/* ]]> */
Aug 252020
 

நாணயங்கள்  ஏன் வட்டமாக இருக்க வேண்டும்?

SHAPE OF THE COINS

  • அந்தக் காலத்து 5 பைசா சதுரமாக இருக்கும். வேஏறு சில நாடுகளிலும் முன்பு சதுர வடிவில் நாணயங்கள் உண்டு.
  •  ஆனால் இப்போது அச்சிடப்படும் நாணயங்கள் மிகப் பெரும்பாலும் வட்ட வடிவில்தான் உள்ளன. இதற்குக் காரணம் உண்டு.
  • முன்பொரு காலத்தில் ஒரு நாணயத்தின் மதிப்பு என்பது அதில் அடங்கியுள்ள உலோகத்தின் மதிப்பாகத்தான் இருந்தது. இப்போதெல்லாம் ஒரு கிராம் தங்கக் காசு , 10 கிராம் வெள்ளிக் காசு வைக்கிறோமே அதுபோல.
  • ஆனால் திருட்டு புத்தி உள்ளவர்கள் அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தை சிறிதளவு வெட்டி எடுத்துக்கொண்டு, அப்பாவி போல் அதைப் புழக்கத்தில் விட்டு விட்டனர்.
  •  சதுர நாணயம் என்றால்தானே இப்படி. வட்ட வடிவமான நாணயம் என்றால் அதன் ஒரு மூலையில் ( வட்டத்துக்கு மூலை கிடையாது) அறுத்தெடுத்தால் பளிச்சென்று தெரிந்துவிடும்.
  • தவிர நாணயங்கள் சதுர வடிவிலோ முக்கோண வடிவிலோ இருந்தால், அவற்றின் மூலைகள் காலப்போக்கில் தேய்ந்து விடும். வட்டத்திற்கு மூலையே கிடையாது என்பதால், இந்தக் கோணத்தில் தேய்மானம் இருக்காது.
  • உலகெங்கும் உள்ள பொதுத் தொலைபேசிகளில் வட்ட வடிவமுள்ள நாணயங்களைப் போட்டுப் பேசும்படி கருவிகளை அமைத்தனர்.இதனாலும் நாணயங்கள் தொடர்ந்து வட்ட வடிவிலேயே இருந்தன.
  • வட்டமான நாணயங்கள் என்றால் எப்போதுமே சீரான விட்டத்தைக் கொண்டிருக்கும். எனவே அவற்றை எந்தத் திசையில் உள்ளே செலுத்தினாலும் கருவிகளால் அறிந்துகொள்ள முடியும்.
  •  மேலும் நாணயங்களில் சில உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வட்ட வடிவ நாணயம் என்றால் இவற்றைப் பொறிப்பது எளிது. முக்கோண அல்லது சதுர அளவு கொண்ட நாணயம் என்றால் இந்த உருவங்களை சீராகப் பொறிக்க முடியாது.
  •  ஆக நாணயங்கள் வட்ட வடிவிலேயே அச்சிடப்படுவதற்கு இப்படிப் பல அறிவியல் கோணங்கள் உள்ளன.

************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>