/* ]]> */
Oct 062011
 

கட்டங்களும் எண்களுமான
நாட்காட்டியில் ஊருகின்ற
வாழ்வியலின் நகர்வுகள்!
கட்டத்தினில் குறிப்பிட்ட
எண்களும் நிறங்களும்
நாளின் தன்மை கூறாது.

ஒரு ஏணியில் ஏறுவதோ
பாம்புகடியில் சிக்குவதோ
நொடிகளின் விளையாட்டு!
ஏணியின் படிகட்டுகளும்
பாம்பின் நீண்ட உடலும்
மாதக்கணக்கில் நீளலாம்!
நொடிகள் யுகங்களாகும்
யுகங்கள் நொடிகளாகும்
பரமபத விளையாட்டில்
பகடையாய் மாறுகிறோம்!

ஏணியிலிருந்து விழவும்
பாம்பு தலை மிதிக்கவும்
வித்தை தெரிந்தவனுக்கு
விளையாட்டில் வெற்றி!
ஏதும் கிட்டாதவனுக்கும்
அடுத்த கட்டம் உண்டு!
ஆனால்,
ஏணியை பாம்பெனவும்
பாம்பை ஏணியெனவும்
விதிமுறையை மாற்றி
விளையாடுபவர்களுக்கோ
கட்டமே சிறையாகிவிடும்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>