/* ]]> */
Aug 142014
 

பாக்கியராஜின் அரசியல் நைய்யாண்டி:

bakyaraj
பாக்கியராஜ் என்றாலே எல்லோருக்கும் ‘முருங்கைக்காய்தான் ஞாபகத்துக்கு வரும். அவருக்கு தன் மகன் சாந்தனு நடித்த ‘சிந்து+2′ படம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து , படம் இயக்குவதைத் தவிர்த்து கேரக்டர் நடிகராக நடிக்க ஆரம்பித்தார். தற்போது, ‘துணை முதல்வர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு கதை, திரைக்கதை வசனத்தையும் எழுதுகிறார். இந்தப் படம் இன்றைய அரசியலையும் அரசியல்வாதிகளையும் நைய்யாண்டி செய்யும் வகையில் தயாராகிறது. அதே சமயம் தன் வழக்கமான குடும்ப சமாச்சாரங்களையும் விடாமல், மலையாள நடிகை ஸ்வேதா மேனனை இந்தப் படத்தில் தன் மனைவியாக நடிகக் வைத்து, குடும்ப காட்சிகளையும் புகுத்தியுள்ளார்.
மலையாளப் படத்தில் லட்சுமி மேனன்:

lakshmi menan
லட்சுமி மேனன் மலையாளத்தில் இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பின் தமிழுக்கு வந்தவர். அதன்பின் தமிழில் வரிசையாக வெற்றிப் படங்கலில் நடித்த அவருக்கு இப்போது தாய்மொழியிலும் கொடிகட்டிப் பறக்கவேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதனால், இப்போது திலீப்புடன் ‘அவதாரம்’ என்ற படத்தில் நடித்துள்ள அவர், அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தால், இனி இரண்டு மொழி நடிகையாகிவிடலாம் என்றும், இல்லையென்றால், கோலிவுட்டில் மட்டுமே கோலோச்சலாம் என்ற முடிவில் இருக்கிறார். அதனால், சில மளையாள இயக்குனர்கள் முற்றுகையிட்டபோதும், ‘அவதாரம்’ படம் ரிலீஸுக்குப் பின் தான் முடிவு செய்வேன் என்று உறுதியாக இருக்கிறார்.
மஞ்சு வாரியார் சொத்தை திருப்பக் கொடுக்கிறார்:

manju variyar
மலையாள நடிகர் திலீப்பை விவாக ரத்து செய்யும் மஞ்சு வாரியார், அவர் கொடுத்த 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை திலீப்பிடமே திரும்ப ஒப்படைக்கிறார்.
லேட் நயந்தாரா:

NAYANTHARA NO
‘நண்பேன்டா’ படப்பிடிப்புக்கு நயந்தாரா தாமதமாக வந்தாலும், அவருக்காகக் காத்திருந்து, படப்பிடிப்பு ந்டத்துகிறார், உதயநிதி.
^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>