Apr 192017
நரையைத் தடுக்கும் வழிகள்:
- B12 அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளவும்.
- தைராய்டு தொல்லை உள்ளதா என மருத்துவரை அணுகி பரிசோதிக்கவும்.
- மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். கடும் மன அழுத்தம் இருந்தால், யொகா, தியானம், உடற்பயிற்சியை முறைப்படுத்துங்கள்.
- நம் முடி வேர்களின் உள் பகுதியில் குறைபாடு ஏற்படும்போது இளந்ரை உருவாக வழியாகிவிடும்.
- பரம்பரைத் தன்மை, கெமிகல் கலந்த ‘ஷாம்பு’- ‘கலரிங் போன்ற அலர்ஜிதான் அதிகப்ப்டியான் அபாதிப்பைக் கொடுத்து முடியைக் கெடுத்துவிடும்.
- புகை மதுப் பழக்கம் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. முடிக்கு மட்டுமின்றை உடலுக்கும் நல்லது.
- ஈஸ்ட் அதிகம் உள்ள ‘பிரட்’ தயிர் சேர்க்கலாம். வினிகர், பச்சைக் காய்கறிகள், முளை கட்டிய பயறு வகைகள், இரும்புச் சத்துகள் கொண்ட உணவு வகைகள், விட்டமின்-‘சி’ கீரை, கேரட், கருவேப்பிலை, பப்பாளிப் பழம், இவையெல்லாம் அவரவரின் உடல் தன்மைக்கு உட்கொள்வது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
- தினம் கொஞ்சம் கருவேப்பிலை சாப்பிடுவதைக் கட்டாயமாக்குங்கள்.
- பேரீச்சம்பழம் , முருங்கைக்கீரை போன்றவை நல்ல பலன் தரக் கூடியவை. புடலங்காய், நெல்லிக்காய், பீட்ரூட், சுண்டைக்காய், நாவல்பழம் போன்றவற்றில் ‘வைட்டமின்- ‘கே’ உள்ளதால், உணவில் சேர்த்துக்கொள்வது நலம்.
- சிவப்புநிற காய்கறிகளைச் சாப்பிடவும்.
- இளநீர் குடித்து உடல் சூட்டைத் தணிக்கலாம்.
- உடல்சூடு பித்தம் அதிகமானாலும், பெண்களுக்கு வெள்ளைப் படுதல் கூடும். இதனாலும் இளநரை உருவாகலாம்.
- காலையில் வெறும் வயிற்றில் திரிபலா பொடியை நீரில் கலந்து பருகி வருவது, இளநரைக்கு மிகவும் அருமையான அருமருந்தாகும்.
- இளநரை தொடங்கிவிட்டால், ஆரம்ப கட்டத்திலேயே பராமரிக்கத் தொடங்கிவிடுங்கள். தேங்காய் எண்ணெயை சூடாக்கி , அதில் கருவேப்பிலை போட்டு, சூடு ஆறியபின், தலை முழுவதும் தேய்த்து, மசாஜ் செய்து அலசவும். முடிக்குத் தேவையான ‘மெலனின்’ உற்பத்தியைக் கறிவேப்பிலை அதிகப்படுத்தும்.
- தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணிச் சாறைக் கலந்து தேய்க்கலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments