/* ]]> */
Mar 222019
 

புத்தாண்டு பலன்கள்- விராகி  வருஷம் 2019 -2020 :

புத்தாண்டு பலன்கள்

மிதுன ராசி

மிதுன ராசி

மிதுன ராசி

 

இந்த வருடம் குரு பகவான்  அக்டோபர் மாதம்   வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இது நல்ல சஞ்சாரமல்ல.  அதன் பிறகு குரு 7-மிடத்தில் பிரவேசிக்கிறார். இது மிகவும் நலல் சஞ்சாரம்.  ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 7ம் இடத்திலும் சஞ்சரிக்கிறாரக்ள். மேலும், இந்த வருடம்  சனி பகவான் ஜனவரி மாதம் 2020 வரை   ராசிக்கு 7-ம் இடத்தில்லும் அதன் பிறகு 8-மிடத்திலும் பிரவேசிக்கிறார். இதனை  முறையே கெண்டசனி என்றும், ‘அஷ்டமச் சனி’ என்றும் கூறுவார்கள். அஷ்டமச் சனி, ஏழரைச் சனியைவிட அதிகம் தொல்லை தரும்.   2020 ஜனவரிக்கு முன்பு  7 மிட சஞ்சாரத்தில் வரும்  சனியை ‘கண்டகச் சனி’ என்பார்கள். இச்சமயம் ஏதாவது வகையில் கஷ்டம், மனைவிக்கு மாரக பயம் உண்டாகும். உங்களுக்கு பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்படும். சேமித்த சேமிப்பு அழியும். தான் இருக்கும் இடத்தைவிட்டு விருப்பத்துக்கு மாறாக வேறு இடத்துக்குப் போக வேண்டி வரும். பயணம் செய்யும்போது வழியில் விபத்துப் பயம் ஏற்படும். கால்நடைச் செல்வம் பாழாகும். வேலையாட்கள், பணியாட்கள் விட்டுப் பிரிவர். மான , கௌரவ பங்கமும் , பதவி நாசமும் ஏற்படலாம். தீராத தலை நோய் ஏற்படும் . சுமையும் தூக்கிப் பிழைக்க வேண்டியதுகூட வரும்.
சரீரத்தில் ஏதாவது தோஷம், நோய் இருந்துகொண்டே இருக்கும். கெட்ட நடத்தையால், பெயர் கெடும். உடல் நலமும் கெடும். காரணமற்ற, குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படும். மனத்தில், ஏதாவது பயம், திகில் இருந்துகொண்டே இருக்கும். சோகம், உறவினர் மறைவு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். பெரும் பசி காணும். மிகக் கீழ் நிலையில், அன்றாடப் பிழைப்புக்குக்கூட வழியின்றிப் பிறரிடத்தில் கையேந்த வேண்டியது வரும்.
7-ல் சனி ‘ கண்டகச் சனி’ எனப்படும். இதில் சனி அசுப பலன்களைக் கொஞ்சம் அதிகமாகவே தருகின்றார். இருக்க இடமின்றி, ஒரு குறிக்கோளின்றி, பல இடத்திலும் அலைந்துகொண்டே இருப்பார். இது சமயம் வெளிதேச வாசமும் இவருக்கு ஏற்படும். ஆனால், அங்கும் இவருக்குப் பலவித கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். 7-ல் சனி எல்லா வகையிலும் அசுப பலன்களையே தருகின்றார்.
இந்த சனி பகவானின் ஏழாமிட ம்உங்களது நீண்ட நாள் ஆசைக்கு அல்லது உங்களின் நியாயமான ஆசைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும். உங்களது வெற்றிப் பாதைக்கு சில தடைக் கற்களை ஏறறப்டுத்தும். எனவே உங்களுக்கு அவ்வப்போது தடைகளும் பிரச்சினைகளும் தோன்றி மறையும். உங்களுக்குக் கீழ் உள்ள தொண்டர்கள் உங்களை எதிர்த்துக்கொண்டு, எதிரியின் கூடாரத்துக்கு மாறகூடும். உங்களுடைய தலைமை உங்களை முக்கியமில்லாத இடத்துக்கு மாற்றக்கூடும்.

