/* ]]> */
Aug 132019
 

பாதுஷா –செய்வது எப்படி?

badhusha

தேவை:

மைதா மாவு-1 ½ தம்ளர்; சர்க்கரை-1 தம்ளர்னெய், பால் தலா-4 மேஜைக் கரண்டி; தயிர்-1 மேஜைக் கரண்டி; பேக்கிங் பௌடர்- அரை தேக்கரண்டி; ஏலக்காய்-2, குங்குமப்பூ -1 சிட்டிகை; எலுமிச்சை சாறு –சில துளிகள்; எண்ணெய்.

செய்முறை:

கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பௌடர், நெய், தயிர், பால் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து , மீதி சர்க்கரை , அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும். குங்குமப்பூ, எலுமிச்சை சாறு, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும்.

மாவில் சிறிய உருண்டைகள் பிடிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில்  அவற்றைப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.ஆறியதும், சர்க்கரைப் பாகு, மிதமான சூட்டில் இருக்குபோதே போட்டு, 5 நிமிடங்கள் ஊற விடவும்.

அசத்தலான சுவையில் பாதுஷா ரெடி.

******************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  2 Responses to “பாதுஷா –செய்வது எப்படி?”

  1. yuckkkkkkkkkkkkk

  2. vomit

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>