/* ]]> */
Oct 292010
 

பதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை பேட்டி கண்டா ( எடக்கு மடக்கா கேள்வி கேட்டா ) அவங்க என்ன செய்வாங்கன்னு பாக்கறதுதான் இந்த “பதிவர்கள் பேட்டி ” பகுதி. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது சி.பி.செந்தில்குமார்…..”அட்ரா சக்க” என்ற வலைப்பூவில் சக்கை போடு போடுபவர் தான் சி.பி.செந்தில்குமார்… சி.பியின் ஸ்பெஷாலிடி… ஜனரஞ்சக ஸ்டைல்… டீக்கைடை பெஞ்சு தலைப்புகள்…. பிட்டு படம் முதல் அட்டு ஃபிகர் வரை புட்டு புட்டு வைக்கிறார்…இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்…

1. ஹைக்கூலேர்ந்து ஹாலிவுட் வரை எல்லாம் தெரிஞ்ச மாதிரியே எழுதறீங்களே , அது எப்படி பாஸ் ?

எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.

2. ப்ரொஃபைல்ல பத்திரிக்கை துறைன்னு போட்டிருக்கே என்ன பத்திரிக்கை?

ஹி ஹி எல்லா பத்திரிக்கைக்கும் எழுதறேன்,நான் ஒரு ஃபிரீலேன்ஸ் எழுத்தாளன் (ஆனா காசு குடுத்தா வாங்கிக்குவேன்).என் படைப்புகள் அதிகமா வந்தது பாக்யா,ஆனந்த விகடன் (இது நாங்க கேட்டமா?னு கேக்கக்கூடாது ஒரு ஃபுளோவுல வந்துடுச்சு.

3. தேவ லீலை பட விமர்சனம் உங்க ப்ளாக்லயே படிச்சுட்டோம்.. படம் பார்த்த அனுபத்த எங்ககிட்ட சொல்லுங்க…
ஹி ஹி பப்ளிக் பப்ளிக்,ஆஃப் த ரெக்கார்டா சொல்றேன்,வெளியிட்டு மானத்தை வாங்கிடாதீங்க.ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல அந்த படம் பார்த்தேன்.பொதுவா இந்த மாதிரி படம் நைட் ஷோ தான் போறது,எல்லாம் யாரும் பார்த்துடக்கூடாதுனு ஒரு பயம்தான்.முதல்லியே போயிட்டாலும் படம் போட்டு 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே ;போகனும்,இது சீன் படம் பாக்கறதுக்கான எழுதப்படாத ரூல்.ஓப்பனிங்க்ல சீன் இருந்தா முதல்லியே போயிடனும்,டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே கேட்டா விபரம் சொல்லிடுவார்.மத்த படம் செகண்ட் கிளாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான் போவோம் ஆனா இந்த மாதிரி படத்துக்கு அது ஆபத்து,பின்னால இருந்து யார் நம்மை பாக்கறாஙகனு தெரியாம போயிடும்.சோ பால்கனில கடைசி ரோ.பெரிசா சீன் இல்லைன்னாலும் இந்த மாதிரி படத்துக்கு சுவராஸ்யமே படத்துல சீன் இருக்கா ?இல்லையா?இருந்தாலும் கட் பண்ணாம போடுவாங்களா?பிட் ஏதாவது சேத்துவாங்களா?இப்படி பல எதிர்பார்ப்புகளோட போவோம்.பி பி எகிறிடும்.இடைவேளை விட்டதும் லைட் போடறப்ப ஒரு புக்கை வெச்சு முகத்தை மூடிக்கனும் (படிக்கற மாதிரி).படம் விடறதுக்கு 10 நிமிஷம் முன்னால கிளம்பிடனும்.பைக் எடுக்கனுமே?பெரும்பாலும் இந்த மாதிரி படத்துல கிளைமாக்ஸ்ல சீன் இருக்காது. (விதி விலக்கு ஏ மேன் அன்ட் டூ விமன்).
4. அந்த ஏடாகூடா ஜோக்குங்களையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க நண்பா ?

பெரும்பாலும் சொந்த சரக்கு தான்,சரக்கு இல்லைன்னா இங்கிலீஷ்,ஹிந்தி புக் படிப்பேன்.எம் ஏ ஹிந்தி படிச்சது இதுக்குதான் உதவுது.ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்
5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.

6. கலாய்ப்பதற்கு ரொம்ப வாட்டமா இருக்கற ஹீரோ யாரு ? தலயா தளபதியா?

சந்தேகமே வேணாம்,தளபதிதான்

7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே… எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி
8. ப்ரொஃபைல்ல பி.எஸ்.ஸீ மேத்சுன்னு போட்டுட்டு ஆனா கணக்கெல்லாம் 18 + ஆகவே இருக்கே… அதப்பத்தி..
பிளஸ் டூ படிக்கறப்ப சயின்ஸ் டீச்சர் செந்தாமரை செல்வி,தேவி டீச்சர் இவங்களை மேத்தமேட்டிக்ஸ் பண்ண நினைச்சேன்,நடக்கலை,நாம் கணக்குல இவ்வளவு வீக்கான்னு கோபத்துல அந்த சப்ஜெக்ட் எடுத்தேன்.
9. தொடங்கி சில மாதங்கள்ளயே உங்க வலைப்பூவோட அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்குது ? புது பதிவர்களுக்கு அட்வைஸ்…

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.
அப்புறம் நான் ஒண்னு கவனிச்சேன்,பெரும்பாலும் எல்லாரும் நேரம் கிடைக்கறப்ப பதிவு போடறாங்க.ரெகுலரா ஒரு டைம் வெச்சுக்கனும்.தினமும் காலை 7 டூ 8 நான் பதிவு போட்டுடுவேன்.ஆஃபீஸ் ல இருந்து வந்து பார்ப்பேன் விசிட்டர்ஸ் டு டே 500 தாண்டிடுச்சுன்னா விட்டுடுவேன்.குறைஞ்சிருந்தா பதிவு ஊத்திக்குச்சுனு அர்த்தம்,மாலை அல்லது இரவு இன்னொரு பதிவு போட்டுடுவேன்

10. உங்க பதிவுகள்ள உங்களுக்கு பிடிச்ச மூணு லிங்க் கொடுங்க…

கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?
கேனை டிவி வழங்கும் கெக்கெக்கே பிக்கெக்கே விருதுகள்
கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை

இது போக கடும் எதிர்ப்பை சந்தித்த பதிவு
அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.

மூன்றாம் கோணத்திற்கு பேட்டியளித்த சி.பி.க்கு நன்றி. இந்த ஈரோட்டுப் பதிவர் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>