பாதங்கள் ஏன் கூசுகின்றன? கூச்சத்தைப் போக்க முடியுமா?
பாதம், கழுத்து என உடலின் சில பகுதிகளில் கிச்சுகிச்சு மூட்டும்போது , நமக்குச் சிரிப்பு வருவதுடன், உடல் தானே நெளிந்து கூச்சம் ஏற்படும். பாதம் முதலிய பகுதிகளில் மெய்சனரின் நுண்மங்கள் ( meisaners corpuscies) எனும் சிறப்பு தொடு உணர்ச்சி நரம்பு செல்கள் செறிவாக உள்ளன
மென்மையான வருடலையும் இவை உணரும் தன்மை கொண்டவை. எனவே மெல்லிய வருடலும் தீவிர உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஆனால், பாதம் முதலிய பகுதிகளில் மட்டும் இந்த நரம்புகள் செறிவாக இருப்பது ஏன்?
காட்டு விலங்காக நாம் வாழ்ந்தபோது, பூச்சிகள், புழுக்கள் நம்மீது விழுந்து நமக்கு ஆபத்தை விளைவிக்கவில்லை. அப்போது உடல் பகுதிகளில் கூச்சத்தின் மூலம் எச்சரிக்கை செய்யவே இப்படி கிச்சு கிச்சு வந்தது என்பது சிலரின் கருத்து. சிறு பூச்சி ஊர்வதையும் உணரும் தன்மை தன்னிச்சயாக உடல் நெளிவதால், , அந்தப் பூச்சியை உடனே அகற்றும் தன்மை முதலியவை பிற்காலத்தில் கிச்சு கிச்சு உணர்வாக உருவானது.
வேறு சில ஆய்வாளர்கள் கிச்சு கிச்சு மூட்டுவது என்பது நமது நண்பர்கள் உறவினர்களுடன் ஒட்டுறவு ஏற்பட பரிணாமத்தில் உருவான நிகழ்வு என்கின்றனர். குழந்தையை நாம் கொஞ்சும்போதும், குழந்தைகள் விளையாடும்போதும், கிச்சுகிச்சு மூட்டப்படுகிறது. கிச்சு கிச்சு மூட்டப்படும் பகுதிகள் உடலில் எளிதில் ஆபத்தை சந்திக்கும் பகுதிகள். எனவே கிச்சு கிச்சு மூட்டி விளையாடும்போது குழந்தை உடலின் அந்தப் பகுதிகளை தற்காப்பு செய்யப் பழகுகிறது எனவும் கூறுகின்றனர். நம்மை நாமே இதே பகுதியில் வருடும்போது நமது சிறுமூளை அந்த உணர்வு எப்படி இருக்கும் என கணித்துவிடுகிறது.
^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments