/* ]]> */
Nov 102010
 

nithish

நல்ல நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது ! தமிழ்நாட்டு அரசியல் தடம் மாறப் போகுது !” குடுகுடுப்பையின் ஓசை ரொம்ப நாள் கழித்து கேட்க மேன்சன் உற்சாகமானது .
“மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் !” பாட்டை ஆஃப் செய்தான் பாஸ்கி.
“இந்த குடுகுடுப்பை இத்தனை நாள் எங்க போனான்… மதுரைக்கு போயிருப்பானோ?” விமல் சிரித்தான் .
“தமிழ்நாட்டு அரசியல்ல எழுத்தருக்கு இப்ப எடக்கான காலம் ஆரம்பமாகிடுச்சி! வடக்க இருந்து வருது ஆபத்து” குடுகுடுப்பை சொல்ல ஆரம்பித்தான்.
“டேய், என்னடா இவன் வடக்க இருந்துன்னு சொல்றான்… மதுரை தெக்கயில்ல இருக்கு … அங்கத்தானே அம்மா வேட்டு வச்சிட்டு வந்திருக்காங்க ! ” – இது கோபி
இவர்கள் பேசுவதைக் கேட்டதைப் போல குடுகுடுப்பை தொடர்ந்தான்…
“மதுரையில புரட்சியம்மாவுக்கு கூடுன கூட்டம் கொஞ்சம் எழுத்தரை அசர வச்சாலும் மதுரயப் பொறுத்தவரை எல்லாம் நாம் பார்த்துக்கறேன்னு பெரியதம்பி சொல்லிட்டதால ஓரளவு தேறிட்டாரு . ஆனா இப்ப ஆபத்து வடக்க பீகாரிலிருந்து வருது!”
“டேய்… இதென்னடா இது இவன் பீகாரிலிருந்து பீரங்கி உடறான்” ஒரு தம் இழுத்தவேறே பாஸ்கி சொன்னான்.
குடுகுடுப்பை தொடர்ந்தான்…
“பீகாரில தேர்தல் ஆரம்பமாயிடுச்சி! நவமபர் வரை பல நாளு தொடரப் போற அந்தத் தேர்தல்ல இதுவரைக்கும் நிதீஷ் கையே ஓங்கியிருக்கு. லல்லுவே யோசிச்சு தான் நிக்காம தன் பொஞ்சாதியத்தான் நிறுத்தியிருக்காரு. அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்ல. பி.ஜே.பி நிதீஷ் கூட கூட்டு வச்சாக்கூட தன் பாட்டுக்கு பிரச்சாரம் பண்ணுது. நிதீஷும் முஸ்லீம் ஓட்டுக்காக வேண்டி கொஞ்சம் தள்ளித்தான் இருக்காரு. இதுல தான் நம்ம மத்திய இளவரசு சந்துல சிந்து பாடப் பாக்குறாரு. ஆட்சிக்கு வரமுடியாட்டாக் கூட எத்தனை சீட்டு புடிக்க முடியுமோ அத்தனையப் புடிச்சு நிதீஷுக்கு மெஜாரிட்டி கெடக்கலன்னா பிஜேபிக்கு முன்னாடி தான் முந்திக்கிட்டு சப்போர்ட்டா நிக்க முடிவு பண்ணிட்டாரு. ஏன்னா நிதீஷ் கையில் இருக்கு பதினெட்டு எம்.பி!”
“ஒஹோ கதை அப்படி போகுதா?” கோபி அர்த்த புஷ்டியாய் சிரித்தான்…
“அந்த பதினெட்டு எம்பி கைவசம் வந்தா … முதல்ல ராசாவுக்கு சி.பி.ஐ ஓலை வரும் . அத வச்சே எழுத்தற கழட்டி விட ப்ளான் பண்ணியிருக்காரு இளவரசர். ”
“எழுத்தற கழட்டிவிட்டுட்டு அப்புறம் என்ன பண்ணுவாங்களாம்?” – பாஸ்கி யோசிக்க…
“மதுரை மரிக்கொழுந்து வாசம் ” பாடல் ஆரம்பமாகியது…
“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது … பீகாரிலிருந்து பீரங்கி வருகுது !”
குடுகுடுப்பைக்காரனின் குரல் நடுநிசியில் கரைந்தது…..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>