/* ]]> */
Nov 172017
 

நீரிழிவு நோய்:

diabetic

உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும். குளுகோஸுக்கு மிகவும் அத்தியாவசியமாகும்போதுமான இன்சுலின் சுரக்காதபோது குளுகோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை.எனவே ரத்த ஓட்டத்தில் குளுகோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது.இன்டஹ் நியலிதான் ஹைப்போக்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

அறிகுறிகள்:

 • அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசித்தல், தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் களைப்பாக இருக்கும்.
 • ஆறாத புண், பிறப்புறுப்பில் இன்பெக்ஷன் இருத்தல்.
 •  உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல்.
 •  காரணமில்லாமல் எடை குறைதல்.
 • ரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு.
 • மிகக் கூடுதல் எடை
 • கால் மரத்துப் போய் உறுத்துதல்.
 •  மங்கலான பார்வை.

விளைவுகள்:

நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும்.குறிப்பாக,

 • பார்வைஅயை இழக்க நேரிடலாம் அலல்து பார்வை மங்கலாம்.
 • சிறுநீரகங்கள் சேதமடையலாம். அடைக்கடி இன்பெக்ஷன் ஏற்படலாம்.
 • காங்கரீன் என்னும் புண், பாதத்தில் பிரச்சினைகள் வரலாம்.
 •  உடலுறவில் இயலாமை ஏற்படலாம்.
 •  மூளைச் சேடஹ்மும் மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
 • நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயே கட்டுப்படுத்திவிட்டால்,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

நீரிழிவு நோயை சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில்

உணவுமுறை,

உடற்பயிற்சி

நோயின் தீவிரத்தை தவறாமல்கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல்,

இன்சுலின் பயன்படுத்துதல்.

இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்கலின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக்கொள்வதால், நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளமுடியும்.உங்களுக்கு நீரிழிவு இருந்தால், அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்துவிடாமல் இருக்கவேண்டும்.

உணவு முறை:

 •  சப்பாத்தி அலல்து கோதுமை ரொட்டி, அரிசி, கேழ்வரகு போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்களைச் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள்.
 • கொஞ்சமாகவும் நேரம் தவறாமலும் சாப்பிடுங்கள். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.
 •  கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெயைப் பயன்படுத்தவும்.
 •  சமையல் முறையை மாற்றி , வேக வைத்த, தீயில் வாட்டிய நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடவும்.
 •  கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களை நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்கவேண்டும்.
 •  சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்ரும் சாக்லேட்டுகள்போன்ற சர்கக்ரை சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும்.
 •  மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்ரும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களை குறைவாக சாப்பிடவேண்டும்.
 •  உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கானஉணவு அட்டையைத் தயார் செய்யச் சொல்லுங்கள்.அது திரும்ப ஒரே மாதிரியாக சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது.ஒருவருடைய தேவைக்கேற்பவும், விருப்பத்துக்கேற்பவும் பல மாற்று உணவுகளை நீங்கள் சேர்த்துக்கொள்ள முடியும்.

மாற்று உணவுகள்:

காய்கறிகள்:- கார்போஹைட்ரேட்ஸ், பழனக்ள், இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள், பால் மற்றும் பால் தயாரிப்புகள், தானியங்கள், எண்ணெய், கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.

உடற்பயிற்சி:

 • நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற் பயிற்சி செய்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடஹ்வுகிறது.
 • எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 •  நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
 •  உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.
 • உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துக்கொள்வது நல்லது.
 •  கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்.
 •  மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுகளில் பங்கெடுத்துக்கொள்ளவும்.
 •  காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது.
 •  இன்சுலின் ஊசி போட்டுக்கொணட உடனேயே, உடற் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
 • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானதாக இருந்தால், உடற்பயிற்சி செய்யக்கூடாது.

மாத்திரைகள்;

சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க. கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாஅக் செயல் புரிய இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.  சில மாத்திரைகள் செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுகோஸ் ரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

இன்சுலின் :

நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக்கொள்ள பரிந்துரை செய்துவிட்டால், இன்சுலின் போட்டுக்கொள்ளத் தொடங்குவது நல்லது.

தவறாமல் பரிசோதனைக்கு செல்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக்கொள்வதும் மிக முக்கியம். ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுகோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கைகள், பாதங்கள், கண்கள் பற்கள், மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக்கொள்ளவும்.

சரிவிகித உணவு தவறாத உடற்பயிற்சி மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.

^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>