/* ]]> */
Mar 072013
 

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – சித்ரா – Beans Paruppu masiyal Samayal kurippu

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு - சித்ரா - Beans Paruppu masiyal Samayal kurippu

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – சித்ரா – Beans Paruppu masiyal Samayal kurippu

தேவையான பொருட்கள் :
பீன்ஸ் - கொஞ்சம் (நறுக்கியது )
துவரம் பருப்பு – அரை கப்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் -ஒன்று
தக்காளி – ஒன்று
உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிக்க :
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு , கருவேப்பில்லை – கொஞ்சம்

செய்முறை: 

  1. கொஞ்சம் எண்ணெய் விட்டு பீன்சை லேசாக வதக்கவும் (பச்சை வாடை போவதற்கு)
  2. பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் & மிளகாய் தூள், உப்பு, புளி + இரண்டு கப் தண்ணீர் , அனைத்தையும் பீன்சொடு சேர்க்கவும் . தக்காளி , மிளகாய் எல்லாம் நறுக்கனும்னு அவசியம் இல்ல. (காய், பருப்பை எல்லாம் கொஞ்சம் கழுவிட்டு போடுங்கப்பா !)
  3. நாலு இல்ல ஐந்து விசில் குக்கரில் வைக்கவும் (2-3 விசில் கூட போயிட்டாலும் பரவா இல்லை )
  4. குக்கர் விசில் அடங்கியதும் மூடிய திறந்து லைட்டா கடையனும்.
  5. கடைசியா மேல தாளிச்சு கொட்ட வேண்டியது தான்.

குறிப்பு:

  • காய் எதுவும் போடாம, வெறும் பருப்பு கடைந்தலும் சுவையா இருக்கும்.
  • பீன்ஸ்-கு பதிலா சவ்-சவ், முட்டைகோஸ் , புடலங்காய் சேத்துக்கலாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.