/* ]]> */
Mar 222019
 

புத்தாண்டு பலன்கள்- விராகி    வருஷம்- 2019-2020:

புத்தாண்டு பலன்கள்

கன்னி ராசி :

கன்னி ராசி

இந்தப் புத்தாண்டில், குரு பகவான்  அக்டோபர் மாதம்  வரை, உங்கள் ராசிக்கு  3-ம் இடத்திலும் அதன் பிறகு 4-மிடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார். சனி பகவான்  2020 ஜனவரி வரை 4 லும்  அதன் பிறகு  உங்கள் ராசிக்கு 5-லும் ராகு உங்கள்  10 மிடத்திலும், கேது 4-லும் சஞ்சரிக்கிறார்கள்.  இனி பலன்களைப் பார்க்கலாம்.

தற்போதுள்ள குருவின்   3,4 ஆகிய 2 சஞ்சாரங்களுமே  சிறப்பாக அமையாது. தற்போதுள்ள குருவின்  இந்த  சஞ்சாரங்கள் உங்களுக்கு நற்பலன்களை வழங்க முடியாது. தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் சில சமயம் உங்களுக்கு சாதகமாகவும் முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். பயணங்களில் தொல்லைகள் ஏற்படும். உணவில் ஒவ்வாமை ஏற்படும். . குரு ஜூலை மாதம் 5-ம் தேதி முதல், 4ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. பலன்கள் எப்படி இருக்கும்? குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.

இந்த வருடம் 2020 ஜனவரிக்கு முன் 4-லும் ஜனவரி 2020க்குப் பின்   சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இரண்டுமே நற்பலன்களை  அளிக்காது. ராசிக்கு 5-ல் சனி வரும்போது, சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படுகின்றது. புத்தி சரியாகச் செயல்படாமல், தகுந்த முடிவு எதுவும் எடுக்க முடியாமல், சில முக்கிய திட்டங்கள் நிறைவேறாமல் பாழாகும்.

ஏதாவது விபத்து முதலியவற்றால், அங்கஹீனம் ஏற்படும். பணம் கரையும். வறுமை மேலிடும். ஏதாவது இழிசெயல் செய்தாவது பிழைக்க நேரிடும். மனக் கலக்கமும் ஏற்படும்.
நடத்தை கெட்ட பெண்களின் உறவால், பொருளும் பணமும் கெடும். பலருடன் பலவகைச் சண்டைகளில் ஈடுபட நேரிடும். அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அவதிப்படலாம். எந்த ஸ்திரமான உருப்படியான காரியமும் நிறைவேறாது.
குழந்தைகள் யாருக்காவது மாரகம் ஏற்படலாம். பந்து ஜனங்களைப் பகைத்துக்கொள்வர். குழந்தை குட்டிகளை விட்டுப் பிரிவார். சோகம் , புத்திரஹானி போன்றவை ஏற்படலாம். எனவே எல்லா வகையிலும் சனி அசுப பலனையே தருகிறார்.
அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரையில்  உங்கள் அரசியல் வாழ்வில் பெரிய அளவில் உங்களால் சாதிக்க முடியவில்லை. மேலும் உங்களின் வெளிவட்டார உறவுகளும், இதுநாள்வரை திருப்திகரமாகவும் மதிப்புடனும் இல்லை. உறவினர்கள் மத்தியில் கூட நீங்கள் பிறருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும், நல்ல பெயரோ அல்லது பாராட்டோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இதுவரை கஷ்டப்பட்டீர்கள். இந்த அவல நிலை இப்போது அடியோடு மாறுகிறது. முன்பு உங்களை உதாசீனம் செய்தவர்கள் இப்போது உங்களை சுற்றிச் சுற்றி வந்து உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். உங்கள் திறமையையும் ஆற்றலையும் பலவாறு புகழ்வார்கள். அதன்பிறகு ஓராண்டு காலம் சிற்சில அவலநிலைக்கு நீங்கள் ஆளாக நேரிடும். மேலும் சனியின் 10-மிட பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால், இந்த சனியின் 5-மிட மாற்றம் உங்களின் முன்னேற்றம் அல்லது சாதனைக்கு வழிவகுக்குமேயன்றி உங்களின் பொருளாதார மற்றும் தன நிலையில் பெரிய அளவில் மாற்றங்களையோ அல்லது ஏற்றங்களையோ ஏறப்டுத்தாது.

