/* ]]> */
Mar 272019
 

பாதாம் பர்பி- செய்வது எப்படி?

bhadam parbi

தேவை:

சர்க்கரை-400 கிராம்; பாதாம் பருப்பு-200 கிராம்; நெய்-200 மில்லி; எஸ்ஸென்ஸ்-4 துளி மற்றும் ஏலப்பொடி;

செய்முறை:

பாதாம் பருப்பை ஊற வைத்து, தோலை அகற்றி அரைத்துக்கொள்ளவும். வாணலியில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையைப் போட்டுக் காய்ச்சவும். பாகு இளம் கம்பி பதம் வந்ததும், பாதாமைக் கலந்து கிளறவும்.

இரண்டும் நன்றாகக் கலந்ததும், நெய்யை விட்டுக் கிளறவும். கலவை கெட்டியானதும், எஸ்ஸென்ஸ் விட்டு, ஏலப்பொடி கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக்கவும். பிறகு துண்டுகளாக வெட்டி சுவைக்கலாம்.

^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>