/* ]]> */
Apr 112018
 

புத்தாண்டு பலன்கள்- விளம்பி  வருஷம்—2018-2019 :

tamil puththantu

கடக ராசி:

kadaga-rasi

இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-மிடத்தில்  சஞ்சரிக்கிறார். குரு பகவான் செப்டம்பர் மாதம் வரையில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின், உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் ஜென்ம  ராசியிலும் 7-ம் இடத்திலும்  சஞ்சரிக்கிறார்கள்.

இந்த ஆண்டு சனி பகவான்  உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். தன் குடும்பத்தினரால் உதவிகள் ஏற்படும். சுகபோகம் ஏற்படும். சத்ருநாசம் ஆகும்.
புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது அதில் உயர்வுஎல்லாமே தேடி வரும். சாதாரண உணவுக்குப் பதிலாக தினமும் உய்ர்தர உணவாகவே கிடைக்கும்.
தற்போது உங்களுக்கு ராஜயோகம்தான். (ஜாதகத்தில் ராஜயோகம் அமையாவிட்டாலும் ) இது யோக காலமாகவே இருக்கும். நிறைய பணமும் வாகன வகைகளும் கிடைக்கும்.
நீடித்த நோய்கள் நீங்கும். தேகம் திடம் பெறும். புத்தொளி பெறும். அதற்கேற்ப அதிக உணவே உட்கொள்ளலும், அதை செரித்துக்கொள்ளும் சக்தியையும் பெறலாம்.
பகைவர்களை வென்றுவிடுவர். எல்லா விதத்திலும் சுகமும் சௌகரியமும் உண்டாகும். குழந்தைப் பிறப்பும் உண்டாகும். எனவே சனி 6-ல் எல்லா வகையிலும் நல்ல பலனே தருகிறார்.
அரசியல்வாதிகளுக்கு பெரிய அளவில் அரசியல் சாதனைகளையோ, மாற்றங்களையோ உங்களால் நிகழ்த்துவது கடினம் என்றாலும், உங்களின் சொல்லாற்றல், மற்றும் செயலாற்றலால் உங்களுக்குக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளின்றி உங்களின் அரசியல் பயணத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும். பணப் புழக்கம், மற்றும் சமூக அந்தஸ்து எப்போதும்போல உங்களுக்கு பக்க பலமாய்த் துணை புரியும்.
மாணவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை இந்த ஆறாமிடத்து சனி தவறாமல் செய்வார். எனவே நீங்கள் கல்வியில் ஓரளவு ஆர்வம் காட்டினாலும், பாதிக்கு மேல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இதுநாள்வரை, பெற்றோர், ஆசிரியர் ம்ற்றும் உறவினர்களின் புத்திமதிக்கும் ஏச்சுபேச்சுக்களுக்கும் ஆளான நீங்கள் அவர்களே உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். மேலும் பலரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குருவின் சாதகமான நிலையும் மற்றும் சனியின் ஆறாமிடத்து சஞ்சாரமும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கலவியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். இதனால் நீங்கள் படிக்க நினைத்த அல்லது தேர்வு செய்ய நினைத்த பாடத்தை சுலபமாக படிக்கத் தக்கதொரு நேரம் சுலபமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மை சேர்க்கும்.
பெண்களுக்கு அனைத்தும் சாதகமாகவே  நிகழும். சிலருக்கு வெகுநாட்களாக வரவேண்டிய தாய்வழிச் சொத்து, வசூலாகாமல் இருந்த கடன் ஆகியவை கைக்கு வந்து சேரும். மேலும் உங்களின் முயற்சியாலோ அல்லது கணவரின் உழைப்பாலோ உங்களுக்கு வீடு அல்லது நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை மற்றும் வாகன யோகம் ஆகியவை எளிதில் கிட்டும். அதிக அளவில் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி நன்மை அளிக்கும்.

சனியின் சஞ்சாரத்தைப் போல், குருவின் சஞ்சாரம் சிறப்பாக அமையாது.  குருவின் 4-மிடத்து சஞ்சாரம் உங்களுக்கு நற்பலன்களை வழங்க முடியாது. தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் சில சமயம் உங்களுக்கு சாதகமாகவும் முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். பயணங்களில் தொல்லைகள் ஏற்படும். உணவில் ஒவ்வாமை ஏற்படும். . குரு ஜூலை மாதம் 5-ம் தேதி முதல், 4ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. பலன்கள் எப்படி இருக்கும்? குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். குருவின் 5-மிட சஞ்சாரம் ஆறுதல் தரும்.

குருவின் 5-மிட சஞ்சாரத்தால், நீங்கள் அனுபவித்து வரும்   சனியின் தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு சற்றே ஆறுதல் கிடைக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும்  வேதனைகளும்  இருந்து வந்த நிலை மாறி,  செப்டம்பர் மாதம் வரை  நல்ல காலம் நடக்கும்.  குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள்  ராசிக்கு 9-ம் இடத்தையும்,   7-ம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு 11-ம் இடத்தையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய   ராசியையும்   பார்வையிடுகிறார். இதன் காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.  உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும். அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும். சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள். பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும். சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.  இதுவரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் தடை நீங்கும். . குருவின் 5-மிட சஞ்சாரத்தினால் நற்பலன்கள்  நிகழும்.

இந்த வருடம், ராகு  உங்கள்  ராசியிலும், கேது  கும்ப ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இப்படியாக ஜென்ம ராசியில் அமர்ந்துவிட்ட ராகு, தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 3-மிடமான விருச்சிகத்தையும், தனது 11ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடத்தையும் பார்வையிடுகிறார். அதுபோல உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் அமர்ந்துள்ள கேதுபகவான், தனது 3 ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்தையும் பார்வையிடுகிறார்.

