/* ]]> */
Jul 012021
 

பகல் நேரக் குட்டித் தூக்கம் உற்சாகம் தரும்

DAY TIME NAP GIVES ENERGY

 

  • பகல் நேரக் குட்டித் தூக்கம் உற்சாகம் தரும்: உண்மைதான். ஆனால் பிற்பகலில் தூங்குவது 30 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இது வேலைகளைச் செய்வதற்கு உற்சாகம் தரும். இரவுத் தூக்கத்திற்கும் இதற்கும் பெரிய அளவு தொடர்பு கிடையாது. இரவில் தூங்க முடியாதவர்கள் பகலில் குட்டித் தூக்கம் போட்டு, அதை ஈடு கட்டிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் பகல் நேரத் தூக்கம் இரவு நேரத் தூக்கத்திற்கான பலன்களை நிச்சயம் தராது .
  •  அதிக நேரம் தூங்குவது ஆரோக்கியம் : நேரத்தைவிட தூக்கத்தின் தரம்தான் முக்கியம் அயர்ந்து தூங்கினால் 6 அல்லது 7 மணி நேரத் தூக்கம் போதுமானது . இருட்டான அறையில் எவ்வித இடையூறுமின்றி தூங்கினாலே தூகத்தின் தரம் நன்றாக இருக்கும். இடையில் எழுவது ஒளி, ஒலி தொந்தரவுகள் தூக்கத்தைக் கெடுக்கும்.
  •  தூக்கத்தின்போது மூளை இயங்காது: உண்மையல்ல. மூளை செயல்படாதபோது எப்படி கனவுகளைக் காண முடியும்? தூங்கும்போது உடலின் பிற உறுப்புகள் ஓய்வெடுக்கின்றன. மூளை ஒருவர் விழித்திருக்கும்போது செயல்படுவது போலவே தூங்கும்போதும் செயல்படுகிறது. ஆனால் அதன் செயல்பாட்டில் மாறுதல்கள் இருக்கும். ஒருவர் நன்றாகத் தூங்கி எழும்போதுதான் சிக்கலான முடிவுகள், நினைவுகள், பல்வேறு கோணங்களில் யோசிக்கும் திறன் ஆகியவை மேம்பாடு அடைகின்றன.
  • தூக்கம் வருவதற்காக மது அருந்தலாம்: உண்மையல்ல. முதலில் மது அருந்துவதே உடல் நலத்துக்கு கேடானது. அது தூக்கத்துக்கு உதவும் என்பது மனிதர்கள் உருவாக்கிக்கொண்ட பொய்யான கற்பனை. மதுவினால் குறட்டை விடுவது , தூங்கும்போது மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் மது அருந்தும் பழக்கம் இயல்பான தூங்கும் பழக்கத்தின் தரத்தைப் பாதிக்கும்.

********************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>