/* ]]> */
Nov 082011
 

பகவத் கீதை

ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ருணு।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி॥ 2.39 ॥

சாங்கிய தத்துவத்துவத்தைப் பத்தி இதுவரைக்கும் சொல்லிட்டிருந்தேன்! முடிவைப் பற்றி கவலைப்படாம எப்படி செயல்படணும்ணு இப்ப சொல்றேன் கேள் ! அப்படி செயல்பட்டா, முடிவுகளைப் பத்தி யோசிச்சு அதனால ஏற்படுற மன அழுத்ததுலேர்ந்து உனக்கு விடுதலை கிடைக்கும்! ட்ரை பண்ணி பார்க்கலாமா?

 

நேஹாபிக்ரமநாஷோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்॥ 2.40 ॥

 

இப்படி முயற்சி செய்யறதுனால ஒரு குறையும் குழப்பமும் இல்லை. பார்க்கப் போனா, இப்படி ட்ரை பண்றதால முன்னேற்றம் கிடைக்கும் ! மனச ஆட்டிப்படக்கிற டென்ஷன இது விரட்டும்!

 

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந।
பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோ அவ்யவஸாயிநாம்॥ 2.41 ॥

 

இந்த வழியில போறவங்க நோக்கத்துல உறுதியா இருப்பாங்க.. அவங்க லட்சியம் ஒண்ணாத்தான் இருக்கும்! உறுதி மனசுல இல்லன்னா மனசும் அறிவும் கிளை கிளையா பிரிஞ்சு போகும்!

 

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சித:।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:॥ 2.42 ॥
காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்।
க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி॥ 2.43 ॥

 

மனசு மெச்சூரிட்டி இல்லாதவங்க வேதத்துல சொல்லப்பட்டிருக்கற இனிப்பான வார்த்தகளால கவரப்படுறாங்க. சில வேதங்களும் சொர்க்கம் கிடைக்கறது, அடுத்த ஜென்மத்துல யோகக்காரனா பிறப்பது, அதிகாரமுள்ள பதவி கிடைக்கறதுன்னு பலன்களுக்காக சில செயல்களை செய்யணும்னு சொல்லி சிபாரிசு பண்ணுது. உடம்பால கிடைக்கற சுகத்தையும் பணத்தால அடையுற கிளர்ச்சியையும் விரும்புறவங்க இதைவிட உயர்ந்த பலன் இல்லன்னு அதையே விரும்புறாங்க!

 

போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே॥ 2.44 ॥

உடம்பு மோகம், பணத்தாசை இந்த ரெண்டும் அதிகமா இருக்குறவங்க மனசுல பரம்பொருள் மேல பக்தி வச்சு தொண்டு செய்யுற மன உறுதி உண்டாகறதில்ல

 

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥

வேதங்கள் பொதுவா மூணு இயற்கை குணங்களை பத்தி சொல்லும்… படைப்பது, அழிப்பது, காப்பது. ஆனா இந்த மூணையும் தாண்டி நீ முன்னேறணும் அர்ஜுனா! வெளியில இருக்குற இன்பம் துன்பம் அப்படிங்கற இரட்டை சக்திகளிலிருந்தும் விடுபட்டு, உனக்குள்ள இருக்குற உண்மையான நிலையான இன்பத்த நீ அடையணும் !

 

யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥

 

ஒரு சின்னக் கிணறுல தண்ணி கிடுக்கும்னா, நிச்சயமா ஒரு பெரிய குளத்துலயும் அந்த தண்ணி கிடைக்கும். அதே மாதிரி, வேதத்துலேர்ந்து கிடைக்குற நன்மைங்கறது அந்த வேதங்கள் எதுக்காக எழுதப்பட்டதோ அந்த நோக்கத்தை புரிஞ்சவனால நிச்சயமா அந்த வேதத்தோட நன்மைகள் நேரிடையாவே கிடைக்கும் !

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥

உனக்குன்னு என்ன கடமை விதிச்சுருக்கோ, அத செய்யத்தான் உனக்கு உரிமை இருக்கு ! ஆனா அந்த செயல்லேருந்து கிடைக்குற பலன்ல உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதே மாதிரி உன்னோட செயல்கள்னால ஏற்படுற வெற்றிக்கோ தோல்விக்கோ நீ காரணமும் கிடையாது. ஜெயிப்போமோ தோற்போமான்னு யோசிச்சு ஒரு கடமையே செய்யாம இருக்கறதும் தப்பு. ஆக, பலனப் பத்தி கவலப்படாம உனக்கு விதிச்சுருக்குற கடமைய செய் அர்ஜுனா !

 

tags : bhagwat gita in tamil, tamil Gita, Gita tamil, Geethai, bagawat geethai, bhagavat geethai, பகவத் கீதை, பகவத்கீதை, கீதை, அர்ஜுனன், கிருஷ்ணன், கடமை, பலன், அர்ஜுனா, எளிய கீதை


ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>