சென்னை மாநகர காவல்துறை டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுத்தது. தீவிரவாதிகள் பங்கேற்ககூடும் எனத் தகவல். கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் அவசர ஆலோசனைக்கூடடம் நடத்தப்பட்டது. அதில் பேராசிரியர் க. அன்பழகன்,, மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கல்ந்துகொண்டனர். காவல்துறையின் தடையை நீக்கக் கோரி , நீதித் துறையின் உதவியை நாடுவதென்று முடிவெடுக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் வில்சன் அவசர வழக்கை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி பால் வசந்த குமார் விசாரிக்கிறார். மதியம் 2.15க்கு விசாரணை தொடங்கும் எனத் தகவல் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதும், தி.மு.க. தொண்டர்கள் மாநாட்டுப் பந்தலில் திரளாகக் குவிந்தவண்ணம் உள்ளனர். நீதிமன்றம் இறுதிமுடிவு எடுக்குமுன்பே போலீஸார் மாநாட்டுப் பந்தலின் பதாதைகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் சர்ச்சை. எழுந்துள்ளது
குடியரசுத் துணைத்தலைவராக மாண்புமிகு அமீத் அன்சாரி அவர்கள் இன்று பதவி ஏற்றார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். . பதவியேற்கும் விழாவில் பிரதமர், சோனியா காந்தி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றறனர். இரண்டாவது முறையாக ஹமீத் அன்சாரி குடியரசுத் துணைத் த்லைவராக பதவியேற்கிறார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பந்தமாக நடந்து வரும் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதியான அபு ஜிண்டால் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்ப்போவதாக தகவல். இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த விசாரணை நடக்க உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்க இந்திய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மின் உலைகளில் யுரேனியம் என்னும் எரிசக்தி நிரப்பப்பட உள்ளது. போராட்டக்காரர்களால் ஆபத்து நேரலாம் என்பதால், அணுமின் நிலையத்தைச்சுற்றி 7 கி.மீ. தூரத்திற்கு 10 நாட்களுக்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட தீவிரமாகி வருகிறார்கள் இன்று பிற்பகலில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு திரும்ப வரும்படி செய்தி அனுப்பப்பட்டுள்ளது. . கூடங்குளம் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த ஆணை, நீதிமன்ற அவமதிப்பாகும் என போராட்டக்காரர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலையில் ஒகேனக்கலுக்கு வந்து சேர்ந்தது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
அனுமதியின்றி விளையாட்டரங்கம் அமைக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமாக ஜேப்பியார், அவரது மருமகன் உள்ளிட்ட சிலர் வே லூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியின் மற்ற பாகங்களைச் சேர்ந்த கட்டடங்களின் பாதுகாப்புத்தன்மையும் ஆராயப்படுகின்றது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




Please comment with your real name using good manners.