/* ]]> */
Sep 022010
 


“பூவே பூச்சூடவா”வில், தமிழில் அறிமுகமாகி,ஒரு சுற்று வந்து ,அந்தக் கட்டத்தில் பள்ளி மாணவிகளாய் இருந்த எங்களுக்கெல்லாம் ஒரு ஃபாஷன் குருவாக இருந்த நதியா…..


மஞ்சள் சூரிதாரில் சின்னப் பையன்களுடன் அவர் ஆடுவதையும் பாடுவதையும் பார்க்கவே ஒரு கும்பல் கூடுமே!!! பாட்டி பத்மினியின் வீட்டில் இருக்கும் ஊஞ்சலை ஒரே ஜம்ப்பில் அவர் தாண்டிய போது நானெல்லாம் ஏதோ நானே தாண்டினார் போல புளகாங்கிதம் அடைந்ததுண்டு. களையான முகம், ஸ்லிம்மான உடல் அமைப்பு, பொருத்தமான ஆடைகள் என்று ஒரு கலக்கு கலக்கினாரே…


நதியா கம்மல், நதியா வளையல், நதியா கட் ஷூ, நதியா மாடல் மிடி,சுடி என்று…. ஃபாஷன் உலகில் சற்றே பின் தங்கியிருந்த சென்னைப் பெண்களை மாடர்ன் மங்கையராக மாற்றியதில் அவருடைய பங்கு அலாதியானது…நதியா மாடல் காஸ்டியூம்ஸ் அதிகமாக வைத்திருப்பது தான் தோழியர் மத்தியில் மவுசு உண்டாக்கும் விஷயமாக இருந்தது …அதிலும் அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாமே, ‘அழகு’ என்ற வட்டத்தை விட்டு,’ கவர்ச்சி’ என்ற எல்லைக்குள் ஒரு போதும் நுழையாதவை என்பதால், பெற்றோரும் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பே இல்லாமல் போகும்!

அப்பாவை ஒரே அடியாகப் படுத்தி, ரெங்கநாதன் தெருவையே பல முறை சுற்றி அலைய விட்டு நதியா மாடல் அலங்காரப் பொருட்கள் வாங்கியதை எல்லாம் மறக்கவே இயலாது! எங்கள் இளமையை, அந்த பதின் பருவத்தை வெகுவாக ரசிக்கச் செய்து, இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத பல நினைவுகளை அளித்திருப்பவர் நதியா என்றால்…அது நிச்சயம் மிகையில்லை!


அன்புள்ள அப்பாவில், தன் தந்தையோடு மிகுந்த நெருக்கம் பாராட்டுபவராக நடித்திருந்தார், அப்பா, மகள் உறவு என்பது, மிகுந்த பிரியத்துக்கு உரியது என்றாலும், அத்தனை தோழமை சாத்தியமா? என்ற கேள்விக்கும், அப்பா என்பவர் ஒரு மகளின் உலகில் எத்தனை பெரிய ஹீரோ வாக கருதப்படுகிறார் என்று சிலாகிக்கவும் வைத்தவர் நதியா..


அப்புறம் நதியா ராஜ்ஜியம் நடந்தது வெகு காலம் கோலிவுட்டில், அவர் போல நடிப்புத்திறனும், அழகும், மக்கள் மனதில்…ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல்,( இது முக்கியம்..இப்போதெல்லாம் அப்படி யார் இருக்கிறார்கள்?)இடம் பிடித்த நடிகையர் வெகு சிலரே…

திருமணம் செய்து கொண்டு, சில காலம் திரையை விட்டு ஒதுங்கியிருந்த நதியா,மீண்டும் எம்.குமரனில் என்ட்ரி கொடுத்த போது அவருடைய நீங்கா இளமையைப் பார்த்து ஆச்சர்யம் அடையத்தான் முடிந்தது! பளிச்சென்ற ஆடைகளும், கச்சிதமான உடல் வாகும், மிடுக்கான நடிப்புமாக கொள்ளை கொண்டார் உள்ளங்களை…

பிறகு பட்டாளத்தில் அவரைப் பார்த்த போது ‘வயதே ஆகாதோ இவருக்கு’ என்று பொறாமையாக இருந்தது…

பார்த்துக் கொண்டிருக்கும் போதே குஷ்பூ வழங்கிக் கொண்டிருந்த ஜாக்பாட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கிளம்பிவிட்டார்..அவர் அணிந்து வரும் சுடிதார்கள் ஒவ்வொன்றும் ஈஸ்தெடிக் சென்ஸ் என்றால் என்ன என்பதற்கான விளக்கம்! இந்த வருடம் நதியா சூரிதார் தான் ஹாட் சேலாக இருக்கப் போகிறது தீபாவளி சமயத்தில்…

குஷ்பூவும் தான் ஜாக்பாட்டில் கலக்கினார் என்றாலும் பூசினார் போன்ற அவருடைய உடல் வாகுக்கு அவர் அணிந்து வந்த ஆடைகள் பெண்கள் இடத்தில் சற்றே முகச்சுளிப்பை ஏற்படுத்தத்தான் செய்தது!
ஒரு விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை, அவர்கள் பெயரில் பாடல் வரிகள் எழுதப்பெற்று ஆடி, நடித்தவர்கள் இருவருமே..
“கொண்டையில் தாழம் பூ,நெஞ்சிலே வாழைப் பூ, கூடையில் என்ன பூ குஷ்பூ என்று தமிழகமே அவரைக் கொண்டாடியது என்றால்,
” நதியா நதியா நைல் நதியா” என்று தன் அழகு அலையால் தமிழ் மக்களைக் கவர்ந்தவர் நதியா!

குஷ்பூவா நதியாவா? என்ற கேள்விக்கு சந்தேகமில்லாமல் பெண்கள் வாக்குகள் நதியாவுக்கே!வாழ்த்துக்கள் நதியா….
…ஷஹி….ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>