறையைச் சந்திக்க நேரும். எந்த பரிகாரமும் கை கொடுக்காது. சகக்ரத்தாழ்வாருக்கு பரிகாரம் மேற்கொண்டால், நன்மையைப் பெறலாம்.

இந்த ஆண்டு, ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.
இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.
திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.
எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.
சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.

கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.

பரிகாரம்:

வினாயகர் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.   ராகுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வெள்ளிக் கிழமைகளில் துரகையை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும்.  சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடவும்.  குரு பகவானின்  சஞ்சாரமும் சரியில்லாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
##################################

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>