/* ]]> */
Apr 122018
 

புத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி  வருஷம்:

புத்தாண்டு பலன்கள்

கன்னி ராசி:

கன்னி ராசி

கன்னி ராசி

வருகிற  செப்டம்பர்   மாதம் வரை ராசிக்கு 2-மிடத்திலும்  அத்ன் பிறகு  வருகிற  குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான்  உங்கள் ராசிக்கு   3-ம்  இடத்திலும்  சஞ்சரிக்கிறார். சனி ராசிக்கு,   4 -ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  ராகு உங்கள்  லாப  ஸ்தான மான 11-மிடத்திலும்,, கேது  5-லும்  சஞ்சரிக்கிறார்கள்.

தற்போது உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில்  சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நறப்லன்களை அள்ளித் தருகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள்  ராசிக்கு 6-ம் இடத்தையும்,   7-ம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு 8-ம் இடத்தையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய   ராசிக்கு 10-மிடத்தையும்   பார்வையிடுகிறார். இதன் காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.
இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

இனி  குருவின் 3-மிட சஞ்சரத்தால் நிகழப்போகும் நிகழப்போகும் கெடு பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம்  பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு , அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.
பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு [ப்ஏசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.
எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும்.  இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்ட்ய்ம்
நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது. சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும்.

இந்த வருடம்  சனி உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது மிகவும் கெட்ட பலன் தருவதாகும். இது அர்த்தாஷ்டம சனி என வழங்கப்படும்.

