/* ]]> */
Apr 192012
 
mgr

 

ந்த வருடம் வெளியான படங்களில் “ கர்ணன் ” சிறிய முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டியிருப்பது திரைத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பதோடு , கர்ணன் போல ஏற்கனவே பெரிய வெற்றியடைந்த படங்களை மீண்டும் மறு வெளியீடு செய்வதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபடவும் வைத்திருக்கிறது … இது போன்று எல்லா படங்களையும் மறு வெளியீடு செய்வார்களா என்று தெரியவில்லை , ஆனால் ஒரு ரசிகனாக நான் திரையில் பார்க்க விரும்பும் எவர் கிரீன் படங்களின் பட்டியல் இதோ :

சந்திரலேகா

எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு , இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு $ 600000 /. பட்ஜெட்டில் அந்த காலகட்டத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசான முதல் தமிழ் படம் ” சந்திரலேகா ” .எம்.கே.ராதா ,டி.ஆர்.ராஜகுமாரி ரஞ்சன் , என்.எஸ்,கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இப்படம் பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் என்றே சொல்லலாம்…

வீர பாண்டிய கட்டபொம்மன்

பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் ஜெமினி கணேசன் , பத்மினி உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து  1959 ஆம் ஆண்டு வெளியான ” வீர பாண்டிய கட்டபொம்மன் ” வசூலில் சக்கை போடு போட்டதுடன் நடிகர் திலகத்திற்கு ஆசிய – ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது … ஆக்ஸ் துறையுடன் சிம்ம குரலில் சிவாஜி பேசிய வசனங்களை பெரிய திரையில் பார்ப்பது போல நினைத்து பார்த்தாலே உடல் புல்லரிக்கிறது …

திருவிளையாடல்

சிவாஜி - சாவித்திரி ஜோடியில் வெளி வந்த மற்றுமொரு வெற்றி படம் ” திருவிளையாடல் ” … ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான படத்தில் எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் இருந்தாலும் என்றுமே நினைவில் நீங்காமல் இருப்பது சிவபெருமானாக நடித்த சிவாஜிக்கும் , தருமியாக நடித்த நாகேசுக்கும் இடையேயான வசனங்களும் , பால முரளி கிருஷ்ணா குரலில் “ ஒரு நாள் போதுமா ” பாடலும் …

ஆயிரத்தில் ஒருவன்

சிறு வயதிலிருந்தே நான் சிவாஜி ரசிகனாக இருந்தாலும் எம்.ஜி.ஆரை பார்த்து முற்றிலும் பிரமித்த படம் ” ஆயிரத்தில் ஒருவன் ” …1965  இல் சிவாஜிக்கு ஒரு திருவிளையாடல் என்றால் எம்.ஜி.ஆருக்கு ” ஆயிரத்தில் ஒருவன் ” … எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா , நம்பியார் , நாகேஷ் போன்றவர்களின் நடிப்பிற்காகவும் ,விஸ்வநாதன்  ராமமூர்த்தி இசையில் வாலி எழுதிய கருத்தாழம் மிக்க பாடல்களுக்காகவும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் …

http://4.bp.blogspot.com/-g8yZdok3pNc/T46h5sJJjPI/AAAAAAAAAyw/KwkG0IsXys4/s400/enga.jpeg

எங்க வீட்டு பிள்ளை

டபுள் ஆக்டிங்கில் ஆள் மாறாட்டத்தை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அவை எவையும் ” எங்க வீட்டு பிள்ளை ” யை மிஞ்ச முடியாது. வாலியின் வரிகளில் “ நான் ஆணையிட்டால் ” பாடல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக போவதை மக்களுக்கு முன் கூட்டியே உணர்த்தியது …

காதலிக்க நேரமில்லை

பெரிய ஹீரோக்கள் படம் மட்டும் தான் மனதில் நிற்க வேண்டுமா ? நிச்சயம் இல்லை என்று ” காதலிக்க நேரமில்லை ” படம் பார்த்த அனைவரும் சொல்வார்கள் … அறிமுக ஹீரோ ரவிச்சந்திரன் , காஞ்சனா , முத்துராமன் , நாகேஷ் இவர்கள் கூட்டணியுடன் , விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையும், ஸ்ரீதரின் இயக்கமும் யாரமையுமே படம் பார்க்க நேரமில்லை என்று சொல்ல வைக்காது … நாகேஷ் , பாலையாவிடம் சொல்லும் பேய் கதையை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும் …

 

அதே கண்கள் 

ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த ரவிச்சந்திரனை ஆக்சன் ஹீரோவாகவும் ஆக்கிய அருமையான த்ரில்லர் படம் ” அதே கண்கள் ” , த்ரில்லர் படமாக இருந்தாலும் நாகேஷ் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம் …


16 வயதினிலே

ரஜினி , கமல் இருவரும் இணைந்து நடித்த எத்தனையோ படங்களுள் அவர்களின் நடிப்புக்காக மட்டுமின்றி , வெறும் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளி உலகுக்கு எடுத்து வந்த ட்ரென்ட் செட்டர் பாரதிராஜாவின் இயக்கத்திற்காகவும் இன்றளவும் பேசப்படும் படம் ” 16  வயதினிலே ” … இவை தவிர மயிலாக ஸ்ரீதேவியின் நடிப்பு , கவுண்ட மணியின் அறிமுகம் , இசைஞானியின் இசை இவையெல்லாம் படத்தின் மற்ற சிறப்பம்சங்கள் …

நாயகன்

தமிழ் சினிமாவின் நாடகத்தனத்தை உடைத்ததில் பாரதிராஜா ஒரு ட்ரென்ட் செட்டர் என்றால் அதை ” நாயகன் ” படத்தின் மூலம் தொழில் நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற விதத்தில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட் செட்டர் … கமல் , தோட்டா தரணி , பி.சி.ஸ்ரீராம் இவர்களுக்கெல்லாம் இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்ததில் சந்தோஷம் என்றாலும் இசைஞானிக்கு கிடைக்காமல் போனது காலத்திற்கும் மனதில் நிற்கும் வருத்தம் …

பாட்ஷா

எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் ” ரஜினிகாந்த் ” … அவரை மாஸ் ஹீரோவாக முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ” பாட்ஷா ” தான் மாஸ் ஹீரோயிசத்தின் உச்சக்கட்டம் … “ நான் ஒரு தடவ சொன்னா ” என்ற பாலகுமாரனின் வசனத்தை சூப்பர் ஸ்டார் சொல்லி கோடி தடவை கூட கேட்கலாம் … எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ” பாட்ஷா ” …

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>