/* ]]> */
Apr 012011
 

 

ஜெனிலியா

ஜெனிலியா

 

1. தற்போது விளம்பரங்களில் அதிகம் நடிப்பது, ஜெனிலியாவாம். படங்களில் நடிப்பதைவிட விளம்பரங்கள் மூலம் நாடு முழுவதும் ரீச்சாம்.

 

 

sana khan

2. தம்மடிக்கிறமாதிரி நடித்த நடிகை சனாகானிடம், பத்திரிக்கை நிருபர்கள் ”நிஜத்தில் பெண்கள் தம்மடிக்கிறதுபற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டதற்கு, ”பெண்கள் ஒரு நாளைக்கு ஒண்ணு, ரெண்டு சிகரெட் குடிச்சா தப்பில்லை. ஏன்னா உடம்பு ஸ்லிம்மாவதற்கு சிறந்த வழி அதுதான்.”என்றார் சனா. ஃப்ரெண்டுங்களுக்கு வீட்ல பார்ட்டி கொடுப்பேன்னு சொன்னதுக்கே நடிகை அமலாவை ‘பிடி பிடி’ன்னு பிடிச்ச அரசியல் கட்சியெல்லாம் இங்க இருக்குங்கறது, ஐய்யோ பாவம் சனாவுக்குத் தெரியல.

3. ‘சூழ்நிலை’ என்ற படத்தில் நடிக்க, சரியான வில்லன் கிடைக்காததால். படத்தின் இசையமைப்பாளர் தினாவையே வில்லனா நடிக்க வச்சிட்டாங்களாம். பாட்டு பாடியே ரூட்டும் மாறியாச்சு.

vijay

4. அம்மாடியோவ்! விஜய்,விக்ரம் நடிப்பில், மனிரத்னம் இயக்கும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பட்ஜெட் 207 கோடி ரூபாயாம். ‘எந்திரன்’ படத்துக்குப் போட்டியா வெளியிடுதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சரித்திரப்படம் என்பதால் அதில் நடிக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு என்பவரை நீளமாக முடி வளர்க்கச் சொல்லியிருக்கிறாராம் மணி! விஜய் ,புத்தகமும் கையுமாக இருக்கிறாராம்.

5. ஜோதிகா நடித்த படங்களில் சூர்யா அதிகம் விரும்புவது,’காக்க காக்க’, ‘மொழி’, ‘சந்திரமுகி’ ஆகிய படங்களாம். அதிலும், ‘மொழி’ ரொம்பவே இன்ஸ்பயரிங்காம்.

Asin - Salman Khan

6. தாய்லாந்திலுள்ள ஹோட்டல் மெனுக்களில் பூச்சிகள்தான் ஸ்பெஷல். ‘ரெடி’ பட ஷூட்டிங்கின்போது, உடனிருந்த சல்மான் , அங்கு பறந்துகொண்டிருந்த பூச்சிகளைப் பிடித்து அசின் முன் நீட்டி ‘இதை உன்னால் சாப்பிட முடியுமா?’ என்று சவால் விட்டதும் , சளைக்காத அசின் உடனே சவாலை நிறைவேற்றி விட்டாராம். பார்ரா!

7. விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம், உலகை உலுக்கிய ஜூலியன் அசாஞ்சேவின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட் சினிமாவாகிறதாம். ‘ஜுராசிக் பார்க்’ இயக்கிய, ஸ்டீவன் ஸ்பீல்தான் டைரக்டராம். இந்த சினிமா அமெரிக்காவுக்கு இனிமாவாம்.

bhavna

8. கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக பாவனா நடித்த ‘ஜாக்கி’ படம் செஞ்சுரி அடித்தபிறகும் பட்டையைக் கிளப்புதாம். தனது அடுத்த படத்துக்கும் பாவனாவையே புக் செய்திருக்கிறா, புனித். கன்னட ஹீரோக்களிடையே பாவானாவோட நடிக்க ஏக போட்டியாம்.

Shilpa Shetty

9. தமிழ் ‘செம்மொழி மாநாடு’ போல,கர்நாடகாவில் நடக்கவுள்ள,உலக கன்னட மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக ஐஸ்வர்யாராய், மற்றும் ஷில்பா ஷெட்டியை அழைக்கச் சொல்லியிருக்கிறாராம், முதல்வர் எடியூரப்பா.

10. புதிய பட வாய்ப்புகளுக்காக ஃபோட்டோ செஷன் நடத்துவது உண்டு. த்ரில்லிங் போஸ்களில் ஃபோட்டோ எடுத்துத் தள்ளிட்டாராம் இவர். ; ‘எனது ரசிகர்களின் வட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அவர்களைக் குறி வைத்துத்தான் இந்த ஷூட்.’ என்கிறாரம், 42 வயது ஜெனிஃபர் அனிஸ்டன்!.

11. ஸ்பானர் வச்சி கழட்டி முடுக்கினாலும், படத்தை சேதமில்லாம டெலிகாஸ்ட் பண்ண முடியாதாம். அப்படிப்பட்ட ‘நடுநிசி நாய்கள்’ படத்தை 1 கோடியே 90 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி விட்டதாம், விஜய் டி.வி.!பிறகுதான் தெரிந்ததாம் வில்லங்கம். படத்தின் ஹீரோ வீராவும், தன் பங்குக்கு, பெரும் தொகை ஒன்றைக் கௌதமிடம் கொடுத்தாராம். ஆக, ஓடவே ஓடாத படத்துக்கு நினைத்தே பார்க்க முடியாத லாபம்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>