Jun 192019
நெய் மைசூர் பாக்- செய்வது எப்படி?
தேவை:
சலித்த கடலை மாவு, சர்க்கரை- தலா 1 தம்ளர்; நெய்- 1 ½ தம்ளர்;
செய்முறை:
நான் ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில், கடலை மாவை 5 நிமிடம் வறுத்து எடுக்கவும். ஆறியதும் 1 தம்ளர் நெய்யில், கட்டி இல்லாமல், நன்றாகக் கலந்துகொள்ளவும்.
அதே வாணலியில் சர்க்கரையை கால் தம்ளர் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் பாகு தயாரிக்கவும். கடலை மாவுக் கலவையை இதில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். மீதமுள்ள அரை தம்ளர் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.
மாவு நன்றாக வெந்து கெட்டியானதும், , நெய் தடவிய தட்டில் கொட்டி சமம் செய்து துண்டுகள் போட்டு ஆறவிடவும்.
வாயில் கரையும் நெய் மைசூர் பாக் தயார்.
^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments