/* ]]> */
Nov 272011
 
பகவத் கீதை

பகவத் கீதை

 

பகவத் கீதை – மன முதிர்ச்சி அடைவது எப்படி?

 

யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥

வெற்றி தோல்வி அப்டிங்கற கவலைய விட்டுட்டு செய்கிற கடமைய மட்டுமே மனசில வச்சி உறுதியா அந்தக் கடமையை செய்யணும் அர்ஜுனா. அப்படி காண்சன்ட்றேஷனோட, மன ஒருமித்தலோட கடமை செய்யறதுக்கு பேருதான் யோகம் . (இப்ப புழக்கத்தில இருக்குற அதிர்ஷ்டம்கற அர்தத்துல வர்ர யோகம் இல்லை இது. யோகா அப்படின்னு இப்ப சொல்றோமே, அந்த அர்த்தம். இங்க குறிப்பிடுற யோகா உடலை விட அதிகம் மனப்பயிற்சி சம்பந்தப்பட்டது.)

தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநம்ஜய।
புத்தௌ ஷரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:॥ 2.49 ॥

பக்திங்கறது என்ன அர்ஜுனா? பலனை எதிர்பார்க்காம பக்தியோட அவன் மேல பாரத்தப் போட்டு கடமை செய்யறதுன்னு வச்சுக்கோயேன் ! அது தானே கடவுள்கிட்ட நாம காட்டுற உணமையான சரணாகதி ! அத விட்டுட்டு தான் செற கடமையெல்லாம் கணக்கு வச்சு ஒவ்வொரு கடமைக்கும் பலனை எதிர்பார்க்குறது… கஞ்சத்தனம் இல்லையா ?

 

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50 ॥

இந்த மாதிரி பக்தி காஅடுறவன் ( அதாவது சரணாகதி அடையறவன் ) , நல்லது கெட்டது அப்படின்னு தன்னோட கடமை ஏற்படுத்துற விளைவுலேர்ந்து தப்பிச்சிடுறான். அதாவது, சில சமயம், நாம் செய்யற செயல் எதிர்பாரா விதமா யாரைவது பாதிச்சுடும். இப்படி , பலனை எதிர்பாராம செய்யற யோகம் பழகிட்டா, நம்ம செயல்களின் நல்லது கெட்டது நம்ம பாதிக்காது! அப்படி ஒரு மன மெச்சூரிடி கிடைக்க நீ முயற்சி செய் தோழா !

கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:।
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்॥ 2.51 ॥

நம்ம முன்னோரெல்லாம் பக்தி மார்க்கத்துல ஈடுபட்டு, கடவுளிடம் சரணாகதி அடைஞ்சு , இந்த உலகத்துல தன்னோட செயல்களின் பலன்கள் எல்லாத்துலேர்ந்தும் தங்கள விடுவிச்சுக்கிட்டாங்க. அதோட , பிறப்பு இறப்புன்னு மாறி மாறி வர்ர இந்த ஜனன மரண சுழற்சியிலேர்ந்தும் தப்பிச்சுட்டாங்க. அது மூலமா துன்பமே இல்லாத ஒரு நிலையை அவங்க எல்லாம் அடைஞ்சாங்க !

 

யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி।
ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச॥ 2.52 ॥

மொதல்ல , இந்த தடுமாற்றத்த விடு நண்பா ! இந்த குழப்ப காட்ட உன் அறிவு தாண்டிடுச்சுன்னா, அப்புறம் , என்னோட ஆலோசனைய ஏத்துக்குற மனபக்குவம் உனக்கு தானா வரும் !

ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥

அப்பத்தான் வேதங்கள்ள சொல்லியிருக்குற இனிப்பான விஷயங்கள ஒரு சம நிலையான பார்வையோட பாக்குற நிலையை உன் அறிவு அடையும். அப்பத்தான், உனக்கு உன்னப் பத்தி உணர்ந்துக்குற திறன் வரும். கிட்டத்தட்ட அது தெய்வீக உணர்வுதான் ! அது ஒரு உன்னதம்னே சொல்லலாம்!

 

அர்ஜுந உவாச।
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஷவ।
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்॥ 2.54 ॥

அர்ஜுனான் கிருஷ்ணனிடம் கேட்டான்..

“கிருஷ்ணா, அப்படி உன்னதம் நிலை அடைஞ்சவனோட அறிகுறி என்ன? அவன் எப்படி இருப்பான்? அவன் எப்படி பேசுவான் ? எப்படி நடப்பான்? ”

- கீதை உரை இன்னும் வரும் ….

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>