/* ]]> */
Mar 292013
 

 புத்தாண்டு பலன்கள் 2013 தமிழ்ப் புத்தாண்டு  விஜய வருஷம் கடக ராசி

புத்தாண்டு பலன்கள் 2013 தமிழ்ப் புத்தாண்டு  விஜய வருஷம்:

 கடகம்:

 புனர்பூசம் (4); பூசம்; ஆயில்யம்:

                        இந்த வருடத்தை உங்களுக்கு ‘ செலவுகளின் ஆண்டு’ என்றே குறிப்பிடலாம் என்ற அளவுக்கு பணத் தட்டுப்பாடு நிறைந்த வருடமாக இருக்கும்.   இந்த வருடம்  மே மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ‘விரய ஸ்தான’த்தில்  சஞ்சரிப்பதால், குரு ‘விரய குரு’வாகிறார்.  விரய குருவாகிறார் என்பதோடு இன்னும் சம்பந்தப்பட்ட பலவிதமான தொல்லைகளையும் கொடுப்பார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள்  உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.

                   பணம் என்ற ஒன்றை யாரிடமிருந்தும் இலவசமாகவோ அல்லது கைமாற்றாகவோ பெற்றுவிட முடியாது.  எனவே  பணத்தைத் தேடி அலைவதிலேயே  உங்கள் மன அமைதி கெடும். உங்களுமக்கு பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்கலிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்கலாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்கலளிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

            மருத்துவச் செலவுகளும் உங்களை விட்டு வைக்காது.  வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது.

                தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் ,பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடிதான் வரும்.

            நீங்கள் செல்வச் செழிப்பில் இருந்தபோது எத்தனையோ பேருக்கு உதவியிருப்பீர்கள். ஆனால், இப்போது உங்களுக்கு உதவும் நிலையில் யாரும் கிடைக்க மாட்டார்கள். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிர்க்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.

           மாதச் சம்பளம் வாங்குவோரும்கூட நிம்மதி காண முடியாமல் போகலாம். ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொண்டு, சம்பளப் பிடித்தத்தில் சிலர்  மாட்டிக்கொள்ள நேரலாம்.  அதனால், கையில் கணிசமான தொகை வராது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறைஅயக்கூடும். எதிர்பார்த்த இடங்கலிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.

                மருத்துவச் செலவோடு , பிள்ளைகளின் கல்விச் செலவும் கண் முன்னாடி விஸ்வரூபம் எடுக்கும்.   தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தை நீங்கள் கடந்தபிறகுதான், அந்த தடைகள்  நீங்கும். அதன்பிறகுதான் தொல்லைகள்  நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.

             குருவின் பார்வைகள் உங்கள் 4-மிடம் 6-மிடம் 8-மிடம் முதலியவற்றில் விழுவதால், உங்களுக்கு வாகனவசதி  கிடைக்கும் கல்வித் தடை நீங்கும்.  தொழிலில் சில முன்னேற்றம் இருக்கலாம். கடுமையான முயற்சிக்குப் பின் சில தடைகள் நீங்கும்.  உங்கள் எதிரிகளின் சூழ்ச்சிகள் ஒரு அளவுக்கு மேல் பலிக்காது. கோர்ட் வழக்குகளில்  உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம் . பிணிகள் நல்ல வைத்தியம் செய்துகொண்டால் நீங்கும் வாய்ப்பு இருக்கிறது.

                    அசுப பலன்களாக சொல்லப்பட்டிருப்பதால், நீங்கள் கவலைப்ப்ட வேண்டாம். உங்கள் திசா புத்தியும் கிரக அமைப்புகளும் உங்கள் ஜாதகத்தில் யோகமாக இருந்தால், இந்த கெடு பலன்கள் பெரிதும் குறைய வாய்ப்புண்டு. எனவே , நீங்கள் உங்கள் பிறந்த ஜாதகத்தை ஒருமுறை பிசீலித்துக்கொள்ளவும்.

            பரிகாரம்:

  பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை  மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபட்டால், துன்பங்கள் வெகுவாகக் குறையும். சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனுக்கு சிவப்பு நிற மலர் சாத்தி வழிபடவும். வினாயகரை வழிபட்டு, அவருடைய சந்நித்தியை சுத்தம் செய்யவும்.

       இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.