Nov 262020
புகழ் மிக்கவர்கள்:
- அந்தத் தமிழறிஞர் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். மிதிவண்டியில் வந்த ஒருவர் அவர் மீது தெரியாமல் மோதியதோடு மன்னிப்பும் கேட்டார். ஆனால், தமிழறிஞர் “மன்னிப்பு என்பது உருதுச் சொல். பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் சரியான சொல்.” என்று அந்த இளைஞரைத் திருத்தினார். – யார் அந்த தமிழறிஞர்?- தேவனேயப் பாவாணர்.
- சிலப்பதிகாரம் குறித்து பல்வேறு நாடுகளில் சொற்பொழிவாற்றியவர். தமிழக சட்டப் மேலவையின் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்தவர்.ஞானப் பிரகாசம் என்னும் இயற் பெயர் கொண்டவர். ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் அந்தத் தமிழறிஞர் யார்?-மா.பொ.சிவஞானம்.
- “ நான் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு கட்டுரை எழுதினேன். அதனைப் படித்துப் பார்த்த என் ஆசிரியர் ‘மிகுந்த பொருட் செறிவுடனும் நயமுடனும் இருக்கிறது. இதனை எங்கிருந்து எடுத்தாய்?’ என்று கேட்டார். நான் ‘இங்கிருந்து’ என்று என் இதயத்தைத் தொட்டுக் காட்டினேன். ஆசிரியர் மகிழ்வுடன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.” இதனைக் கூறிய அறிஞர் யார்? அறிக்னர் அண்ணா.
- ‘தமிழ் மொழி ஒரு சிறந்த மொழி. தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் அதுதான் தாய்மொழி. தமிழ் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும் அறத்தையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை. அதற்கோர் எடுத்துக்காட்டு திருக்குறள்.” என்று கூறிய அறிஞர் யார்? ஜி.யு.போப்.
- பகவத்கீதையை தமிழி;ல் மொழி பெயர்த்தவர் நம்மாழ்வார். ஆண்டாள் ஆகியோரின் பாசுரங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் எழுதியவர். பத்திரிக்கையாளராக , கவிஞராக தேச பக்தராக விளங்கிய இவரது இயற் பெயர் சுப்பையா. –யார் இவர்?- பாரதியார்.
*****************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments