/* ]]> */
Sep 222017
 

நோய்த் தொற்று- எவ்விதம் தடுப்பது?

INFECTIOUS LUNGS DISEASES

  • நாம் அன்றாடம் சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நம்மை அச்சுறுத்தும் பலவித நோய்த் தொற்றுகளிலிருந்து தப்பிக்கலாம்.
  • நுரையீரல் தொற்றுகளிலிருந்து விடுபடுவதற்கு, வைட்டமின்கள் , மினரல், புரதம், பைட்டோ சத்துகள், ஆண்டி ஆக்ஸிடென்டுகள் போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடவேண்டும்.
  •  மழை, குளிர் காலங்களில் நுரையீரல்களை அதிகம் தாக்கக் கூடும் என்பதால், அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். உதாரணமாக , இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், குளிர்காலத்தில் ஏற்படும் னுரையீரல் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.
  • கேரட் மற்றும் கொத்தமல்லியை சம அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு இஞ்சித் துண்டைச் சேர்த்து, அரைத்து ஜூஸ் போல தயாரித்துப் பருகினால், உடலின் சக்தியை அதிகரித்து, அசதியைப் போக்கும்.
  •  மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், நுரையீரல் தொற்றுகளைத் தவிர்க்கலாம். பலவித ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
  •  பட்டாணியில் புரதம், வைட்டமின் A,C, K, இரும்புச் சத்து, கால்சியம், காப்பர், பொட்டாஷியம் போன்ற நம் உடல் ஆரோக்கியத்துக்கான சத்துகள் நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் ஏறப்டும் நுரையீரல் அலர்ஜியையும், பட்டாணியில் உள்ள சத்துக்கள் போக்குகின்றன.
  •  பசலைக் கீரையில் 80 வகையான பிளேவனாய்டுகள் உள்ளன. எனவே, இந்தக் கீரையை நம் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால், புற்றுநோய், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம்.

^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>