இச்சமயம் அரசாங்கத்தால் கெடுபிடியும் பகையும் ஏற்படும். கால்நடைகள் பாழாகும். முன் சேர்த்து வைத்த பணம் அழியும். வீட்டை, நாட்டை விட்டு எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு, வெளியூர்களுக்கு செல்லவேண்டியது வரும்.
மாரக தசை நடந்தால், உயிருக்கும் கண்டம் ஏற்படலாம். வீடு போன்ற சொத்துக்களும் கை நழுவும். மனைவியுடன் பகையும், பிரிவும் ஏற்படும். பந்து ஜனங்களை விரோதம் பண்ணிக்கொள்ள நேரும்.
ஏதாவது துக்கத்தால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பர். வாத நோய், கீல்வாதம் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். கால் இழுத்துக்கொண்டு, ஒரு கால் முடமாகவும் நேரலாம். நாய்க் கடித் தொல்லை, மாடு முட்டல் போன்ற இன்னல்களும் ஏற்படும். மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும்.
மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும். இவருக்கே கண்டம் தரித்திரம் மேலிடும். சுகம், சௌக்கியம், தூக்கம் எல்லாம் கெடும். மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மானம், மரியாதை கௌரவம் எல்லாம் பறிபோகும். நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி வீடு வாசலின்றி , இவர் அலையலாம். எதிலும் பயமும் தயக்கமும் ஏற்படும். வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டு , அங்கேயே தவிக்க வேண்டியது வரும்.பகைவரும் வேண்டாதவர்களாலும் மிகுதியான தொல்லை ஏற்படலாம். தனக்கு எப்பொழுதும் கெட்டதே நேரும் என்ற உள்ளுணர்வும் இருந்துகொண்டே இருக்கும். குதர்க்க புத்தியும் , கெட்ட சிந்தையும் இருந்துகொண்டே இருக்கும். ஆக, இந்த சனி, மிகுதியான கெடு பலன்களையே தரும்.
பெண்களுக்கு இதுவரை உங்களுக்கு யோக பலன்களாக நடந்து வந்தது. அதற்குக் காரணம் உங்களுக்கு ந்டைபெற்று வரும் சனியின் மூன்றாமிட சஞ்சாரம்தான். ஆனால், இப்போது  , சனி பகவான் உங்கள் 4-ம் வீட்டில் பிரவேசிப்பதால், உங்களுக்கு இதுவரை கிடைத்துவந்த நற்பலன்கள் யாவும் தடைப்பட்டுப் போகும். பொதுவாகவே உங்களுக்கு இத்தகைய சனியின் பாதிப்பு, சனியின் மாற்றத்தின் மூலம் ஏற்பட்டதுமே, பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட ஆரம்பிக்கும். கூடவே நிகழும் ஜென்ம குருவின் சஞ்சாரமும், ராகு கேதுவின் சஞ்சாரமும் பாதிப்புகளை அதிகரிக்கும். ஜென்ம குருவின் சஞ்சாரம் முடியும்வரை சனியின் இத்தகைய அர்தாஷ்டம சஞ்சாரம் சற்று அதிகமாகவே காணப்படும். ஆனால் குரு ஜூலை  தனது இரண்டாமிட சஞ்சாரத்தைத் தொடங்கியதுமே, உங்களது பொருளாதார பாதிப்புகள் சற்று குறையும். சனியின் நான்காமிட பாதிப்புகளை நீங்கள் தனித்து நின்று சமாளிக்கவும் துணை புரியும். குருவின் 2-மிட சஞ்சாரம் முடிவடைந்ததும் சனியின் சஞ்சாரம் தலை தூக்கும். சற்று கடுமையாகவும் இருக்கும். இந்த காலக் கட்டத்தில் குடும்ப ஒற்றுமை குறைவதோடு, கணவன்-மனைவியின் உறவில் மூன்றாம் நபரின் தலையீடு மற்றும் மூன்றாம் நபரின் தூண்டுதலின் மூலமாக கருத்து வேறுபாடுகள் மற்றும் சிறு பிரிவினைகளுக்கும்கூட வழி ஏற்படலாம். எனவே இந்தக் காலக்கட்டத்தில், தெய்வ பக்தியை வளர்த்துக்கொண்டு , யாரிடமும் அதிகம் பேசுவதையும், அதிகம் பழகுவதையும் அல்லது குடும்ப விஷயங்களை அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதையோ குறைத்துக்கொள்வது நல்லது. இல்லையேல்  பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள நேரும். பொதுவாக இந்த 4-மிட சனிப் பெயர்ச்சி 50 சதவிகிதத்துக்கு மேல் உங்களுக்குப் பாதிப்புகளைத் தருவதாக உள்ளது.
மாணவர்களுக்கு மனக் குழபப்மும், தெளிவற்ற நிலையும் சில அதிருப்தியான சூழ்நிலையுமே, இந்த சனிப்பெயர்ச்சியில் மாணவர்களாகிய் உங்களுக்கு ஏற்படும். கல்வி ஸ்தானமான 4-மிடத்தில் இந்தசனி பகவான் சஞ்சரிக்கப் போவதால், ஞாபக மறதியும் கல்வியில் ஆர்வமின்மையும் ஏற்படும். மேலும் பெற்றவர்களுக்கு மனக் கவலையும் ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் இடையே சிறுசிறு அதிருப்தியான நிலையும் ஏற்படலாம். இத்தகைய பாதிப்பு, தற்போது முதல், வரும் ஆண்டு, அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிய காணப்படும். அதன்பிறகு, இத்தகைய பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கி ஓரளவு நல்ல பலன்கள் அல்லது ஏற்றமான நிலை உருவாகலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் உங்களின் உழைப்பு மற்றும் முயற்சி போன்றவை சிலருக்கு கேலிக்கூத்தாகத் தென்படும். இதனால் அவப் பெயரும் மனத் தளர்ச்சியும் அவ்வப்போது ஏறப்டும். தெய்வ நம்பிக்கையையும் பக்தியையும் நீங்க்ள் வளர்த்துக்கொள்வதோடு தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி, உங்களின் அரசியல் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவாது. அதேபோல பொருளாதார உயர்வையும் ஏற்படுத்தாது.  உங்களுக்கு ம்னவேதனையும் மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலனிலும் நீங்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும். இருப்பினும் குருவின் இரண்டாமிட மாற்றத்திற்குப் பின் இந்த சனியின் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். உங்களின் அரசியல் பயணம் எப்போதும்போல் பிரச்சினைகள் இன்றி ஓரளவு சுமுகமாய்ச் செல்லும்.  தற்போது  நீங்கள் எவ்வளவுதான் நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் உங்களின் உழைப்பு வேலிக்கு இரைத்த நீராகத்தான் போகும். மேலும் உடல் அசதியும் மன உளைச்சலுமே மிஞ்சும். வீட்டு விஷயத்திலும் சற்று கவனத்துடனும் பொறுமையுடனும் நடந்துகொள்வது நல்லது. குடும்ப வாழ்வில் சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். சில மானக்கேடான சம்பவங்களும் தங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. பொதுவாகவே இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமனதல்ல.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்துக்கும் கேதுபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கும் வருகிறார்கள். இப்போது ராகு-கேதுவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரம் செய்து மிக நன்மையான பலன்களை கொடுக்கப் போகிறார். பலவிதமான நன்மைகள் எதிர்பாராதவிதமாக பலவழிகளிலிருந்தும் வந்து சேரும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்க கல்விக்கடன் கிடைத்து படிப்பை நல்ல முறையில் தொடர முடியும்.வேற்று இனத்தவர், வேற்று மொழி பேசுபவர் , வேற்று மதத்தினர் மூலம் பல நன்மைகள் தற்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சிலர் புது ஆடை ஆபரணங்கள் வாங்குவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதால், பழைய கடன்கள் அடைபடும்.கடன் சுமை குறையும். மூத்த சகோதரர் நன்மை அடைவார்கள். உங்களுக்கு மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். சிலர் புதிய சொத்துகள் , புதிய வண்டி வாகனங்கள் வாங்குவர். கடந்த காலத்தில் கோர்ட் கேஸ்கள் என்று அலைந்துகொண்டிருந்தவர்கள் அந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி அடைவார்கள். அந்த வழக்குகளில் தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாகவே வரும். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இதன் காரணமாக உங்கள் மனம் உற்சாகத்தில் மிதக்கும். முகத்தில் பொலிவும் உடம்பில் சுறுசுறுப்பும் இருக்கும். மனோபலம் அதிகமாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் செயல்திறனும் புத்திகூர்மையும் அதிகமாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்க்கிறார். தந்தை மேனமையடைவார். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் இடைக்கும். எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ,எதிலும் வெற்றி, அதன்மூலம் மன மகிழ்ச்சி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் பதவிகள் கிடைக்கும். புதிய நணப்ர்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களால், தக்க சமயத்தில் தகுந்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
இனி கேதுவின் சஞ்சார பலன்களைத் தெரிந்துகொள்வோம். கேதுபகவான் தனது 5-ம் இடத்து சஞ்சாரத்தின் மூலம் புத்திரர் வழியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார். உங்கள் புதல்வர்கள் வேற்று மத்தவரையோ அல்லது வேற்று இனத்தவரையோ திருமணம் செய்துகொள்வர் .புத்திரர் வழியில் செலவினங்களும் அதிகரிக்கும். இக்காலத்தில் போதைப்பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்வீர்கள். அந்த விஷயத்தில் 5 ம் இடத்திலுள்ள கேது உங்களை படுகுழியில் தள்ளிவிடாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது அவசியம். உங்களுக்கு ஆன்மீக சிந்தனையும் கடவுள் பக்தியும் அதிகமாகி உங்களை ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்தவும் வாய்ப்புள்ளது. அதனால் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது உங்களால் முடியும். இந்த சமயத்தில் பெரியோர்கள் ,ஞானிகளின் சந்திப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
உங்கள் பூர்வீகச் சொத்து எளிதில் கைக்கு வரமுடியாது. அதை அடைவதில் சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். ராகு 11ல் இருந்தாலும் கூட கேது 5ல் இருந்துகொண்டு சூது, லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பணம் வருவதை தடை செய்துவிடுவதால், கிடைப்பது சொற்ப லாபமாகவே இருக்கும். அந்த சொற்ப லாபத்தில் மயங்கி சூது வழிகளையே பெரிதாக நம்பி வாழ்ந்தால் கைப்பொருளையும் இழக்க வேண்டி வரும். லாகிரி வஸ்துக்களும் உங்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். அரசு சம்பந்தமான துறைகளில் இழுபறி நீடிப்பதால், வெற்றி தாமதமாகவே கிடைக்கும். உங்களில் சிலர் மந்திர தந்திர விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமின்றிக் கவனம் சிதறும். சிலர் காதல் விவகாரங்களில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவது மட்டுமின்றி காதல் தோல்வி ஏற்பட்டு மனம் வாடவும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம் என்பதால், பூரண ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம். அத்துடன் மருத்துவர் ஆலோசனையிலும் மருத்துவப் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியது அவசியம்.
கேது தனது 3ம் பார்வையால் உங்கள் 7ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பலனாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனைவி கர்ப்பிணியானால் கவனம் மிகவும் அவசியம். மனைவி வழி உறவினர்களிடையே ஏதாவது பிரச்சினைகள் தோன்றினால், அதில் நீங்கள் தலையிடவேண்டாம். அப்படி அவசியம் ஏறப்ட்டு தலையிட நேர்ந்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக பிரச்சினைகளைக் கையாளாவிட்டால், பிரச்சினைகள் உங்கள் மீதே திரும்பிவிடும் நிலை ஏறபடலாம். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கலாம். சிலருக்கு புதிய கூட்டாளியும் கிடைத்து புதிய கூட்டுத் தொழில் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் 3-மிடத்தைப் பார்க்கிறார். இதன்பலனாக உங்கள் மனோபலம் அதிகரிக்கும். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் துணிவு பிறக்கும். இளைய சகோதரர்கள் மேன்மையடைவதோடு உங்களுக்கும் உதவியாக இருப்பார்கள். காது சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு சிறப்படையும்.
பொதுவாக கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் தொழில் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக முன்னேறும். தேவைக்கேற்ற வருமானம் கொடுக்கும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வம்பு வழக்குகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏறப்டும். உறவுகள் பகையாகலாம். சரியான நேரத்துக்கு உண்ணவோ உறங்கவோ முடியாது. புதிய நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மீகப் பயணங்கள் தொடர வாய்ப்புண்டு.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்திக்கு கொணடக்கடலை மாலை  அணிவித்து வழிபடவும்.  சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிப டவும். ராகு  பரிகாரமாக துர்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். கேது பரிகாரமாக வினாயகரை வணங்கி, கோவிலை சுத்தம் செய்யவும்.

[ உங்கள் சொந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் ரூ. 950/- செலுத்தி, www.moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>