/* ]]> */
Aug 172021
 
  • நீரிழிவு பாதிப்பால் இதய நோய்கள் வரும்:
  • நீரிழிவு பாதிப்பு
  • நீரிழிவு பாதிப்பால் இதய நோய்கள் வரும்: உண்மையல்ல. இரண்டும் வேறு வேறானவை. நீரிழிவு நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ரத்தத்தில் சர்க்கரையியக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதனால் ஒருவர் பார்வை இழப்பு சிறுநீரக நோய் மலட்டுத் தன்மை நரம்பு பாதிப்பு இதய நோய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். ரத்த நாளங்களில் ஏற்படும் சீர்கேடுகள் மாரடைப்பையும் வாதத்தையும் உருவாக்கும். முறையான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றாதவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து உயர் ரத்த ஆழுத்தம் ஏற்பட்டு, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • மார்பில் வலி ஏற்படுவதே மாரடைப்பின் முக்கிய அறிகுறி. : உண்மையல்ல. கூடுதலாகக் குமட்டல், கழுத்து கைகளில் வலி, செரிமானக் கோளாறு ஆகியவையும் அறிகுறிகளாக ஏற்படும். இந்த அறிகுறிகள் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி ஏற்படாது. பலரும் மாரடைப்பின் அறிகுறிகளை அறியாமல் இருப்பதால் நோயாளிகளை உடனே காப்பாற்ற முடியாமல் போகிறது. அறிகுறிகளை அறிந்தவுடன் அவசர சிகிச்சை அளித்தால், மாரடைப்பு ஏற்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றலாம்.
  • மாரடைப்பும் இதய செயலிழப்பும் ஒன்றுதான்: உண்மையல்ல. மாரடைப்பு ஏற்பட்டு, இதயத்தில் பாதிப்பு அதிகரித்தால், இதயத்தின் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் உருவாகும் பாதிப்பால், மாரடைப்பு ஏற்படுகிறது. இதயச் செயலிழப்புக்கு நேரடியான காரணம் இதய வால்வுகளில் ஏற்படும் பிரச்சினகளாகும், இதனால், இதயம் ரத்தத்தைப் பிற உறுப்புகளுக்கு அனுப்பி வைக்க முடியாமல் செயலிழக்கும்.
  • புகை பிடிப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவது உறுதி:   ஆனால் புகை பிடிப்பவர், அப்பழக்கத்தைக் கைவிட்டாலும்கூட  இதய நோயிலிருந்து தப்பிக்க முடியாது. புகை பிடிப்பவர் எத்தனை ஆண்டுகளுக்கு அதைத் தொடர்ந்திருந்தாலும்,  எத்தனை சிகரெட்டுகளைப் புகைத்திருந்தாலும் அதைக் கைவிட்ட நொடியிலிருந்து அவரது உடல் ஆரோக்கிய நிலைக்கு மீளத் தொடங்கும். ஆனால் நிகோடினின் அடிமைத்தன்மை காரணமாக ஏற்படும் பக்க விளைவுகளைக் கவனிப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு 50 சதவிகிதம்தான்.

*******************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>