/* ]]> */
Dec 142018
 

பால் அல்வா -செய்வது எப்படி?

Image result for பால் அல்வா

தேவை:

பால்- 1 லிட்டர்;  நெய் சர்க்கரை-தலா- அரை டம்ளர்; வினிகர்- 2 மேசைக் கரண்டி.

செய்முறை:

அரை லிட்டர் பாலை அடுப்பில் வைத்துக் கய்ச்சவும். பல் பொங்கி வரும்பொது, வினிகர் சேர்க்கவும். அது திரிந்துவிடும். சரியாகத் தியாவிட்டால், மேலும் சிறிது வினிகர் சேர்கக்வும். திரிந்த பாலை நன்கு வடிகட்டி, சிறிது தண்ணீரில் அலசவும். திரும்பவும் வடிகட்டி அலசவும். வடிகட்டிய பின்னர், சிறிய கிண்ணத்தின் பின்பகுதி கொண்டு நன்கு மசிக்கவும். மிஃஸியில் அடிக்க வேண்டாம். இதுவே பனீர்.

மீதி அரை லிட்டர் பாலைக் காய்ச்சி மசித்த பனீரை அத்துடன் சேர்த்து, வற்றும் வரை  நன்கு கிளற்வும். பின்னர் சர்க்கரை சேர்த்து, மேலும் கிளறி நெய் சேர்க்கவும்.  நெய்யை நன்கு உள்ளே இழுத்துவிட்டு கக்க ஆரம்பிக்கும்போது இறக்கி, சில்வர் ட்ரேயில் கொட்டி, சற்று ஏற்ற இறக்கமாக சாய்த்து வைத்து நன்கு மூடி விடவும். 2 மனி நேரம் கழித்து துண்டு போடவும். எவர்சில்வர் ட்ரேயில் கொட்டி மூடினால், நல்ல பொன்னிறமாக நடுவிலும் மேலும்  கீழும் சற்று சிவந்தும் வரும். ட்ரேயை சற்று சாய்வாக வைப்பதால், அதிகமாக இருக்கும் நெய் வடிந்துவிடும்.பால் அல்வா தயார்.

^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  One Response to “பால் அல்வா -செய்வது எப்படி?”

  1. Super

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>