மாணவர்களுக்கு உங்கள் ராசிக்கு இந்த 5-மிட சனியின் பெயர்ச்சியால், உங்களது கல்வி நிலையில் ஓரளவு மாற்றம் அல்லது ஏற்றம் ஏற்படும். கல்வியில் ஓரளவு ஆர்வமும் செயல்திறனும் உங்களுக்கு அதிகரிக்கும். கல்வியில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாதிக்குமேல் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் .

பெண்களுக்கு, லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு சனியின் 7ம் பார்வை ஏற்படுவதும் களத்திர ஸ்தானத்துக்கு சனியின் மூன்றாம் பார்வை ஏற்படுவதும் நல்லதல்ல. உங்களது கணவருக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியோந்நியம் குறைந்து குடும்பத்தில் அமைதியைப் பறிக்கும். புகுந்த வீட்டினரின் பாராட்டைப் பெறுவது சற்று கடினம். அதேபோல அவர்கள் மூலமாக உங்களுக்கு நடக்க இருக்கும் நல்ல விஷயங்கள் தாமதப்பட அல்லது மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மூலமாக சொத்து சேர்க்கை, பண வரவு போன்றவை நிகழ இந்த 5-மிட சனி தடையை ஏறப்டுத்தும். மேலும் 5-மிடமான புத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வீற்றிருப்பது உங்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வக் குறைவு அல்லது அவர்களின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டு விலகும். மேலும் சனிபகவானின் 10-ம் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ம் இடத்தில் விழுவதால், உங்களுக்கும் கணவருக்குமிடையே சன்டை சச்சரவு ஏற்படும். மொத்தத்தில் இந்த 5-மிட சனி பாதிப்புகளையே அதிகம் ஏற்படுத்தும்தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.
அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது.

ராகுபகவானின் 10ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். சிலர் தங்கள் தொழிலில் புதிய உத்திகளையும் புதிய சிந்தனைகளையும் புகுத்துவார்கள். தொழிலில் ஏற்படும் பின்னடைவை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வீரகள். சிலர் தொழில் சம்பந்தமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக, உடல்நலம் குறையும். காலம் தாழ்த்தி உணவு உண்ணவும் உறங்கவும் செல்வீர்கள். தொழிலை மேம்படுத்த சிலர் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்து தொழிலை முன்னேற்ற முயலுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவரின் தலையீடு இருக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எத்தனை கடுமையாக முயன்றாலும், உங்கள் அறிவை உபயோகப்படுத்தினாலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு முன்னேற்றம் இருக்காது.
சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். வீடு, மனை இவற்றின் மூலம் விரயச் செலவு ஏறப்டும். ரியல் எஸ்டேட், உரம், மருந்துப் பொருள்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு இது உகந்த நேரம் அல்ல. பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவீர்கள். சிலரது குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும். துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.
தேவையற்ற வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும்.சிலர் கோர்ட் கேஸ்களில் சிக்கி அலைந்து திரிந்து தொல்லைகளுக்கு ஆளாவார்கள் சிலர் தொழில் செய்யும் .ஸ்தாபனத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் , பணிமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். தற்போது வழக்குகளில் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். உறக்கம் கெடும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் பயன் இருக்காது.
கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் தீய பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். புதிய நணப்ர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். குடும்பத்தில் ஒரு சுப காரியம் நடைபெறும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். பெரியோர், ஞானிகளின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கவேண்டி வரும். குடும்பத்தாரிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டுவதால் ,குடும்ப அமைதி கெடும். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் இப்பொது திடீர் பாதிப்புக்கு உள்ளாகும். உங்களிடம் வேலை பார்த்து வந்தவர் உங்களுக்குப் போட்டியாக களம் இறங்குவர். கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். இதன் காரணமாக அவப்பெயர் ஏற்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். வேலை இழக்கும் சூழல்கூட உருவாகலாம்.வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை வரும். சிலருக்கு வண்டிவாகனங்களால் நஷ்டமும் பொருட்செலவும் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தமான விரயத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிவரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்து, விரக்தியுடன் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகும். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் 2-ம் இடத்தையும் பார்க்கிறார்கள். இதனால், உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை இருக்காது. நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. எதிரிகளால், தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பக்கவலை ஆட்டிப்படைக்கும். கணவன்-மனைவி உறவு சுகப்படாது .கடன் தொல்லைகள் அதிகமாகும்.

பரிகாரம்:

குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால் . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். சனியின் அருள் பெற சனிக் கிழமைகளில், சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள் தீபம் ஏற்றவும்.
வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், www.moonramkonam.com@gmail.com என்ற வெப்சைட்டிற்கு தொடர்புகொள்ளவும்]
^^^^^^^^^^^^^^^^^^
. .

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>