/* ]]> */
Jun 072017
 

புதினா ரெசிபிகள்:

MINT LEAVES

தேகாய்ப் பால் புலவு:

தேவை:

அரிசி, புதினா இலைகள்- தலா 1 டம்ளர்; தேங்காய்ப் பால்-100 மில்லி; பச்சை மிளகாய்-4 வெங்காயம், தக்காளி- தலா 2 ; இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி; பட்டை, கிராம்பு, ஏலம், எண்ணெய், உப்பு.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளிக்கவும்.இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன், இஞ்சி பூண்டு விழுது, தேங்காய்ப் பால், அரிசி, 1 தம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கவும். குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்க சுவையான புலவு தயார்.

புதினா தோசை:

தேவை:

தோசை மாவு, புதினா இலை- தலா 2 தம்ளர்; பச்சை மிளகாய்-8 இஞ்சி-1 துண்டு; மல்லித் தழை, உப்பு.

செய்முறை:

புதினா இலைகளுடன், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித் தழை, உப்பு சேர்த்து சட்னி போல அரைக்கவும். இதனுடன் தோசை மாவைக் கலந்து மீண்டும் ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். தோசைக் கல்லில் மாவை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.தோசை வாசனையாக இருக்கும்.

புதினா ரொட்டி:

தேவை:

கோதுமை மாவு, புதினா இலை- தலா 1 தம்ளர்; சாட் மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி; எண்ணெய், உப்பு.

செய்முறை:

கோதுமை மாவுடன், புதினா இலை, சாட் மசாலாத்தூள், சிறிதளவு எண்ணெய், உப்பு ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து , சப்பாத்தி மாவு போல பிசையவும். பின்னர், சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

இஞ்சி ஜூஸ்:

தேவை:

புதினா இலை-10; இஞ்சி- சிறிய துண்டு; எலுமிச்சைச் சாறு-1 தேக்கரண்டி, சர்க்கரை, கறுப்பு உப்பு.

செய்முறை:

புதினா இலைகளுடன், இஞ்சி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதை வடிகட்டி அத்துடன், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, கறுப்பு உப்பு சேர்த்துப் பருகலாம். ஃப்ரிஜ்ஜில் வைத்து கூலாகவும் பருகலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>