/* ]]> */
Feb 012019
 

பஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி?

பஞ்சாப் மட்டன் கறி-

தேவை:

மட்டன்; உப்பு, இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா- 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், தயிர், நெய், 1 லவங்கம், காய்ந்த மிளகாய், பட்டை, மிளகு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, ஏலக்காய், தனியா விதைகள்,

மட்டனை விரும்பிய அளவில் துண்டுகளாக வெட்டி , நன்கு  சுத்தம் செய்துகொள்ளவும். நீரை வடித்து, உப்பு, இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா- 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும் . இதில் தயிர் சேர்த்துப் பிசைந்து , 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு குக்கரில் 3 ஸ்பூன் நெய் விட்டு , மிதமன சூட்டில் 1 லவங்கம், காய்ந்த மிளகாய், பட்டை, மிளகு சேர்த்து வறுக்கவும். மசாலா வாசனை  வந்தவுடன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து,  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து,  பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.. அடுப்பை அணைத்துவிட்டு  நறுக்கிய தக்காளியுடன்  வதக்கிய கலவையைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் நெய் விட்டு  அதில், 1 லவங்கம், பட்டை, ஏலக்காய் மிளகாய் வற்றல், தனியா விதைகள் போட்டு , பொன் நிறமாக வதக்கி அதில் அரைத்த கலவையைச் சேர்த்து , மிதமான சூட்டில் 10 நுமிடங்கள்  கிளறவும்..  இதில் தயிரில் ஊறும் மட்டனைப் போட்டு கலந்து கிளறி  மூடி போட்டு மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் வேக விடவும்.

திறந்து பார்த்தால்,  நெய் பிரிந்து மேலே வந்திருக்கும்.  இந்த நிலையில் தண்ணீர் சேர்த்து , கலந்து குக்கரில் 2 விசில் வரும்வரை வேக விடவும்.

ப்ரஷர் வெளியேறியவுடன் , மட்டன் குழம்பு நெய்யுடன் சேர்ந்து நாக்கில் நீர் ஊற வைக்கும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி,  சாதம்  என்று  எதனோடும் சாப்பிடலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^

.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>