நீரிழிவு நோயைக் குணப்படுத்த வழிமுறைகள்:
தினசரி உணவில் நார்ச் சத்து காய்கறிகளை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
- அதிக அளவில் உண்ணக்கூடிய காய்கறிகள்:
பூசணிக்காய், கத்தரிக்காய்,காராமணி, பாகற்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், நூல்கோல், கொத்தவரங்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, முருங்கை, கீரை வகைகள், சுண்டைக்காய், சுரைக்காய், காலிஃப்ளவர், வெண்டைக்காய், புடலங்காய், தக்காளி முள்ளங்கி, சௌ சௌ.
- சாப்பிடக்கூடாதவை:
தேன், குளுகோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு, வகைகள், பிஸ்கெட்டுகள், குளிர்பானங்கள், ஹார்லிக்ஸ்,பூஸ்ட், போன்விட்டா, காம்ப்ளான்.
- அளவோடு சாப்பிடக்கூடியவை:
அரிசி உணவு, அவல், ஓட்ஸ், சோளம், கேழ்வரகு, கோதுமை, பார்லி அரிசி, வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மக்காச் சோளம்.
- சாப்பிடக்கூடாத பழ வகைகள்:
மாம்பழம், சீத்தாப் பழம், பலாப்பழம், சப்போட்டா, வாழைப் பழம், மேலும் நுங்கு, சாக்லேட், சர்க்கரை, கரும்பு ஜூஸ், பால் கட்டி,(பனீர) பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் மற்றும் மைதா, சோள மாவு, சேமியா மற்றும் ஜவ்வரிசி போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
இன்ஸ்டண்ட் உணவுப் பொருட்களான நூடுல்ஸ், மேக்ரோனி, பாஸ்தா, போன்றவற்றைத் தவிர்க்கவும். ஊறுகாய், வற்றல், வடகம், அப்பளம், மற்றும் ரெடிமேட் உணவு வகைகளை தினசரி உனவில் குறைத்துக்கொள்ளவேண்டும்.
- கஞ்சி வகைகளை (அரிசி, கோதுமை, ஓட்ஸ்) தவிர்க்கவும்.
நெய், டால்டா, தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகிய உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். தினசரி உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். விரதமும் விருந்தும் வேண்டவே வேண்டாம்.உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்து , ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை அதிகமாக உண்பதை விட 4 அல்லது 5 முறை என்று வைத்துக்கொண்டால், சாப்பிடும் அளவு குறையும். சர்க்கரையின் அளவு ஏறாது. தினசரி உடற் பயிற்சி மேற்கொண்டால், மன அழுத்தம் குறையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். மாத்திரையின் தேவை குறையும். ரத்த ஓட்டம் சீராகும்.
இதயத்தின் செயல் திறன் அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் குறையும். நல்ல கொலஸ்ட்ரால்(HDL) அதிகரிக்கும். கெடுதல் விளைவிக்கும் கொலஸ்ட்ரால் (LDL) குறையும். எடை அதிகம் ஏறாமல் இருக்கும்.நீரிழிவு னோயை நிரந்தரமாக குணமாக்க முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். மேற்குறிப்பிட்ட முறைகளைக் கடைப்பிடித்தால், நீரிழிவின் தாக்கம் இருக்காது. சராசரி மனிதர்களைப் போல வாழ முடியும். எல்லாமே நம் கையில்தான் உள்ளது,
************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments