நல்லெண்ணெய்- நல்ல எண்ணெய்:
வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்கு கொடு என்பது பழமொழி. நம் சமையலில் எண்ணெய் முக்கிய இடத்தை வகிக்கிறது. மாதம் நபர் ஒன்றுக்கு அரை லிட்டர் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரே வகையான் எண்ணெய் வேண்டாம்.
எல்லா வகையான எண்ணெயும் பயன்படுத்தணும். சிலர் ஃப்ரை பண்ண சூரியகாந்தி எண்ணெயும், மீன் குழம்பு . முட்டை பொறிக்க ரசம் வைக்க நல்லெண்ணெய் , சாம்பாருக்கு ஆலிவ் ஆயில், அவியலுக்கு தேங்காய் எண்ணெய் இப்படி மாற்றி மாற்றி பயன்படுத்தி வருகிறார்கல். மார்க்கெட்டில் விற்கப்படும் நல்ல எண்ணெயில் கலப்படம் இருப்பதால், எந்த எண்ணெயை வாங்கி பயன்படுத்துவது என் அபலரிடம் குழப்பம் நீடிக்கிறது. இதைத் தவிர்க்க நல்ல வழி உள்ளது.
செஉமுறை:
10 கிலோ தரமான எள் நல்ல வெய்யிலில் 2 நாள் காயப் போடுங்க. ஒரு பனங்கருப்பட்டியை சேர்த்து, ஆயில் மில்லில் கொடுத்து எண்ணெய் ஆட்டினால், 5 லிட்டர் ஆயில் கிடைக்கும். இது சுத்தமான நல்ல எண்ணெய். இதைப் பயன்படுத்தினால் மிக நல்லது. ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து ஒரு துண்டு கருப்பட்டியைப் போட்டு வைத்தால், கெட்டுப் போகாமல் 6 மாதம் இருக்கும்.
அந்தக் காலத்தில் மரத்தால்;ஆன செக்கில் ஆட்டி எண்ணெய் எடுப்பாங்க. இது மிதமான உஷ்ணத்துடன் தயாராகும். இப்போது மிஷினில் அதிக சூட்டுடன் தயாராகும்.
சுத்தமான நல்லெண்ணெய்க்கு உறையும் சக்தி கிடையாது. நீங்கள் வாங்கிய நல்லெண்ணெய் உறைந்தால், அதிக பாமாயில் கலப்படம்னு அர்த்தம். இப்போது ரீஃபைன்ட் ஆயில் விளம்பரம் வருது. இதெல்;லாமே அதிகம் உஷ்ணப்படுத்தப்பட்ட எண்ணெய் ஆகும். இதுவும் நல்லதில்லைன்னு டாக்டர் கூறுகின்றனர். சுத்தமான எண்ணையே போதும். அதை ரீஃபைன்ட் செய்யவேண்டிய அவசியமில்லை.
ஆரோக்கியமான எண்ணெயை எடுத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
*********************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments