பசிபிக் பகுதிகளில் நில அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் ஏன் அதிக அளவில் ஏற்படுகின்றன?
பூமியின் நடுவில் உருகிய இளகிய நிலையில் இரும்பு போன்ற பொருட்கல் உள்ளன. அதன் மேலே குழம்பு நிலையில் ஒரு அடுக்கு. அதற்கு மேலே முட்டையின் ஓடு போன்றதுபுவித் தட்டு. னிலம் மற்றும் கடல் பகுதிகள் எல்லாம் புவித் தட்டு மீதே உள்ளன.
புவித் தட்டின் அடியில் குழம்பு நிலையில் பாறைகள் உள்ளன. அவற்றின் மீது வழுக்கியபடி, புவித் தட்டு நகர்ந்துகொண்டே இருக்கும். இரண்டு புவித்தட்டு சில்லுகள் ஒன்றையொன்று உரசினால், நிலனடுக்கம் அல்லது எரிமலை ஏற்படும்.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றி, இந்த எல்லைப் பகுதி இருக்கிறது. இதையே பசிபிக் எரிமலை வளையம் என்பார்கள் வளையம் என்றாலும் இதன் உருவம் குதிரை லாடம் போலவே இதன் நீளம் சுமார் 40,000 கி.மீ. இந்த வளையத்தைச் சுற்றி, 472 எரிமலைகள் உள்ளன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் இமயமலைப் பகுதியில்தான் இந்தியா மற்றும் சீனாவின் புவித் தட்டுகள் மோதுகின்றன. எனவேதான் , அங்கே அதிக அளவில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.
*****************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments