/* ]]> */
Sep 222017
 

புதினாவின் மருத்துவ குணம்:

MINT LEAVES

  • நம் சமையலில் மணத்துக்காக சேர்க்கப்படும் புதினா, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. உதாரணமாக நாம் சாப்பிடும் அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
  • புதினா கீரையை தினமும் உணவில் சேர்த்தால் உடம்பின்  ரத்தத்தை சுத்தம் செய்வது அல்லாமல், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
  • மலச் சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும். புதினா வயிற்ரில் உள்ள புழுக்களை அழித்து வாயுத் தொல்லையைப் போக்குகிறது.
  •  தசைவலி, நரம்புவலி, தலைவலிபோன்ற வலி உள்ள இடங்களில்  புதினாவை நீர் விடாமல் அரைத்து  பற்றுப் போட்டு வந்தால், வலிகள் மறையும். ஆஸ்துமா ஏற்படாமலும் புதினா தடுக்கிறது. மஞ்சள் காமாலை , வாதம், வறட்டு இருமல், ரத்தசோகை , நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவரகள் இந்த புதினா கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  •  முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் புதினா கீஅரியின் சாறை முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிவர முகம் பளபளப்பாகும்.
  • புதினா இலைகளைக் காய வைத்து, பின் அதை பாலில் சேர்த்து  கொதிக்க வைத்து, தினமும் அதைக் குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  •  வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>