இது உங்களுக்கு சிறப்பான காலக் கட்டம் அல்ல. காரணமேயில்லாமல் அலைச்சல் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும். என்னவிதமான உடல்பாதிப்பு என்றும், என்ன வியாதியால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரிய நோயாக படுத்தும். சிலருக்கு நுண்கிருமிகள் மூலம் விஷக் காய்ச்சல், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்படலாம்.
அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கும். ஆனால் அந்தப் பயணங்களால் எந்தப் பயனுமின்றி தேவையற்ற பயணங்களாக இருக்கும்.நீங்கள் மிகப் பெரிய அறிவாளியாக இருந்தாலும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும் இப்போது உங்கள் அறிவோ புத்திசாலித்தனமோ உங்களுக்கு கைகொடுக்காது. என்ன செய்யப்போகிறோம் என்ற மனக்குழப்பம் தீராமல் தவிப்பீர்கள். நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவதாகவே இருக்கும். எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உங்களால் தீர்க்க முடியாமல் போகும். தீர்வும் முடிவும் சரியாக எடுக்க முடியாமல் போகும். வருமானம் குறையும். தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் சிக்கலாகும். விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். கட்டுப்படுத்த முடியாது. இந்தக்காலக்கட்டத்தில் வேற்று மதத்தினரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கவேண்டாம். அவர்களால் ஆபத்து நேரும். சிலருக்கு வேற்று மதத்தினருடன் கூட்டுவியாபாரம் செய்யும் வாய்ப்பு தானாகவே அமையும். புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து கஷ்டப்படுவீர்கள்.
இந்தக் காலக் கட்டத்தில் தற்போது உள்ள நிலையிலேயே இருக்கலாமே தவிர புது முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். புதிய தொழில் தொடங்கினால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரும். சிலர் புதிய தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அந்தத் தொழிலைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சிலர் இருக்கும் வீட்டைவிட்டு வேறு வீட்டிற்கு மாறவேண்டிய சுழ்நிலை ஏற்படும். தங்களுடைய தொழில் ஸ்தாபனங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு தங்கள் தொழிலையே இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிலும் அமைதி இருக்காது. சக ஊழியர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் தொடர்ந்து,குறைகாண்பார்கள். உங்களுக்கு வேலைப்பளுவையும் அதிகப்படுத்தி தொந்தரவுகளை ஏறப்டுத்துவார்கள். மனக் கவலையில் ஏதாவது பேசிவிட்டீர்களானால், மிகவும் கஷ்டமான பணிக்கு மாற்றப்படுவீர்கள். அல்லது விருப்பமில்லாத இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்படுவீர்கள். அந்த இடமாற்றமும்கூட திடீரென அறிவிக்கப்பட்டு உங்களைத் திண்டாட வைக்கும். நேரான வழியில் நடந்து கஷ்டப்படுவதால், குறுக்கு வழியைத் தேடுவீர்கள். ஆனால், அந்தக் குறுக்கு வழியே உங்களுக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்துவிடும். அதிலிருந்து தப்பிக்கவும் தொடர்ந்து தவறான வழியையே தேர்ந்தெடுப்பீர்கள். கடைசியில் எதுவும் முடியாமல், போட்டியாளர்களிடமே அவமானப்படநேரும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு 3ம் இடத்தைப் பார்ப்பதால்,உங்கள் சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடுகள் விரோதங்கள் ஏற்படும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு பிரச்சினைகள் ஏறப்டும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும். உங்கள் எதிரிகள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களைக் கவிழ்த்துவிடுவார்கள். யாருடனும் பழகுவதற்கு முன்னால் அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்தகொண்டு பழகாமல் பழகியபின் அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்படுவீர்கள். சாதாரண செயலில்கூட தடைகள், இடைஞ்சல்கள் ஏற்படும். வீண் அலைச்சல்கள் பயனற்ற பயணங்கள் ஏற்படும்.குடும்பத்தில் ஒருவருடைய நிலை மிகவும் கலைக்கிடமாகும். குடும்பத்தாரின் உடல்நிலை மருத்துவச் செலவைக் கொடுக்கும். சில குடும்பங்களில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வறுமை, உணவுக்கே வழி இல்லாத நிலைகூட சிலருக்கு உருவாகலாம்.
கேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கைத் துணையின் உடல்நிலையைப் பாதிக்கும். நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகாவிட்டால் நட்பு பகையாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியுடன் ரொம்பவும் அனுசரித்துப் போகாவிட்டால், கூட்டுத் தொழில் நசித்துப்போகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். எந்த விஷயத்தையும் சிந்தித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் போகும். சிலர் சட்ட விரோதமான நூதனமான தொழிலை மேற்கொண்டு அதன் காரணமாக மோசம் போவார்கள். அல்லது அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவார்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்தக் காலத்தில் கேதுபகவான உங்கள் ராசிக்கு 5ம் இடமான கும்பத்தையும் 9ம் இடமாகிய மிதுனத்தையும் பார்வையிடுகிறார். இதனால் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் மனக்கவலை ஏற்படும். பூர்வீகச் சொத்தில் விவகாரங்கள் ஏற்படும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வருமானம் குறையும். விஷ ஜந்துக்களால் தீமை ஏற்படும். உறவுகள் பகையாகும். உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். இந்த சமயத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும். யாருடனும் புதிதாகப் பழகவேண்டாம். புதிய நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும்.

பரிகாரம்:
குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால் . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். சனியின் அருள் பெற சனிக் கிழமைகளில், சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள் தீபம் ஏற்றவும்.
வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், www.moonramkonam.com@gmail.com என்ற வெப்சைட்டிற்கு தொடர்புகொள்ளவும்]
^^^^^^^^^^^^^^^^^^
. .

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>