பங்குனி உத்திரம் பேரூர் தேர் திருவிழா..



கோவையை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய பட்டீசுவரர் உடனமர் பச்சைநாயகி அம்மனுக்கு, அரை கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டு ,5,449 சிறியரக கோகினூர் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு, தாமரை மலரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த வைரக்கிரீடம் சுவாமிக்கு பொருந்தும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ள,40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக்கிரீடம்வழங்கியுள்ளார்..


கோவை மாவட்டத்தில், அவிநாசித்தேருக்கு அடுத்தபடியாக,மேலைச்சிதம்பரம் என்ச் சிறப்பிக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர், மிகப்பெரியதாகும். வட்ட வடிவமான அமைப்பு கொண்ட இத்தேரில்,சிவனின் 27 அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில், கலையம்சத்துடன் கூடிய மரச்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய இரும்பிலான சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனிஉத்திர தேரோட்டம் வெகு சிறப்பாகும்..
பட்டீஸ்வரர், பச்சைநாயகி சமேதரராக திருத்தேரில் எழுந்தருளி கோவிலைச்சுற்றி திருவீதி உலா வந்து,பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, 10 நாள் உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவில் தினந்தோறும் வேள்வி பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, தேவார இன்னிசை,அதிமூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு, மலர் பல்லக்கு, சூர்ய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், மலர் ரதம், காமதேனு வாகனம் உலா, பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகன காட்சி அறுபத்து மூவர் காட்சி , திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி யானை சேவை பூஜைகள் அருள் பொழியும்…...

அழகிய பேரூர் திருக்குளம்..பதினாறு வளைவுகள் கொண்டது..பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒன்பதாம் நடைபெறும் இந்திர விமானத் தெப்பத்திருவிழா கண்கொள்ளாக் காட்சி..
மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோயிலில் பங்குனி உத்திரத் திரு நாளில் சிறப்பான முறையில்ஸ்கந்த யாகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும்..
பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திகழும் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி திருவிழா …





மிக அருமையான ஆன்மிக பதிவு ராஜேஸ்வரி ! நன்றி !
மிக அருமையான ஆன்மிக பதிவு ராஜேஸ்வரி ! நன்றி !
ரொம்பவே அருமையான பதிவு ராஜேஷ்வரி .. புகைப்படங்கள் அழகு ..
ரொம்பவே அருமையான பதிவு ராஜேஷ்வரி .. புகைப்படங்கள் அழகு ..