ப்ளாக் உலகம் – பதிவர் கிசுகிசு பதிவுலக
சீக்ரெட் ரவுண்டப்
பிரபல சக்க போடும் ப்ளாக்கரின் சமீபத்திய பதிவு பதிவுலகின் பண்டோரா பாக்ஸை திறந்து விட்டிருக்கிறது. வழக்கமாய் பொறுமை காத்து நம்மை அட்ரா போட்டு சிரிக்க வைக்கும் அந்த ப்ளாக்கர், சிரிப்பும் நையாண்டியுமாய் ஒரு சக பதிவரிடம் அவர் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் பதிவு தான் லேட்டஸ்ட் பரபரப்பு. கொஞ்ச நாளாகவே காபி பேஸ்டுக்கு எதிராக ஐடியாவோடு மணி கட்டிய பதிவர் அதோடு நிறுத்தாமல் பிரபல திரட்டிகளுக்கும் காபி பேஸ்ட் ப்ளாக்குகளை தடை செய்ய வேண்டும் என கூக்குறலிட்டதுதான் பிரச்சினைக்கு காரணம். கூக்குரலிட்டதோடு நிறுத்தாமல் சில வார்த்தைகளையும் விட்டதுதான் ஆனா ஆவன்னா பளாக்கர், சவுண்டான பளாக்கரோடு சக்க போடும் ப்ளாக்கரையும் உசுப்பி விட்டதாம்.. ஆனாலும் “திரட்டிகள் முடிவு வரட்டும், அப்புறம் பார்க்கலாம்” என ப்ளான் பண்ணுகிறாராம் ஐடியா பதிவர். வடை ஓட்டையாயிருந்தாலும் ருசியாயிருக்கு என அவர் தரப்பு நியாங்களையும் சிலர் ஆதரிக்கிறார்களாம்.
பிரபல பெண் பதிவர் என தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் அந்த லண்டன் பெண் பதிவர் எவ்வளவு பரபரப்பாய் கவிதைகள் எழுதினாலும் போணியாகவில்லை. ஆதலால் இப்போது லேட்ட்ஸ்ட் இலக்கிய ட்ரெண்டான உடல் உறுப்புக்களை வைத்து எழுதும் அற்புத புரட்சி கவிதைகளை எழுத ஆரம்பித்துவிட்டார். அட, இது புதுசா இருக்கே என ஆரம்பத்தில் பெண் பதிவர் கவிதைகளை திரட்டிக்களில் பிரபலப்படுத்திய சக பதிவர்கள் போகப் போக பெண் பதிவரின் கவிதைகள் அனாடமி க்ளாஸ் ரேஞ்சுக்கு இருக்க , அவ்வ்வ்வ்வ்வ் என அலறி புறக்கணிக்க , எதுக்குமே அடங்க மாட்டேங்கறாங்களே . இனிமே எதப்பத்தி எளுதலாம்” என புரட்சியாய் ரூம் போடாமலே யோசிக்கிறார் பெண் பதிவர்.
பிரபல கவுண்டமணி ரசிக ஹன்னி கோமசாமி தமில் கண திரட்டியைத் தாக்கி பதிவு போட்டாலும் போட்டார், இப்ப பதிவுலகில் பலர் தமில் கனம் ரூல்ஸ் ரொம்ப கனம் என ஓப்பனாகவே புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். எங்கே தங்களையும் தமில் கனம் நீக்கிவிடுமோ என பயந்து பதிவாக போடாமல் இருக்கிறார்கலே தவிர தங்களுக்குள் பின்னிட்டாரு ஹன்னி என சிலாகிக்கிறார்களாம். சிலர், ஹன்னி அவ்வளவு தில்லானவர்னா அத தன்னோட பிளாக்குல போட வேண்டியதுதான , ஏண் குருப்பு ப்ளாக்குல கும்மியடிச்சாருன்ன என ஹன்னியை வாருகிறார்களாம் .
tags : ப்ளாக்கர்ஸ், பதிவர்கள், வலைப் பதிவர்கள், ப்ளாக்ஸ், தமிழ் ப்ளாக்ஸ், தமிழ் பதிவர்கள், tamil blogs, blogger blogs, bloggers, thiratti, aggregators, tamil blog aggregators
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments