/* ]]> */
Aug 302014
 

நயந்தாரா பழைய காதலை மறந்து விட்டார்:

^^^thara
இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்தவர் நயந்தாரா. சமீபத்தில் ஒரு படத்தைப் பார்த்த நயந்தாரா, அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் தன் பழைய காதலை நினைவுபடுத்துவதால், கண்கலங்கியதாக செய்திகள் வெளியாயின. நயந்தாரா அதுபற்றிக் கூறுகையில், அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் என்னைக் கலங்க வைத்துவிட்டாது உண்மைதான், ஆனால், நான் பழைய காதலை நினைத்து கண் கலங்கியதாகக் கூறுவதெல்லாம் தவறு. அந்தக் கசப்பான அனுபவங்களை எப்போதோ மறந்துவிகிட்டேன். அதைத் திரும்பவும் மனதில் அசைபோட்டு என்னை வறுத்திக்கொள்ள நான் ஒருபோதும் நினைத்ததில்லை என கூறியுள்ளார்.
ஹன்சிகாவின் ஐஸ் குளியல்:

HANSIKA
அமெரிக்காவில் உள்ள ஏ.எல்.எஸ். நிறுவனம் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிகக்ப்பட்டவர்களின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் வகையில் , ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. இதில் சமூக ஆர்வம் உடைய பாலிவுட்டைச் சேர்ந்த மந்திரா பேடி, சோனாக்ஷி சின்ஹா சன்னி லியோன் உள்ளிட்ட பல நடிகைகள் ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றி பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளனர். இந்தப் பட்டியலில் கோலிவுட் நடிகை ஹன்சிகாவும் கலந்துகொண்டு, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து சமூக ஆர்வம் கொண்ட சில நடிகர்-நடிகைகளும் இந்த ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
த்ரிஷாவின் முடிவில் மாற்றம்:

THRISHA
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவர் எந்தப் படத்திலும் அதிரடி க்ளாமரை வெளிப்படுத்தி நடித்ததில்லை. ஆனால் சமீப காலமாக சமந்தா உள்ளிட்ட நடிகைகளே எல்லைக் கோட்டைத் தாண்டி வருவதால், த்ரிஷாவும் கவர்ச்சிக் கதவுகளைத் திறந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார். கன்னடத்தில் புனித ராஜ்குமாருடன் நடித்து வரும் ஒரு படத்தில் தன் கவர்ச்சிக் கொடியைப் பறக்கவிட்டுள்ள த்ரிஷா, தமிழில் ஒப்பந்தமாகும் புதிய படங்களிலும் கவர்ச்சி சேவையைத் தொடரப் போகிறாராம்.
மணிரத்னம் படத்தில் அலியா பட்:

ALIYA BATA
கடல் படத்தையடுத்து, மகேஷ் பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை இணைத்து ஒரு மெகா படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார்,மணிரத்னம் . சம்பள விஷயத்தில் மகேஷ் பாபு உடன்படாததால், அந்தத் திட்டத்தைத் தள்ளிவைத்துவிட்டார். அதற்குப் பதிலாக , மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை , அடுத்த படத்தின் நாயகனாக்கத் திட்டமிட்டுள்ள மணிரத்னம், இந்தி நடிகை அலியா பட்டை அந்தப் படத்தின் ஹீரோயினாக நடிக்க வைக்கிறார். ஏற்கெனவே, அனேகன் படத்திலேயே அலியா பட்டை தமிழுக்குக் கொண்டுவரமுயற்சி எடுத்தார் தனுஷ். கால்ஷீட் பிரச்சினையால், அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்தப் படத்தில் எப்படியாவது கால்ஷீட் கொடுத்து நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அலியா பட்டின் மனம் விரும்பும் டைரக்டர்களில் மணி ரத்னமும் ஒருவராம்.
சமந்தாவின் திடீர் கெடுபிடி:

SAMANTHA
திடீரென்று சமந்தா தன் கவர்ச்சி செக் போஸ்டைத் தாண்டிவிட்டதால், ஆந்திராவின் கமர்ஷியல் பட அதிபர்கள் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். சந்தாவின் நீச்சல் உடை கலாச்சாரத்துக்கு அவரது அபிமானிகளும் ரசிகர்களும் இணையதளம் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘ இப்படி தொடர்ந்து நடித்தால், இன்னும் ஓரிரு படங்களோடு மார்க்கெட் காலியாகிவிடும்’ என்றும் அவரை அச்சுறுத்துகின்றனர். அதனல், புதிதாக ஒப்பந்தமாகும் படங்களில் க்ளாமராக நடிகக் மாட்டேன் என்று திடீர் பல்டி அடித்துள்ளார், சமந்தா. இதனால் தமிழ்ப் படங்களில் க்ளாமராக நடித்த சமந்தா, தெலுங்கில் நடிக்க மறுத்து, ஆந்திர ரசிகர்களுக்கு துரோகம் செய்கிறார் என அங்குள்ளவர்கள் பொருமத் துவங்கியுள்ளனர்.
வதந்தியால் டென்ஷனாகும் அனுஷ்கா:

ANUSHKA
விராட் கோலியுடனான காதல், அனுஷ்காவின் திரையுலக வாழ்க்ககைக்கு உலை வைத்துவிடும் போலிருக்கிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி , டெஸ்ட் போட்டிகளில் மண்ணைக் கவ்வியதற்கு அனுஷ்காவும் ஒரு காரணம் என பாலிவுட்டில் வதந்தியைப் பரப்பிவிட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே அனுஷ்காவுடன் ஊர் சுற்றியதால்,தான், விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்ற தகவலும் பரவியது. இதையடுத்து ‘கோலிக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது அனுஷ்கா படங்களில் நடிப்பதில் இருந்து படிப்படியாக விலகப் போகிறர் ‘ என சக நடிகைகளே வதந்தியைப் பரப்ப, படு டென்ஷனாகிவிட்டார் அனுஷ்கா. ‘ கோலியும் நானும் நண்பர்கள்தான், அதற்காக அவரை திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை’ என தானாகவே ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார்.
^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>