/* ]]> */
Sep 202019
 

பிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது?

CATACLYSM

சூரியனின் நிறையில் பெருமளவு இருக்கும் ஹைட்ரஜன் அணுக்குக்கருப்  பிணைவு வினை மூலம் ஹீலிய அணுவாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த வினை மூலம் ஆற்றல் உருவாகி, சூரியன் ஒளியை உமிழ்கிறது. இன்னும் 500 கோடி ஆண்டுகள் கடந்தபின், சூரியனின் மையத்தில் உள்ள ஹைட்ரஜன் தீர்ந்துவிடும். அப்போது சூரியனின் மையத்தில் உள்ள ஹைட்ரஜன் தீர்ந்துவிடும். அப்போது சூரியனின் மையத்தில் அணுக்கருப் பிணவு ஏற்படாது. மையத்தில் வெப்ப ஆற்றல் இல்லாத காரணத்தால் ஈர்ப்பு விசையில் சூரியனின் மையக் கரு சுருங்கும். இதன் காரணமாக சூரியனின் மேல் அடுக்கு விரிவடைந்து சூரியன் ராட்சச வடிவம் பெறும். இதனை சிவப்பு ராட்சச விண்மீன்கள் என்பார்கள். அந்தச் சமயத்தில் நமது பூமி அழியும். இதுதான் அறிவியல் கூறும் பிரளயம். இந்தப் பிரளயம் விரைவில் வந்துவிடப் போவதில்லை.

ஆயினும், புவி வெப்பமடைதல் பருவகால மாற்றம் என, பல சவால்களை பூமி சந்தித்து வருகிறது. காற்று, நீர், வளிமண்டலம் என சுற்றுச் சூழலை மாசுபடுத்தி  நாமே பிரளயத்தை செயற்கையாக ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.

^^^^^^^^^^^^^^^^^^^^^

காளான்-65- செய்வது எபப்டி?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>