/* ]]> */
Mar 292013
 

புது வருட பலன் | ஆண்டு பலன் | விஜய வருட பலன் | சிம்ம ராசி

சிம்மம்:

மகம்; பூரம்; உத்திரம்(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

                           இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும்.  இத்தகு யோகமான குருபலன் இந்த வருடம்  மே மாதம் 27-ம் தேதி முதல் ஆரம்பிக்கும்.

                                 குருபகவானைத் தவிர, சனியும்  வும் உங்கள் ராசிக்கு  மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் சாதகமான காலக்கட்டமே. எனவே இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சி நிறையப் போகிறது.

                  குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

                                       குருபகவானின் சுபத் தன்மை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

                                 வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்களை ராகுவும் வாரிவழங்கத் தயங்கமாட்டார். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

                      எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயர்ச்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.

                           காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயர்ச்சியில் ஈடுபடுவார்கள்.

                            பண வசதிக்கு குறைவில்லை. குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்து வேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் . உங்கள் ராசிக்கு எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதியபதியான சனி பகவான் 5-ல் உச்சம் பெறுகிறார். பணப் புழக்கம் அதிகரிக்கவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலவும் சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். சனியின் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்களுக்கு வள்ளலாக வாரி வழங்குவார். உங்களுடைய சப்தம ஸ்தானத்தையும் சனி பார்ப்பதால், வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக இந்த ஆண்டு முழுவதும் ராகு,கேது,சனி ஆகிய மூன்று கிரகங்களும் நற்பலன்களை வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குருபகவானின் சஞ்சாரம்  மே மாதம் 17-ம் தேதிவரைதான் சிறப்பாக இருக்கும். அதன்பிறகு குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும்.

இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும் . குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல்முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் கொடுத்து நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும்.  பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும் கிளம்பி வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய பணம்   சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி, உங்கள் மதிப்பு குறையும் அளவுக்குப் போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும்.

கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரும்.

                                          குருபார்வை உங்களுக்கு யோகத்தை கூட்டித் தரும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 3-மிடத்திலும், 5-மிடத்திலும் 7-மிடத்திலும் விழுவது இன்னும் சிறப்பான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது.

                                     உங்கள் மனோபலம் கூடும். தைரியம் பெருகி எந்தக் காரியத்திலும் துணிச்சலுடன் ஈடுபட்டு,  வெற்றியைக் குவிப்பீர்கள். சகோதரர்கள் உங்களுக்குத் துணை நிற்பார்கள். அவர்களின் உதவி தடையின்றிக் கிடைக்கும். சகோதரர்களும் வாழ்வில் மேன்மையுற்று மதிப்போடு வாழ்வது உங்களின் புகழுக்கு வலு சேர்க்கும். உங்களுடைய பிள்ளைகள் வழியிலும் நீங்கள் நிம்மதியடைவீர்கள். அவர்கள் படிப்பில் ஜொலித்து நல்ல மதிப்பெண் பெற்று நல்ல வேலையில் சேருவார்கள். அவர்களுடைய வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பும்,  வெளிநாட்டு வேலை வாய்பும் பிரகாசமாக விளங்கும். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாகவும் துணையாகவும் இருப்பார்கள். குருவின் சுபப் பார்வை கணவன்-மனைவி உறவை இனிமையானதாக்கும். இதுவரை இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.  குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் அமையும்.  குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் கூட்டுத்தொழில் சிறக்கும்.

                       கேதுவின் சஞ்சாரம் சரியில்லை என்றாலும்  சனி, குரு மற்றும் ராகு போனற பெரும் கிரகங்கள் உங்களுக்குத் துணை நிற்பதால், உங்களுக்கு இந்தப் புத்தாண்டு சுபமாகவே அமையும்.

பரிகாரம்:

              வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலுக்கு சேவை செய்யவும். சுபயோகம் பெருகும்.

வளம் சேர்க்கும் இனிய புதாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.