/* ]]> */
Jun 012018
 

பாதிப்புகள் இருந்தும், கடைகளில் பொருட்களை ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யக் காரணம் என்ன?

ப்ளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்தப் பைகளின் தேவை இருக்கிறது. பயன்படுத்த எளிமையாகவும், அடைத்து விற்பனை செய்ய இலகுவாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணம்  உணவுப் பொருட்கள் கெட்டு விடாமலும், பேக்கேஜிங் எளிதில் கிழியாமலும், புழு பூச்சிகள் உள்ளே செல்லாமலும் இருக்கும் என்ற கருத்தில்தான், அதிகமாக ப்ளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். முற்காலத்தில் செய்ததுபோல் பேப்பர் அல்லது இலைகளில் பொட்டலம் கட்டுவது இப்போதைய பரபரப்பான சூழலுக்கு எளிதானது அல்ல. இருந்தாலும் , பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் கழிவுகள்தான் சூழலைப் பெருமளவு பாதிக்கின்றன. ப்ளாஸ்டிக் குப்பையை எரிப்பதால், புற்று நோயை ஏற்படுத்தும் டையாக்ஸின் வாயு வெளியேறுகிறது.

^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>