/* ]]> */
Mar 162018
 

பனீர் பரோட்டா- செய்வது எப்படி?

paneer parotta

தேவை:

கோதுமை மாவு-1 தம்ளர்; துருவிய பனீர்- அரை தம்ளர்; பச்சை மிளகாய்-1; தனியாத் தூள், ‘சாட்’ மசாலாத் தூள், ஜீரகத் தூள், கரம் மசாலாத் தூள்- தலா ½ கரண்டி; எண்ணெய், உப்பு.

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.  பனீருடன், உப்பு, தனியாத் தூள், சீரகத் தூள், ‘சாட்’ மசாலாத் தூள், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே பூரணம்.

மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, கிண்ணம் போல் செய்து , அதன் நடுவே ஒரு தேக்கரண்டி பூரணத்தை வைத்து மூடவும். பிறகு சற்று கனமான பரோட்டாக்களாகத் தட்டவும். தோசைக் கல்லை சூடாக்கிப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>