2020 ஜனவரிக்குப் பின்பு வரும் சனியின் 8-மிட சஞ்சரம் ‘அஷ்டமச் சனி’ எனப்படுகிறது.   தற்போது நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மாறாக தொல்லைகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரும். உடல் நலம் கெடும். தீராத வயிற்று நோய் படுத்தும். பண நஷ்டம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்வி மயமே. நிலையற்ற வாழ்க்கை இருக்கும். கால்நடைகளுக்கு அழிவுண்டாகும். பலவையான நோய்கள் உண்டாகும். சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படும். நண்பர்களுக்கும் தொல்லை உண்டாகும்.
அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறைத் தண்டனையும் ஏற்படலாம். மாரக தசை நடப்பவர்களுக்கு, உயிருக்கு பயம் உண்டாகும். மான கௌரவப் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியுடன் பகை உண்டாகும். பலவகை தடங்கல்கள், தண்டச் செலவுகள், வீண் செலவுகள், குற்றம் முதலியவற்றிற்கு அபராதத் தொகை செலுத்துதல் போன்றவைகளில் வீண் செலவு உண்டாகி, பணம் கரையும். வேண்டாத, வசதியற்ற ஊருக்கு மாற்றலாகி, அவதிப்படுவர். கண்நோய்கள் ஏறப்டும். இது சமயம் கூசாமல் பொய் பேசுவர். மீள்வதற்கு வழியில்லாமல் , கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர். வறுமை மிகுதியால், பட்டினி கிடக்கவேண்டி வரும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியது வரும். கடுமையான உழைப்பின் மூலம்தான் வயிறு நிறையும். ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும். வேளைக்கு சாப்பிட முடியாமலோ அன்றி உணவில்லாமலோ, அதிகம் பசியும் இருக்கும். மனக் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். 8ல் சனி அஷ்டமச் சனி எனப்படும். ஏழரைச் சனிக்கு நிகரான கஷ்டம் உண்டாகும். அஷ்டமச் சனியின்போது, இவர் பிள்ளைகள்கூட இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இவர் வார்த்தைக்கு யாரிடத்திலும் மதிப்பிருக்காது என்று கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு வந்து செல்வோரின் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு நீங்கள் ஆளாக நேரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அனுசரித்து நடந்துகொண்டால், குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கிரக நிலை சரியில்லாததால், யார் எனன் சொன்னாலும் காதில் வாங்காமல், செய்யும் செயலில் கவனம் வைப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு உங்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணமாக உங்களின் கீழ்ப்பட்டவரக்ளின் செயல்கள் தலை விரித்தாடும்.அதை நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் உனக்ளிடம் நெருங்கிப் பழகும் உறவினர்கள் மற்றும் ந்ண்பர்கள் உங்களுக்கு சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை வெகு சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.
மாணவர்களுக்கு வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளூம் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் மன பாதிப்பால், எடுப்பார் கைப்பிள்ளையாக , யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி செயல்படுவீர்கள்.உங்களின் சொந்த புத்தியைக்கூட சிலசமயம் அடகு வைத்துவிடுவீர்கள். எனவே கருத்துன்றிப் படிக்கவேண்டியது அவசியம்.

குருவின் சாதகமற்ற சஞ்சாரமான  6-மிட சஞ்சாரம்  அக்டோபர் வரை தொடர்கிறது.  சனி, மற்றும் குருவின் சஞ்சாரங்கள் உங்களுக்கு  உகந்தது அல்ல. குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாகி, உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள்  என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும்.  திருமணத் தடை ஏற்படும். உயர் கல்வியில் சேர இருந்தவர்களுக்கு, பண முடை காரணமாகவோ அல்லது, வேறு குடும்பக் காரணங்களுக்காகவோ  கல்வியில் தடை ஏற்படும். ஆரோக்கியம் கெடும். மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்துகொள்ள நேரும்.  வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகி வருமானம் குறைய ஆரம்பிக்கும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போகும். பூர்வீகச் சொத்தில் இழுபறி ஏற்படும். பிளைகளின் வேலைவாய்ப்பு, கல்வி முதலியவற்றில் தடை ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் சனி, ராகுவின் சாதகமற்ற சஞ்சாரங்களும் சேர்ந்து கொள்கின்றன.

குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், இந்த சமயத்தில், வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நல்ம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயற்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு  திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் ,காரணமாக  உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளி ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள். நிகழும் திசாபுத்திப்படி அவரவர்க்கு பலன்கள் மாறுபடும் என்பதால், சுய ஜாதகத்தையும் பரிசீலித்துக்கொல்லவும்.

தற்போது,  அக்டோபர் மாதம் நிகழப் போகும் குருவின் 7-மிடத்து சஞ்சாரம்  உங்களுக்கு சகல  சம்பத்தையும் அளிக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை  வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது  அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது  முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.  இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக முடிவடையும்.

