/* ]]> */
Jan 022017
 

பாம்பே அல்வா- செய்வது எப்படி?

bombay-halva

தேவை:

சர்க்கரை-ஒன்றரை டம்ளர்; மக்காச் சோளமாவு-1 டம்ளர்; நெய்- ¼ டம்ளர்; புட் கலர், ஏலத்தூள், லெமன் சால்ட்- தலா கால் தேக்கரண்டி; பூசணி விதை-2 சிட்டிகை.

செய்முறை:

வெறும் வாணலியில் பூசணி விதையை வறுத்து தனியே வைக்கவும்.அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி ஒரு தம்ளர் தண்ணீர் விட்டுக் கரைய விடவும். மக்காச் சோள மாவுடன் ஒரு தம்ளர் நீர் ஊற்றிக் கரைத்து , இந்த சர்க்கரைப் பாகுடன் கலக்கவும். ஏலத்தூள், புட் கலர், பூசணி விதை, நெய், லெமன் சால்ட்டை தண்ணீரில் ஊற்றிக் கரைத்து , ஊற்றிக் கிளறி, கலவை நன்கு சுருண்டு வரும்போது இறக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும். ஆறிய பின் ஒரு தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>