/* ]]> */
Feb 272018
 

பாலீஷ் அரிசியைத் தவிருங்கள்:

umpolished rice

  • உமி மட்டும் நீக்கப்பட்டு, தீட்டப்படாத அரிசி ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், நார்ச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச் சத்து உள்ளன. நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன.
  • உடல் எடை கூடாது. நார்ச் சத்து இருப்பதால், இதய நோயைத் தவிர்க்கும். மலச் சிக்கல் நீங்கும். பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்கும். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.
  •  மாங்கனீஸ் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். குடல் புற்றுநோய் வருவது தவிர்க்கப்படும். ’தைராய்டு’ செயல்பாட்டுக்கு நன்கு உதவும்.
  •  கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த அரிசி மிகவும் நல்லது. மார்பகப் புற்று நோய் தவிர்க்கப்படும்.
  •  அரிசியைப் பாலீஷ் செய்வதால் பாதிப்பு ஏற்படும். எல்லா சத்துக்களையும் தீட்டி வெளியில் போட்டுவிட்டு வெறும் மாவுச் சத்தை மட்டும் உண்பது கெடுதல். உடலுக்கு சக்தி கிடைத்தாலும் கலோரி கூடுதல். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்கும்.
  •  பாசுமதி அரிசி நார்ச் சத்து நிரம்பியது. இதற்கென்று தனி மணம், சுவை உண்டு. உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய குணங்களும் அடங்கியுள்ளன.
  •  பச்சரிசியில் கொழுப்பு உள்ளது. ஒல்லியானவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது. வயிறு, செரிமானத்தில் பிரச்சினை உள்ளவர்கள் பச்சரியைத் தவிர்க்கவும்.
  •  மூங்கில் அரிசி ஊட்டச் சத்து நிரம்பியது . புரதம், வைட்டமின்-டி நார்ச் சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். உடல் எடையைக் கூட்டாது.
  •  கைக்குத்தல் புழுங்கலரிசி மிகவும் நலமானது.. இதில் வடிக்கப்பட்ட சாதத்தில் இரவில் நீர் ஊற்றி, மறுநாள் காலையில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கஞ்சியாக உட்கொள்வது கிராமப் புறங்களில் வழக்கம். வயல்- காடுகளில் வேலை செய்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக சாப்பிடுவார்கள்.
  •  பழைய சாதத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் அளப்பரியது. அதன் நீராகாரம் அற்புதமானது.
  • உடல் நிலை சரியில்லாத மற்றும் உடலில் அடிபட்ட நேரங்களில் வெங்காயம் உட்கொண்டால், அதிலுள்ள இயற்கைப் பொருட்கள் நம்மைப் பாதுகாக்கிறது. புற்று நோயகளைத் தடுக்கும் தன்மையும் கோண்டது. . வெங்காயம், கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பாதுகாக்கும். சின்ன வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடும்போதுதான்  முழு மருத்துவப் பலன்களைப் பெறலாம். சமைத்தால் சத்துகள் குறைந்துவிடும். நறுக்கிவிட்டு நெடுநேரம் வைக்ககூடாது.
  •  பச்சை வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.   சர்கக்ரை நோயைக் கட்டுப்படுத்தும். ‘சைனஸ்’ தொல்லை, ஆஸ்துமா குறையும். வாயில் தொற்று கிருமிகள் அழியும். குடல் பிரச்சினை வராது.
  •  பச்சை மிளகாய் செரிமான சக்தியைக் கூட்டும். குடலில் நச்சுக்களை அகற்றும்.
  •  அரிசியில் இயற்கை முறையில் சாகுபடி செய்த பெரிய ரகமே நல்லது. சுவையானது. சின்ன அரிசியில் பலன் குறைவே.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>