ராகு  உங்கள்  ராசியிலும், கேது  மகர ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இப்படியாக ஜென்ம ராசியில் அமர்ந்துவிட்ட ராகு, தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 3-மிடமான விருச்சிகத்தையும், தனது 11ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடத்தையும் பார்வையிடுகிறார். அதுபோல உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் அமர்ந்துள்ள கேதுபகவான், தனது 3 ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்தையும் பார்வையிடுகிறார்.
இது உங்களுக்கு சிறப்பான காலக் கட்டம் அல்ல. காரணமேயில்லாமல் அலைச்சல் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும். என்னவிதமான உடல்பாதிப்பு என்றும், என்ன வியாதியால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரிய நோயாக படுத்தும். சிலருக்கு நுண்கிருமிகள் மூலம் விஷக் காய்ச்சல், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்படலாம்.
அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கும். ஆனால் அந்தப் பயணங்களால் எந்தப் பயனுமின்றி தேவையற்ற பயணங்களாக இருக்கும்.நீங்கள் மிகப் பெரிய அறிவாளியாக இருந்தாலும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும் இப்போது உங்கள் அறிவோ புத்திசாலித்தனமோ உங்களுக்கு கைகொடுக்காது. என்ன செய்யப்போகிறோம் என்ற மனக்குழப்பம் தீராமல் தவிப்பீர்கள். நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவதாகவே இருக்கும். எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உங்களால் தீர்க்க முடியாமல் போகும். தீர்வும் முடிவும் சரியாக எடுக்க முடியாமல் போகும். வருமானம் குறையும். தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் சிக்கலாகும். விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். கட்டுப்படுத்த முடியாது. இந்தக்காலக்கட்டத்தில் வேற்று மதத்தினரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கவேண்டாம். அவர்களால் ஆபத்து நேரும். சிலருக்கு வேற்று மதத்தினருடன் கூட்டுவியாபாரம் செய்யும் வாய்ப்பு தானாகவே அமையும். புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து கஷ்டப்படுவீர்கள்.
இந்தக் காலக் கட்டத்தில் தற்போது உள்ள நிலையிலேயே இருக்கலாமே தவிர புது முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். புதிய தொழில் தொடங்கினால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரும். சிலர் புதிய தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அந்தத் தொழிலைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சிலர் இருக்கும் வீட்டைவிட்டு வேறு வீட்டிற்கு மாறவேண்டிய சுழ்நிலை ஏற்படும். தங்களுடைய தொழில் ஸ்தாபனங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு தங்கள் தொழிலையே இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிலும் அமைதி இருக்காது. சக ஊழியர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் தொடர்ந்து,குறைகாண்பார்கள். உங்களுக்கு வேலைப்பளுவையும் அதிகப்படுத்தி தொந்தரவுகளை ஏறப்டுத்துவார்கள். மனக் கவலையில் ஏதாவது பேசிவிட்டீர்களானால், மிகவும் கஷ்டமான பணிக்கு மாற்றப்படுவீர்கள். அல்லது விருப்பமில்லாத இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்படுவீர்கள். அந்த இடமாற்றமும்கூட திடீரென அறிவிக்கப்பட்டு உங்களைத் திண்டாட வைக்கும். நேரான வழியில் நடந்து கஷ்டப்படுவதால், குறுக்கு வழியைத் தேடுவீர்கள். ஆனால், அந்தக் குறுக்கு வழியே உங்களுக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்துவிடும். அதிலிருந்து தப்பிக்கவும் தொடர்ந்து தவறான வழியையே தேர்ந்தெடுப்பீர்கள். கடைசியில் எதுவும் முடியாமல், போட்டியாளர்களிடமே அவமானப்படநேரும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு 3ம் இடத்தைப் பார்ப்பதால்,உங்கள் சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடுகள் விரோதங்கள் ஏற்படும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு பிரச்சினைகள் ஏறப்டும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும். உங்கள் எதிரிகள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களைக் கவிழ்த்துவிடுவார்கள். யாருடனும் பழகுவதற்கு முன்னால் அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்தகொண்டு பழகாமல் பழகியபின் அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்படுவீர்கள். சாதாரண செயலில்கூட தடைகள், இடைஞ்சல்கள் ஏற்படும். வீண் அலைச்சல்கள் பயனற்ற பயணங்கள் ஏற்படும்.குடும்பத்தில் ஒருவருடைய நிலை மிகவும் கலைக்கிடமாகும். குடும்பத்தாரின் உடல்நிலை மருத்துவச் செலவைக் கொடுக்கும். சில குடும்பங்களில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வறுமை, உணவுக்கே வழி இல்லாத நிலைகூட சிலருக்கு உருவாகலாம்.
கேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கைத் துணையின் உடல்நிலையைப் பாதிக்கும். நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகாவிட்டால் நட்பு பகையாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியுடன் ரொம்பவும் அனுசரித்துப் போகாவிட்டால், கூட்டுத் தொழில் நசித்துப்போகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். எந்த விஷயத்தையும் சிந்தித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் போகும். சிலர் சட்ட விரோதமான நூதனமான தொழிலை மேற்கொண்டு அதன் காரணமாக மோசம் போவார்கள். அல்லது அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவார்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்தக் காலத்தில் கேதுபகவான உங்கள் ராசிக்கு 5ம் இடமான கும்பத்தையும் 9ம் இடமாகிய மிதுனத்தையும் பார்வையிடுகிறார். இதனால் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் மனக்கவலை ஏற்படும். பூர்வீகச் சொத்தில் விவகாரங்கள் ஏற்படும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வருமானம் குறையும். விஷ ஜந்துக்களால் தீமை ஏற்படும். உறவுகள் பகையாகும். உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். இந்த சமயத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும். யாருடனும் புதிதாகப் பழகவேண்டாம். புதிய நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும்.

பரிகாரம்:

ஆண்டு பிற்பகுதியில் குரு  6-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல. தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை மாலை கொண்டும் வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். வினாயகரை வழிபட்டு, கோவிலை சுத்தம் செய்யவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
****************************************************

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>