/* ]]> */
Apr 292011
 

 

Sona

நடிகை சோனா

1. கட்சித் தலைவர் ஒருவர் அடிக்கடி சினிமா விழாக்களில் தலை காட்டுகிறார். ஆல்பம் பார்த்து தேர்வு செய்வது அண்ணாத்தேக்கு அலுத்துவிட்டதாம். அதனால்,அழகிகளை நேரில் பார்த்து தேர்வு செய்கிறாராம். எல்லோரும் போற்றும் ஜாதிக்கட்சி தலைவரும் எல்லா அழகிகளையும் போற்று போற்றென்று போற்றுகிறாராம்… தலைவரின் லேட்டஸ்ட் அரவணைப்பில்  தொங்கும் தோட்ட நடிகையும் சோன்பப்படி நடிகையும் அடக்கமாம்..

2. திருநெல்வேலி சிட்டிங் எம்.எல். ஏ.மாலை ராஜா வுக்கு இம்முறை தேர்தலில் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனாலும் திருநெல்வேலி திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டார் சங்கத்தின் செயலாளர் மணிகண்டன். தேர்தலுக்கு முதல் நாள் மணிகண்டன் சார்பில் வேட்புமனு வாபஸ் வாங்குவதாக கடிதம் வர போட்டியின்றி தலைவ்ராகியிருக்கிறார் மாலை ராஜா.

 

விக்ரம் அனுஷ்கா- தெய்வத்திருமகன்

 

3. ‘தெய்வத் திருமகன்’ படத்தை அடுத்து விக்ரம் நடிக்கப் போவது சுசீந்திரன் இயக்கத்தில். தாத்தா,பேரன் உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது கதை. தாத்தா வேடத்தில் இயக்குனர் கே.விஸ்வநாத்.பேரனாக விக்ரம் நடிக்கிறார்கள். விக்ரமுக்கு இரண்டு ஜோடிகளில் ஒருவர், ‘காவலன்’ மித்ரா. இன்னொருவர் யாரோ? இந்தமுறையாவது அமலா பாலின் பழைய கணக்கை விக்ரம் தீர்ப்பாரா?

பூர்ணா

3. கவர்ச்சி காட்டாமலேயே ஜெயித்துக் காட்டிவிடவேண்டும் என போராடித்தான் பார்த்தார் பூர்ணா. ஆனால், பலன் கிடைக்கவில்லை. இதனால், தெலுங்குப் பக்கம் போனார்.தன் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தினார்.உடனே இரண்டு படங்களில் நடிக்க வெய்ட்டான சம்பளத்துடன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

நயந்தாரா

4. ரமலத்துக்கு செட்டில்மென்ட் செய்ய பிரபு தேவா முன்வந்ததன் அடிப்படையில் ரமலத்தும் விவாகரத்துக்கு சம்மதித்தார். இருந்தாலும் சட்டப்படி ஆறு மாதம் கெடு கொடுத்தது நீதிமன்றம். ஆனால் கடைசி நேரத்தில் ரமலத் விவாகரத்துக்கு சம்மதிக்காவிட்டால், ..? என்ற சந்தேகம் பிரபு தேவாவுக்கு. அதனால்தான் ஏப்ரலில் செய்து விடுவதாகச் செய்துவிடுவதாகச் சொன்ன செட்டில்மென்டை இன்னும் செய்யவில்லையாம் பிரபுதேவா. கோர்ட் கொடுத்துள்ள கெடு முடியும் தறுவாயில் செட்டில்மென்ட் ஏற்பாடுகளைச் செய்யலாம் எனச் சொல்லி விட்டாராம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>