/* ]]> */
Dec 062019
 

பறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது?

பேசும் கிளி

நைட்டிங்கேல் மற்றும் குயில் போன்ற பறவைகள் பாடும் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பறவைகளால் வார்த்தைகளை உச்சரிக்க முடியாது. இதனால், குயிலுக்கும் கிளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வீட்டில் வளரும் கிளி நமது பேச்சைக் கேட்டுப் பழகி, ஏறக்குறையை பேச்சைப் பின்பற்றி, அதே போன்று ஒலி எழுப்புகின்றன.

இதைத்தான் கிளி பேசுகிறது என்கிறோம். பயிற்சி அளித்தால், சில வார்த்தைகளைக் கூட பிழையில்லாமல் கிளி உச்சரிக்கும். வேறு சில பறவைகளுக்கும் இந்தத் திறன் உண்டு. கிளிகள் எவ்வாறு குரலை உள்வாங்கிக் கொள்கின்றன? உள்வாங்கிய குரலையும், வார்த்தைகளையும் எவ்வாறு பின்பற்றி, அதே போன்று ஒலி எழுப்புகின்றன? இதன்மீது ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

குயில் போல ஒலி எழுப்பக்கூடிய பறவைகளின் மூளைப் பகுதியைவிட மனிதக் குரல்களைப் பாசாங்கு செய்யும் கிளி போன்ற பறவைகளின் மூளை அமைப்பு சற்றே தடித்த அளவில் உள்ளது.  தற்செயலாக மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவே இந்தப் பரிணாமம் என்கிறார்கள். இதே போன்ற ஒரு தற்செயல் பரிணாம மரபணு மாற்றம்தான் மனிதர்களுக்கும் பேசும் திறன் அளித்துள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>